MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • லேட்டா முழிச்சாலும் லேட்டஸ்ட்டா கிளம்பலாம்! ஆபீசுக்கு ரெடியாக 6 ஸ்மார்ட் வழிகள்!

லேட்டா முழிச்சாலும் லேட்டஸ்ட்டா கிளம்பலாம்! ஆபீசுக்கு ரெடியாக 6 ஸ்மார்ட் வழிகள்!

ஐயோ... டைம் ஆயிடுச்சே! காலையில் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு, 'இன்னும் ஒரு 5 நிமிஷம்' எனத் தூங்கி, திடுக்கிட்டு எழும்போது மணி 8.30-ஐத் தாண்டியிருக்கும். இந்த பதற்றம் ஐடி ஊழியர்கள் முதல் அத்தனை ஆபீஸ் கோயர்ஸுக்கும் (Office goers) காலையில் இருக்கும்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 05 2026, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அயர்ன் பண்ண டைம் இல்லையா? இந்த துணியை எடுங்க!
Image Credit : Getty

அயர்ன் பண்ண டைம் இல்லையா? இந்த துணியை எடுங்க!

லேட்டாக எழும் நாளில் அயர்ன் பாக்ஸை தேடி, ஆன் செய்து தேய்ப்பது பெரும் நேர விரயம். உங்கள் வார்ட்ரோபில் (Wardrobe) எப்போதும் 2 அல்லது 3 கசங்காத 'ரிங்கிள்-ஃப்ரீ' (Wrinkle-free) அல்லது லினன், டெனிம் ரக ஆடைகளைத் தனியாக ஒரு ஹேங்கரில் மாட்டி வையுங்கள். அவசர நேரத்தில் யோசிக்காமல் அதை எடுத்து மாட்டிக் கொள்ளலாம்; பார்க்கவும் செம கிளாஸாக இருக்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
குளியலறையில் 3 நிமிட 'மிலிட்டரி ஷவர்'!
Image Credit : Getty

குளியலறையில் 3 நிமிட 'மிலிட்டரி ஷவர்'!

லேட்டான நாளில் குளியலறையில் சோப்பு, ஷாம்பு எனத் தனித்தனியாகத் தேய்த்து சொகுசு குளியல் போட நேரமிருக்காது. '3-இன்-1' (3-in-1) பாடி வாஷ் மற்றும் ஷாம்பு கலந்த லிக்விடைக் பயன்படுத்துங்கள். தலை முதல் கால் வரை ஒரே வாஷில் முடித்து 3 நிமிடத்தில் வெளியே வந்துவிடலாம். டைம் அப்படியே பாதியா மிச்சமாகும்!

36
முகம் கழுவக்கூட நேரமில்லைனா...
Image Credit : Getty

முகம் கழுவக்கூட நேரமில்லைனா...

அவசரத்தில் ஃபேஸ் வாஷ் தேடி, மேக்கப் போட நேரமில்லை என்றால் கவலைப்படாதீங்க. முகத்தை ஜஸ்ட் குளிர்ந்த தண்ணீரால் கழுவிவிட்டு, உடனே கார்ன்ஸ்டார்ச் கலந்த லூஸ் பவுடர் அல்லது காம்பாக்ட் பவுடரை முகத்திலும், நெற்றியிலும் தட்டுங்கள். இது முகத்தின் தூக்கக் கலக்கத்தையும், எண்ணெய் பசையையும் உறிஞ்சி, உங்களை 2 நிமிடத்தில் 'பிரஷ்' லுக் காட்டும்.

46
கேட்ஜெட்களை 'ஒரே பையில்' போடுங்க!
Image Credit : Getty

கேட்ஜெட்களை 'ஒரே பையில்' போடுங்க!

ஆபீஸ் கிளம்பும் போது லேப்டாப் சார்ஜர் ஒரு மூலையிலும், மவுஸ் ஒரு மூலையிலும் கிடந்து நம் பிபியை ஏத்தும். எலக்ட்ரானிக் கேட்ஜெட்களுக்கு என்று ஒரு சிறிய 'பவுச்' (Pouch) வையுங்கள். ஆபீஸ் முடிந்து வந்ததும் சார்ஜர், இயர்போன், ஐடி கார்டு எல்லாவற்றையும் அந்தப் பையிலேயே போட்டு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். காலையில் அந்த ஒரு பையை மட்டும் லேப்டாப் பேக்கிற்குள் தூக்கிப் போட்டால் வேலை முடிந்தது!

56
கிச்சனில் சமைக்காதீங்க...
Image Credit : Getty

கிச்சனில் சமைக்காதீங்க...

லேட்டாகி விட்டது என்பதற்காக சாப்பிடாமல் ஆபீஸ் போனால் அன்றைய நாளே சொதப்பிவிடும். அதே நேரம் தோசை ஊற்றவும் நேரமிருக்காது. ஒரு வாழைப்பழம், ஒரு கைப்பிடி பாதாம் அல்லது ஒரு பாக்கெட் ஓட்ஸ் பிஸ்கட்டைப் பையில் போட்டுக் கொள்ளுங்கள். பைக் அல்லது கேபில் போகும் போதே இதைச் சாப்பிட்டு பசியை ஆற்றிக் கொள்ளலாம். ஹெல்தியும் கூட!

66
காலணி 'மிக்ஸ் அண்ட் மேட்ச்'
Image Credit : Getty

காலணி 'மிக்ஸ் அண்ட் மேட்ச்'

இந்த டிரெஸ்க்கு எந்த ஷூ போடுவது என மேட்சிங் தேடி நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் காலணிகளில் கருப்பு (Black), டான் அல்லது நியூடு (Nude/Tan) நிறத்தில் ஒரு ஃபார்மல் ஷூ அல்லது சாண்டல் எப்போதும் வாசலிலேயே இருக்கட்டும். இது நீங்கள் எந்த நிற ஆடை அணிந்திருந்தாலும் கச்சிதமாகப் பொருந்திவிடும். தேடும் வேலையே இல்லை!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
தொழில்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sweet Potato: பால், வெல்லம், சர்க்கரைவள்ளி - கிழங்கு இவ்ளோ நன்மையா?
Recommended image2
Pressure Cooker : குக்கரில் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிங்க! மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கலாம்!
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
Recommended image2
சம்பளத்துல கொஞ்சம் கூட சேமிக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved