- Home
- Lifestyle
- Chicken SukkaRecipe: ஆந்திரா காரம், வட கர்நாடகா புண்டி பல்யா சேர்த்து சுவையான சிக்கன் சுக்கா.! 10 நிமிடத்தில் ரெடி.!
Chicken SukkaRecipe: ஆந்திரா காரம், வட கர்நாடகா புண்டி பல்யா சேர்த்து சுவையான சிக்கன் சுக்கா.! 10 நிமிடத்தில் ரெடி.!
ஆந்திரா ஸ்டைல் காரம், புண்டி பல்யா கீரையின் புளிப்பு சுவையோடு கோங்குரா சிக்கன் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம். மசாலா வாசனையோடு தயாராகும் இந்த கிரேவி சாதம், ரொட்டி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.

வட கர்நாடகா புண்டி பல்யா கீரை புளிப்பு
எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் கிரேவி தானா? கொஞ்சம் ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமா, நாக்கில் நீர் ஊறும் புளிப்பு சுவையில சிக்கன் ட்ரை பண்ணுங்க. ஆந்திராவின் ஃபேமஸ் கோங்குரா அல்லது வட கர்நாடகாவின் புண்டி பல்யா கீரை புளிப்பு, மிளகாய் காரம், மசாலா வாசனையோடு சேரும் இந்த கோங்குரா சிக்கன் சாதம், ஜோள ரொட்டி, சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
Diwali 2026: பல வருஷத்துக்கு பிறகு தீபாவளிக்கு வரும் சூப்பர் யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
சிக்கன் ஊறவைக்க தேவையானவை
சிக்கன் - 500 கிராம், மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், கோங்குரா கீரை.
சிக்கன் கிரேவி செய்ய:
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன், சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 3 முதல் 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - தேவையான அளவு, கொத்தமல்லி இலை - சிறிது.
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் செய்முறை - ஸ்டெப் 1
முதல்ல சிக்கனை நல்லா கழுவி தண்ணியை வடிகட்டிக்கோங்க. அதுல மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. இந்த கலவையை குறைந்தது 30 நிமிஷம் ஊறவிடுங்க. அப்போதான் சிக்கனுக்குள்ள மசாலா நல்லா இறங்கி, வேகவைக்கும்போது சாஃப்ட்டாவும் டேஸ்ட்டாவும் இருக்கும்.
Non Veg After 50: 40, 50 வயசுக்கு மேல கறி, மீன் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
ஸ்டெப் 2: கோங்குரா கீரையை வதக்கவும்
கோங்குரா கீரையை ஆய்ந்து, நல்லா கழுவி தண்ணியை வடிகட்டிக்கோங்க. ஒரு கடாயில 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கோங்குரா கீரையை சேர்த்து மிதமான தீயில வதக்குங்க. கீரை நல்லா சுருண்டு சாஃப்ட் ஆகுற வரைக்கும் வேகவைங்க. கீரையில இருக்குற புளிப்பு தன்மை வெளியாகி, கீரை நல்லா வெந்ததும் கேஸை ஆஃப் பண்ணிட்டு ஆறவிடுங்க.
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
ஸ்டெப் 3: வெங்காயம், தக்காளி வதக்கவும்
- ஒரு கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிங்க.
- இதுகூட பொடியா நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமா ஆகுற வரைக்கும் வதக்குங்க.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகுற வரைக்கும் வதக்குங்க.
- நறுக்கிய தக்காளி சேர்த்து அது சாஃப்ட் ஆகுற வரைக்கும் வதக்குங்க.
ஸ்டெப் 4: மசாலா சேர்த்து சிக்கனை வதக்கவும்
அப்புறம் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வர்ற வரைக்கும் கிளறுங்க.
ஊறவெச்ச சிக்கனை சேர்த்து 5 முதல் 7 நிமிஷம் நல்லா வதக்குங்க. சிக்கன்ல இருந்து தண்ணீர் பிரிந்து மசாலாவோட ஒண்ணுசேரும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில 10 முதல் 15 நிமிஷம் வேகவைங்க.
ஸ்டெப் 5: கோங்குரா கீரை சேர்க்கவும்
சிக்கன் நல்லா வெந்ததும், நாம வதக்கி வெச்சிருக்குற கோங்குரா கீரையை சிக்கன்கூட சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க.
புளிப்பு சுவை சிக்கன்கூட நல்லா கலந்து எண்ணெய் மேல மிதந்து வர்ற வரைக்கும் 2 முதல் 4 நிமிஷம் மிதமான தீயில வேகவைங்க.
நடுநடுவே கிளறி விடுங்க. சிக்கன் நல்லா வெந்து, கீரை மசாலா சிக்கன்ல இறங்கி, கிரேவி கெட்டியாகுர வரைக்கும் வேகவைக்கணும்.
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன்
கோங்குரா கீரையின் புளிப்பும் சிக்கன் டேஸ்ட்டும் ஒண்ணா சேரும் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன், ரெகுலர் சிக்கன் குழம்பை விட முற்றிலும் வித்தியாசமான டேஸ்ட் கொடுக்கும். வீக்கெண்ட் மதிய சாப்பாட்டுக்கு செஞ்சு ஃபேமிலியோட என்ஜாய் பண்ணுங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





