MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Roof Cooling: ஏசி, கூலர் இல்லாமல் வீட்டை கூல் ஆக்கலாம்! இந்த மேஜிக் பெயிண்ட் அடிச்சு பாருங்க‌!

Roof Cooling: ஏசி, கூலர் இல்லாமல் வீட்டை கூல் ஆக்கலாம்! இந்த மேஜிக் பெயிண்ட் அடிச்சு பாருங்க‌!

Roof Cooling Tips: கோடை வெயிலில் உங்கள் வீடு அனல் கக்குகிறதா? ஏசி பில் எகிறுகிறதா? கவலையை விடுங்கள். உங்கள் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு சூப்பர் ஐடியா குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Apr 26 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வெள்ளை பெயிண்ட்
Image Credit : Google

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வெள்ளை பெயிண்ட்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, விலை உயர்ந்த ஏசி அல்லது கூலிங் சாதனங்கள் மட்டும் தீர்வல்ல. மொட்டை மாடியில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை நிற ரிஃப்ளெக்டிவ் பெயிண்ட் அடிப்பது ஒரு புத்திசாலித்தனமான, குறைந்த செலவு உபாயம். இந்த டெக்னிக் வேலை செய்யும் என ஆய்வுகளும் கூறுகின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீட் ரிஃப்ளெக்டராக செயல்படும்
Image Credit : Gemini AI

ஹீட் ரிஃப்ளெக்டராக செயல்படும்

கோடையில் மொட்டை மாடி நெருப்பாகக் கொதிக்கும். ஆனால், அதன் மீது நீர்த்த சுண்ணாம்பை (Slaked Lime) பூசினால், அதை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். சுண்ணாம்பை தண்ணீரில் கலந்து, கெட்டியான வெள்ளை திரவமாக மாற்றி, மொட்டை மாடியில் பூச வேண்டும். இந்த வெள்ளை திரவம் ஒரு 'ஹீட் ரிஃப்ளெக்டராக' செயல்பட்டு, சூரியக் கதிர்களை உள்ளிழுக்காமல் திருப்பி அனுப்புகிறது.

Related Articles

Related image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Related image2
Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!
35
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
Image Credit : Gemini

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

மொட்டை மாடிக்கு வெள்ளை அடிக்கும் முறைக்கு பின்னால் அறிவியல் காரணமும் உள்ளது. 'ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் வெளியான ஒரு அறிக்கையின்படி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் (University College London) விஞ்ஞானிகள் 2018-ஆம் ஆண்டின் உச்சகட்ட வெயில் நாட்களில் இந்த முறையைச் சோதித்தனர். மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிப்பது சுற்றுப்புற வெப்பநிலையை 1.3 முதல் 2 டிகிரி வரை குறைக்க முடியும் என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

45
வெப்பநிலை கணிசமாகக் குறையும்
Image Credit : Freepik

வெப்பநிலை கணிசமாகக் குறையும்

இதுமட்டுமின்றி, நகரங்களில் அதிகரித்து வரும் வெப்பத்தை (Urban Heat Island Effect) குறைக்க இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளை நிறம் சூரியக் கதிர்வீச்சை மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்புவதால், மொட்டை மாடியின் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது.
55
குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை
Image Credit : AI Image

குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை

மொட்டை மாடிக்கு சுண்ணாம்பு அல்லது வெள்ளை பெயிண்ட் அடிக்கும் இந்த முறை மலிவானது மட்டுமல்ல, முழுமையாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் கூட. ஏசிகள் வெளிக்காற்றை மேலும் சூடாக்கும்போது,  இயற்கையாகவே வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த டெக்னிக்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
வெப்ப அலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Recommended image2
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Recommended image3
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Related Stories
Recommended image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved