MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • AC Tonnage Meaning: ஏசி வாங்குறீங்களா? அப்போ 'டன்'னா என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. இல்லைனா கரண்ட் பில்லு ஏகிறும்!

AC Tonnage Meaning: ஏசி வாங்குறீங்களா? அப்போ 'டன்'னா என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. இல்லைனா கரண்ட் பில்லு ஏகிறும்!

Electricity Bill: ஏசி வாங்க கடைக்குச் சென்றதும் விற்பனையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு 1 டன் வேணுமா, 1.5 டன் வேணுமா அல்லது 2 டன் வேணுமா? என்பதுதான். நம்மில் பலரும் இந்த 'டன்' என்பதை ஏசியின் எடை என்று தவறாக நினைத்துக் கொள்கிறோம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 24 2026, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஏசி வாங்க ஐடியா இருக்கா?
Image Credit : pinterest

ஏசி வாங்க ஐடியா இருக்கா?

கோடை காலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது ஏசி தான். ஏசி வாங்க கடைக்குச் சென்றதும் விற்பனையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு 1 டன் வேணுமா, 1.5 டன் வேணுமா அல்லது 2 டன் வேணுமா? என்பதுதான். நம்மில் பலரும் இந்த 'டன்' என்பதை ஏசியின் எடை என்று தவறாக நினைத்துக் கொள்கிறோம். இந்த அறியாமையால் தவறான ஏசியை வாங்கிவிட்டு, "கூலிங் பத்தல", "கரண்ட் பில் எகிறிடுச்சு" என்று புலம்புபவர்கள் ஏராளம். ஏசியில் 'டன்' என்றால் உண்மையில் என்ன? உங்கள் வீட்டுக்கு எந்த ஏசி சரியாக இருக்கும்? எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஏசியில் 'டன்' என்றால் என்ன அர்த்தம்?
Image Credit : Getty

ஏசியில் 'டன்' என்றால் என்ன அர்த்தம்?

ஏர் கண்டிஷனரின் எடைக்கும் 'டன்' என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எளிமையாகச் சொன்னால், 'டன்' என்பது ஏசியின் குளிர்விக்கும் திறனைக் குறிக்கும் அலகு. ஒரு ஏசி ஒரு மணி நேரத்தில் உங்கள் அறையிலிருந்து எவ்வளவு வெப்பத்தை வெளியேற்றுகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் டன் கணக்கிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 12,000 BTU (British Thermal Unit) வெப்பத்தை அறையிலிருந்து வெளியேற்றும் திறன் கொண்டது. டன் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஏசியின் கூலிங் திறனும் அதிகரிக்கும்.

Fridge: பச்சைப் பாலை வாங்கியதும் பிரிட்ஜில் வைக்கிறீர்களா? 200 நோய்களை கொண்டு வரும் ஆபத்து.!

Related Articles

Related image1
Pressure Cooker Mistakes: தப்பி தவறிகூட இந்த உணவுகளை குக்கரில் சமைக்காதீங்க...!
Related image2
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
35
உங்கள் அறைக்கு எந்த 'டன்' ஏசி கச்சிதமாக இருக்கும்
Image Credit : Asianet News

உங்கள் அறைக்கு எந்த 'டன்' ஏசி கச்சிதமாக இருக்கும்

உங்கள் அறையின் சதுர அடி பரப்பளவைப் பொறுத்தே ஏசியின் டன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 100 முதல் 120 சதுர அடிக்குள் 1 டன் ஏசி சிறிய பெட்ரூம், ஸ்டடி ரூம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறைவான அறைகள்.

120 முதல் 180 சதுர அடிக்கு 1.5 டன் ஏசி சரியாக இருக்கும். நடுத்தர அளவு பெட்ரூம் மற்றும் லிவிங் ரூம் (இந்தியாவில் இதுவே அதிகம் விற்பனையாகிறது).

180 முதல் 250 சதுர அடிக்கு 2 டன் ஏசி சரியாக இருக்கும். பெரிய ஹால், அதிக ஜன்னல்கள் கொண்ட அறைகள் மற்றும் நாள் முழுவதும் நேரடியாக வெயில் படும் இடங்கள். ஆனால் மின் கட்டணம் கொஞ்சம் அதிகமாக வரும்.

45
தவறான டன் ஏசி வாங்கினால் என்ன நடக்கும்?
Image Credit : Gemini AI

தவறான டன் ஏசி வாங்கினால் என்ன நடக்கும்?

பணத்தை மிச்சப்படுத்த நினைத்து பெரிய அறைக்குக் குறைவான டன் ஏசி வாங்கினால், அறையைக் குளிர்விக்க ஏசி நீண்ட நேரம் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் கூலிங்கும் கிடைக்காது, கம்பிரஸர் தொடர்ந்து ஓடுவதால் கரண்ட் பில்லும் அதிகமாக வரும். தேவைக்கு அதிகமான டன் உள்ள ஏசியை வாங்கினால், ஆரம்பக்கட்ட விலை அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, அறையின் ஈரப்பதத்தை அது சமமற்றதாக மாற்றிவிடக்கூடும்.

55
சரியான ஏசியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Image Credit : Asianet News

சரியான ஏசியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

அடுத்த முறை நீங்கள் ஏசி வாங்கச் செல்லும்போது, வெறும் பிராண்ட் மற்றும் விலையை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் அறையின் அளவு எவ்வளவு? அறையில் நேரடியாக வெயில் படுகிறதா? அந்த அறையில் பொதுவாக எத்தனை பேர் இருப்பார்கள்? ஆகியவற்றை கணக்கிட்டுச் சரியான டன்னில் ஏசி வாங்குங்கள். இது உங்களுக்குச் சிறந்த குளிர்ச்சியைத் தருவதோடு, கரண்ட் பில்லையும் கணிசமாகக் குறைத்து, ஏசியின் ஆயுளையும் நீட்டிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
வாழ்க்கை முறை
ஏசி பராமரிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Banana: காலையில் வாழைப்பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? இந்த 5 பலன்கள் தெரியுமா?
Recommended image2
Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
Recommended image3
Home Decor: வீட்டை இயற்கையாக அழகுபடுத்த 5 எளிய வழிகள்: சூழல் நட்பு இல்ல அலங்கார டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Pressure Cooker Mistakes: தப்பி தவறிகூட இந்த உணவுகளை குக்கரில் சமைக்காதீங்க...!
Recommended image2
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved