MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காலைல வாக்கிங் போறது முக்கியமில்ல.. இந்த '3' தவறுகளை பண்ணாம இருக்கனும்!! 

காலைல வாக்கிங் போறது முக்கியமில்ல.. இந்த '3' தவறுகளை பண்ணாம இருக்கனும்!! 

Morning Walk Routine : காலையில் நடைபயிற்சி சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் என்னென்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 31 2024, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Benefits of Walking in Tamil

Benefits of Walking in Tamil

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் மருத்துவ செலவுகள் மாத வருமானத்தை விட அதிகம். சரியான உணவு பழக்கம், போதிய உறக்கம் போன்றவை இல்லாமல் இளைய தலைமுறையினர் கூட உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எந்த செலவும் இல்லாத ஒரே பயிற்சி நடைபயிற்சி தான். நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொள்ள வேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Post-walk habits in tamil

Post-walk habits in tamil

நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ காலை நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் காலையில் நடைபயிற்சியை முடித்ததும் நாம் செய்யும் சில தவறுகள் அதற்கான பலனை பெற முடியாமல் போவதற்கு காரணமாகி விடுகிறது. காலையில் வாக்கிங் செய்த பின்னர் எந்தெந்த விஷயங்களை செய்வதன் மூலம் முழு பலன்களை அனுபவிக்க முடியும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் காலையில் சுறுசுறுப்பாக நடைபயிற்சி மேற்கொண்டால் உங்களுடைய உடல் வெப்பமாக இருக்கும். நடைபயிற்சிக்கு பின் வீட்டிற்கு போய் குளிப்பது உடலை குளிரச் செய்ய உதவும். உடலை புத்துணர்வாக உணர செய்ய, உடல் வெப்பத்தை தணிக்க குளிப்பது நல்ல தீர்வாக இருக்கும். வாக்கிங் சென்று வந்த பின்னர் ஏசியில் அமரக்கூடாது. மின்விசிறியை மிதமாக வைத்து கொஞ்சம் காற்று வாங்கலாம். இப்படி சற்று இளைப்பாறினால் உங்களுடைய இதயத்துடிப்பை சீராக கொண்டுவர உதவும். 

இதையும் படிங்க:   எடை குறைய '8' வடிவ வாக்கிங்.. எத்தனை நிமிஷம் நடந்தால் பலன் கிடைக்கும்?

35
Morning walk routine in tamil

Morning walk routine in tamil

நீரேற்றமாக இருங்கள்! 

நீங்கள் நடை பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பிய பின்னர் எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்தீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது நீங்கள் நடந்த வேகம், தூரம் ஆகியவற்றை பொறுத்து அது மாறுபடும். உங்களுடைய பிட்னஸ் ட்ராக்கரில் எவ்வளவு கலோரிகளை எரித்துள்ளீர்கள் என பார்க்கவேண்டும். கடினமாக நீங்கள் பயிற்சி எடுத்திருந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். மிதமான உடற்பயிற்சியை செய்திருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஏனென்றால் நடக்கும்போது வியர்வை வெளியேறி நீரிழப்பு ஏற்படும். இதைத் தடுக்க நடைபயிற்சிக்கு பின் தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இளநீர் அருந்தலாம். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் வகையில் ஏதேனும் பழச்சாறு குடிக்கலாம். இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் உங்களை நீரற்றமாக வைத்திருப்பதோடு மட்டுமின்றி சருமத்தையும் பராமரிக்க உதவும். இதில் காணப்படும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றன.
  

45
Walking benefits in tamil

Walking benefits in tamil

சாதாரண நீரா, வெந்நீரா?

நடைபயிற்சி முடித்து வீட்டிற்கு வந்ததும் வெந்நீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் உடற்பயிற்சிக்கு பின் குளிர்ந்த நீரை குடித்தால்  தசைகளில் விறைப்புத்தன்மை வர வாய்ப்புள்ளது. வெந்நீர் உங்களுடைய தசைகளை தளர்வடைய செய்கிறது. வெந்நீர் அருந்திய 25 நிமிடங்களுக்குள்ளாக ஏதேனும் பழங்களை சாப்பிடலாம். நடைபயிற்சியால் உங்களுடைய உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். இதனால் உடலுக்கு மீண்டும் ஆற்றல் தேவைப்படும். இதற்கான ஊட்டச்சத்துக்களை பெற பழங்கள் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. இது தவிர புரோட்டீன் ஷேக் அருந்தலாம். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். 

இதையும் படிங்க:   ஓவர் வாக்கிங் உடம்புக்கு நல்லதல்ல.. பொதுவா நடைபயிற்சியில்  பண்ற '3' தவறுகள்!!

55
Post-walk stretching in tamil

Post-walk stretching in tamil

கண்டிப்பாக செய்ய வேண்டியது: 

காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதை பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அதனை தொடர்ந்து செய்யும்போது மட்டுமே முழு பலன்களை காண முடியும். எந்த உடற்பயிற்சியுமே குறுகிய காலத்தில் அதனுடைய நேர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தாது. நீண்ட காலம் செய்யும்போதுதான் அதனுடைய பலன்களை அனுபவிக்க முடியும். உடற்பயிற்சி செய்யும் போது அதிகப்படியான நீர் உடலில் இருந்து வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே நாள் முழுக்க தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.  உடலை நீரேற்றுமாக வைத்திருக்க வெள்ளரிக்காய், வெங்காயம், சுரைக்காய், வாழைப்பழம் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved