- Home
- Lifestyle
- Garlic Peels Benefits : இந்த ரகசியம் தெரிஞ்சா பூண்டு தோலை தூக்கி போட மாட்டீங்க.. பலர் அறியா நன்மைகள்!
Garlic Peels Benefits : இந்த ரகசியம் தெரிஞ்சா பூண்டு தோலை தூக்கி போட மாட்டீங்க.. பலர் அறியா நன்மைகள்!
குப்பையில் போடும் பூண்டின் தோல் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

Garlic Peels Benefits
பூண்டு நாம் சமைக்கும் உணவிற்கு நல்ல சுவையை மட்டும் தருவதல்லாமல், ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. பொதுவாக சமையலுக்கு பூண்டை பயன்படுத்தும் போது அதன் தோலை நீக்கிவிடுவோம். ஆனால் பூண்டு பல்லில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ, அதை அளவில் தான் அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
Garlic Peels Health Benefits
ஆமாங்க, பூண்டின் தோளில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைப்பது முதல் முகப்பொலிவு மற்றும் முடி அடர்த்தியாக வளர்வதற்கு வரை பயன்படுத்தப்படுகின்றன. எனவே இனிமேல் பூண்டின் தோலை குப்பையில் போடாமல், அவற்றை உணவில் முடிந்த அளவிற்கு சேர்க்க முயற்சி செய்யுங்கள். அதன் போல பல ஆரோக்கிய நன்மைகளை பெறுவீர்கள். சரி இப்போது இந்த பதிவில் பூண்டின் தோல் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பூண்டு தோலில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்
பூண்டு தோலில் இருக்கும் சல்பர் இரத்த அழுத்தத்தை சமநிலையாக பராமரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் அதை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறதும் எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் பூண்டை தோலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்
பூண்டின் தோலில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் பூண்டை தோலுடன் சேர்க்கும் போது இரட்டிப்பான பலன்களை பெறுவீர்கள்.
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது
பூண்டு தோலில் இருக்கும் கொலாஜன் புரோட்டீன்கள் சருமத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜியிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே, பூண்டு தோலை அரைத்து பொடியாக்கி அதனுடன் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக்காக போட்டு வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சினைகள் குறையும் மற்றும் முகப்பொலிவை மேம்படுத்தும்.
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி
பூண்டு தோலில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உச்சந்தலையில் இருக்கும் பொடுகை போக்க உதவுகிறது. இதற்கு பூண்டின் தோலை பொடியாக்கி அதனுடன் தயிர் சேர்த்து உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் முடி அடர்த்தியாக வளரவும், முடி உதிர்வை தடுக்கவும் பூண்டு ஒரு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.