வாஸ்துபடி வீட்டின் தலைவாசல் கதவு 'இப்படி' இருக்கனும்!! மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் தலைவாசல் கதவு குறித்து சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மேலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

Vastu Tips For Main Door To Attract Wealth And Prosperity : பொதுவாக எல்லோருமே வீட்டில் மகிழ்ச்சி செழிப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஒரு நபர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பிறகு வீடு கட்டுகிறார். எனவே, அந்த வீட்டில் அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திருக்க பல பரிகாரங்கள் மற்றும் விதிகள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்டும்போது சில விதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏற்படும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வீட்டின் பிரதான கதவு தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டின் பிரதான கதவு:
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் பிரதான கதவு ரொம்பவே முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வழியாக தான் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது. மேலும் இதை வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் ஒருபோதும் நுழையாது. எனவே வீட்டின் பிரதான கதவை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: 1 ரூபாய் செலவழிக்காமல் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்க சிம்பிள் டிப்ஸ்!!
பிரதான கதவு திசை:
வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள திசைகள் இப்படி வீடு கட்டினாலோ அல்லது வீட்டில் பொருட்களை வைத்தாலோ உங்களது வாழ்க்கையிலும், வீட்டிலும் செழிப்பு அதிகரிக்கும் மற்றும் அமைதி நிலவும் என்று சொல்லப்படுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது வீட்டின் பிரதான கதவு வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். இந்த திசை நல்லதாக கருதப்படுகிறது. மேலும் இந்த திசையில் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மற்றும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். முக்கியமாக வீட்டில் மகிழ்ச்சியான சூழல் எப்போதுமே நிலவும்.
எந்த திசையில் பிரதான கதவு வைக்க கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது வீட்டின் பிரதான கதவை ஒருபோதும் தெற்கு, வட மேற்கு மற்றும் தென்மேற்கு கிழக்கில் வைக்கவே கூடாது. இந்த திசையில் கதவ வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் வாஸ்து தோஷங்கள் ஏற்படும் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் அடுதடுத்து அடியா? பிரச்சனைகள் நீங்கி பிரகாசமாக இந்த '1' பரிகாரம் போதும்!
பிரதான கதவு தொடர்பான பிற வாஸ்து குறிப்புகள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் பிரதான கதவு பெரியதாக தான் இருக்க வேண்டும். இதனால் வீட்டிற்குள் வெளிச்சம் நன்றாக வரும். மேலும் வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். முக்கியமாக கதவில் எந்த விதமான அழுக்கும் இருக்கவே கூடாது. மேலும் வீட்டின் பிரதான நுழைவாயில் ஒருபோதும் இருட்டாகவே இருக்கக் கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.