Kidney Health Foods : தினமும் இதுல ஒன்னு சாப்பிடுங்க; கிட்னி பெயிலியர் ஆகவே ஆகாது!!
தப்போது சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டுமென்று என்று இந்த பதிவில் காணலாம்.

Best Foods For Kidney Health
சிறுநீரகங்கள் தான் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் இதுதான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வைத்து முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் நிறைய மக்களிடம் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான மக்கள் இதனால் இறக்கின்றனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே கிட்னி ஃபெயிலியர் ஆகவே ஆகாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் இப்போது காணலாம்.
ப்ளூபெர்ரி :
ப்ளூபெர்ரியில் நிறைந்திருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களை ஆக்சிடேட் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். இதுதவிர ப்ளூபெர்ரியில் இருக்கும் பினாலிக் அமிலம், ஃபிளாவனால்கள், ப்ராஆந்தோசயானங்கள் போன்றவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பூண்டு;
பூண்டில் காணப்படும் பொட்டாசியம் பாஸ்பரஸ் சோடியம் போன்ற தாதுக்கள் கொழுப்பைக் குறைக்கவும், உடலில் தடையற்ற ரத்த ஓட்டத்தை அனுமதிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெஸ்ட் உணவு.
ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளன. இது சிறுநீர்க கற்கள் அபாயத்தை குறைக்க உதவும். இதை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முக்கியமாக ஆப்பிள் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. ஆப்பிளில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை குறைக்கவும், இதய நோய் வருவதை தடுக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.
சிவப்பு கேப்சிகம்
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கேப்சிகம் ஒரு சூப்பர் ஃபுட். இதில் பொட்டாசியம் குறைவாகவே உள்ளது. இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும். இந்த கேப்சிகத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, போலிக் அமிலம், நார்ச்சத்து உள்ளதால் அவை சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவும்.
வஞ்சரம் மீன் :
இந்த மின் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும். மேலும் இந்த மீனில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைக்கவும், சிறுநீரகம் சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த மீனில் இருக்கும் புரதம் இதயம், மூளை, கண் என ஒட்டுமொத்த உடல் குறிப்புகளுக்கும் மிகவும் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
காலிஃபிளவர் :
காலிஃப்ளவர் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைவான பொட்டாசியம் உள்ளதால் அவை செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் நச்சுக்கள் சேராமல் பாதுகாக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக இதில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.