- Home
- Lifestyle
- Double-Leaf Doors: அந்தக் காலத்து வீடுகள்ல ஏன் ரெண்டு கதவு வெச்சாங்க தெரியுமா? ரகசியம் இதுதான்!
Double-Leaf Doors: அந்தக் காலத்து வீடுகள்ல ஏன் ரெண்டு கதவு வெச்சாங்க தெரியுமா? ரகசியம் இதுதான்!
முந்தைய காலங்களில் தலைவாசலுக்கு ஏன் இரண்டு கதவுகள் (Double-Leaf Doors) வெச்சாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா? அதுக்குப் பின்னால இருக்கும் ரகசியத்தை இங்கே பார்க்கலாம்.
14

Image Credit : gemini ai
வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம்
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டுடைய தலைவாசல் மனுஷங்க வர்றதுக்கு மட்டுமல்ல, வீட்டுக்குள்ள லட்சுமி தேவியும், நேர்மறை ஆற்றலும் (Positive Energy) வர்றதுக்கான வழி. ரெண்டு கதவுகளையும் திறக்கும்போது, அது ரெண்டு பக்கமும் சமமா திறந்து, எந்தத் தடையும் இல்லாம நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள்ள வரவழைக்குதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அதுமட்டுமில்லாம, இந்த கதவுகளைத் திறக்கும்போது எந்த சத்தமும் வரக்கூடாது, அது வீட்டுக்கு நல்லதுன்னு வாஸ்து சொல்லுது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
24
Image Credit : AI image
சிறந்த காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் (Ventilation)
பழைய காலத்துல வீடுகள்ல ஏசி, கூலர் எல்லாம் கிடையாது. இயற்கையான காற்று, வெளிச்சத்தைதான் நம்பி இருந்தாங்க. ரெண்டு கதவுகளையும் முழுசா திறக்கும்போது, வெளியில இருந்து சுத்தமான காத்தும், சூரிய வெளிச்சமும் தாராளமா வீட்டுக்குள்ள வரும். இது வீட்டுச் சூழலை இதமா வெச்சுக்கிறது மட்டுமில்லாம, ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லது.
34
Image Credit : Pinterest
பாதுகாப்பு மற்றும் பலம்
அந்தக் காலத்துல வீட்டு கதவுகளை ரொம்ப தடிமனான, உறுதியான மரத்துல (தேக்கு அல்லது வேப்ப மரம்) செய்வாங்க. ஒரே கதவு அவ்வளவு பெரிய அளவுல இருந்தா, அதைத் தூக்குறதும், திறக்குறதும் ரொம்ப கஷ்டம். அதையே ரெண்டு கதவுகளா பிரிக்கும்போது, எடை சமமா பிரிஞ்சு, கதவுகள் நீண்ட நாளைக்கு உழைக்கும். அதேபோல, திருடர்கள் அல்லது எதிரிகள் தாக்கும்போது, ரெண்டு கதவுகளுக்கும் உள்ள போடுற தாழ்ப்பாள் ரொம்ப வலுவான பாதுகாப்பைக் கொடுக்கும்.
44
Image Credit : Chat gpt
சமூக மற்றும் கலாச்சார காரணங்கள்
முன்னாடி எல்லாம் வீடுகள்ல விசேஷம், பண்டிகை நடக்கும்போது நிறைய பேர் வருவாங்க. பெரிய பொருட்கள் அல்லது தானிய மூட்டைகளை உள்ள கொண்டு வரும்போது, ரெண்டு கதவுகளையும் திறந்தா இடம் தாராளமா கிடைக்கும். சாதாரண நாட்கள்ல ஒரே ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சு பிரைவசியை (Privacy) பாதுகாப்பாங்க. இப்படி நம்ம முன்னோர்கள் செஞ்ச ஒவ்வொரு விஷயத்துலயும் ஒரு அர்த்தம் இருக்கு. இந்த இரட்டைக் கதவுகளுக்குப் பின்னால இருக்கிற அறிவியல் மற்றும் வாஸ்து காரணங்கள், இந்தியாவின் அற்புதமான வாழ்க்கை முறைக்கு ஒரு சாட்சி.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

