- Home
- Lifestyle
- மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
வீட்டுக்குள்ளே இருக்கும் மாடிப்படிக்கு கீழே இருக்கும் இடத்தை பலரும் தேவையில்லாத பொருட்களைப் போடும் ஸ்டோர் ரூம் ஆகத்தான் மாற்றி வைத்திருப்பார்கள். ஆனால், கொஞ்சம் கிரியேட்டிவாக யோசித்தால், அந்த இடத்தை வீட்டின் மிக அழகான பயனுள்ள பகுதியாக மாற்ற முடியும்.

வீட்டுக்குள்ளே ஒரு குட்டி நந்தவனம்:
மாடிப்படிக்கு கீழே அழகான கூழாங்கற்களை (Pebbles) பரப்பி, இன்டோர் பிளான்ட்ஸ் (Indoor plants) வளர்க்கலாம். சிறிய எல்இடி (LED) விளக்குகளை வைத்தால், அந்த இடமே ஒரு மினி கார்டன் போல ஜொலிக்கும்!
சுட்டீஸ்களின் 'சீக்ரெட் குகை':
அந்த இடத்தில் ஒரு மெத்தையைப் போட்டு, சுவர்களில் கார்ட்டூன் ஸ்டிக்கர் ஒட்டி, குட்டி லைட்டுகளை மாட்டி விடுங்கள். குழந்தைகளின் ஃபேவரிட் விளையாட்டு இடமாக அல்லது கதை படிக்கும் இடமாக அது மாறிவிடும்!
மினி ஆபீஸ் / ஸ்டடி கார்னர்:
வொர்க் ஃபிரம் ஹோம் (WFH) செய்பவரா நீங்கள்? மாடிப்படிக்கு கீழ் உள்ள உயரத்திற்கு ஏற்ப ஒரு கஸ்டமைஸ் கம்ப்யூட்டர் டேபிள் மற்றும் சேர் போட்டு, உங்களது பிரைவேட் ஆபீஸ் ரூம் ஆக்கிக் கொள்ளலாம்.
செல்லப் பிராணிகளின் சொகுசு இல்லம்:
நாய் அல்லது பூனை வளர்ப்பவர்களுக்கு இது செம்ம ஐடியா. மாடிப்படிக்கு கீழே அவற்றுக்கு என ஒரு பிரத்யேகக் கூட்டை (Pet House) செட் பண்ணலாம். அவற்றுக்கும் தனி பிரைவசி கிடைக்கும்!
ஸ்டைலிஷ் 'காபி / டீ' பார்:
ஒரு சிறிய கவுண்டர் டாப் அமைத்து, காபி மேக்கர், அழகான கப்புகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஜாடிகளை அங்கே அடுக்கி வையுங்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்த இது ஒரு மாடர்ன் கஃபே லுக் தரும்.
அமைதியான வாசிப்பு உலகம்:
புத்தகப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். படியின் சரிவுக்கு ஏற்ப புத்தக அலமாரிகளை (Bookshelves) அமைத்து, கீழே ஒரு மெத்தையான குஷனை போட்டால், உலகத்தையே மறந்து புத்தகம் படிக்கலாம்!
வாஷிங் மெஷின் 'ஹைடவுட்':
வாஷிங் மெஷினை பாத்ரூமிலோ அல்லது வெளியிலோ வைக்க இடம் இல்லையா? படியின் கீழ் பகுதிக்கு வாட்டர் கனெக்ஷன் கொடுத்து, வாஷிங் மெஷினை அங்கே மறைவாக செட் செய்து, முன்னால் ஒரு அழகான திரையை தொங்கவிட்டு மூடலாம்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

