MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சமையலுக்கு இந்த பூக்கள் பயன்படுத்தலாம்...அது என்ன பூக்கள்? உங்களுக்கு தெரியுமா?

சமையலுக்கு இந்த பூக்கள் பயன்படுத்தலாம்...அது என்ன பூக்கள்? உங்களுக்கு தெரியுமா?

பூக்களை நாம் அலங்காரத்திற்காக மட்டுமின்றி, கடவுளை வழிபடவும் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் சில பூக்கள் சமையலுக்கும் பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது என்னென்ன பூக்கள் என்று இக்கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 12 2023, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பூக்கள் வீடுகளில், வழிபாட்டு சடங்குகள் மற்றும் அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால்  பல பூக்கள் சுவையான உணவுகள், பானங்கள் மற்றும் இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இன்றும் பலர் பல பூக்களிலிருந்து தங்களுக்கு பிடித்தமான முறையில் சமைத்து சாப்பிடுகின்றனர். இப்பதிவில் நாம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சில பூக்களைப் பற்றி பார்க்கலாம்.

26

ரோஜாப் பூக்கள்:
கடவுளின் அலங்காரம் முதல் சமையலறை வரை ரோஜாப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேநீர் மற்றும் பிற வகை பானங்கள் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 

36

வாழைப்பூ:
தென்னிந்தியாவில் வாழைப்பூவில் இருந்து பல வகையான சமையல் வகைகள் செய்யப்படுகின்றன. வாழைப்பழம் வளரும் முன்பே வாழைப்பூக்கள் பூத்து விடும். வாழை மரம் ஒரே ஒரு பூவை மட்டுமே தாங்குகிறது. இது முன்கூட்டியே பறிக்கப்பட்டால் வளராது. வாழைப்பூவில் நாம் வாழைப்பூ சிப்ஸ், வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ பொரியல் போன்ற உணவுகளை நாம் சாப்பிட்டு இருக்கிறோ

46

செம்பருத்தி மலர்:
ஆரோக்கியத்திற்காக, பலர் செம்பருத்தி பூக்களை மென்று சாப்பிடும் பழக்கம் உண்டு. அத்துடன் மூலிகை தேநீர் அதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது அதில் செம்பருத்திப் பூக்களை போட்டு 5-7 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டவும். பின் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

56

தாமரை மலர்:
தாமரை மலர் கடவுளை வழிபடுவதற்கும் மட்டும் பயன்படுத்தாமல், அதிலிருந்து சுவையான சிரப்பு  தயாரிக்க பயன்படுகிறது. தாமரை மலரில் இருந்து சிரப் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, பூவை அதில் போடவும். 2 மணி நேரம் கழித்து அதை வடிகட்டவும். பின் வடிகட்டி அந்நீரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அவற்றில்  சுவைக்கு தேன் கலந்து குடிக்கலாம்.

இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. மீறி செய்தால் சோலி முடிஞ்து.. உஷாரா இருங்க!!

66

முருங்கைக்காய்: 

முருங்கை பூவில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதைச் செய்ய, பூவை சுத்தமான தண்ணீரில் கழுவி, 4-5 விசில்களில் வேகவைத்து தண்ணீரை பிரிக்கவும். இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயத்தில் தக்காளி மற்றும் உலர்ந்த மசாலாவை சேர்த்து, அனைத்தையும் நன்றாக வதக்கவும். மசாலாவில் கொதிக்க வைத்த பூ நீரை பிழிந்து எடுக்கவும். எல்லாவற்றையும் நன்றாக மசித்த பிறகு, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். முருங்கைப் பூ கறி தயார், ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved