MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சம்பளத்துல கொஞ்சம் கூட சேமிக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க!

சம்பளத்துல கொஞ்சம் கூட சேமிக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க!

மாத சம்பளம் வந்த வேகத்தில் கரைந்துவிடுவதால் நடுத்தர மக்கள் தவிக்கின்றனர். ஆனால், தொடக்கத்திலேயே பணத்தை திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செலவழித்தால், மாதக் கடைசியில் ஏற்படும் பண நெருக்கடியையும் மன உளைச்சலையும் சுலபமாகத் தவிர்க்கலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : May 30 2026, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சம்பளம் வந்ததும் முதல்ல இதை பண்ணுங்க:
Image Credit : Getty

சம்பளம் வந்ததும் முதல்ல இதை பண்ணுங்க:

எல்லாரும் சம்பளம் வந்த உடனே செலவு பண்ணிட்டு மீதியைச் சேமிக்க நினைப்போம். அது தப்பு! இனிமே 'தலைகீழா' யோசிங்க. சம்பளம் கிரெடிட் ஆன அடுத்த நிமிஷமே, உங்க இலக்குக்கான தொகையை (உதாரணமாக 15%) வேறொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாத்திடுங்க. மீதி இருக்குற பணத்துல மட்டும் தான் இந்த மாச பட்ஜெட்னு மைண்ட் செட் பண்ணிக்கோங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
'ஆட்டோ-டெபிட்' (Auto-Debit) ரகசியம்:
Image Credit : Getty

'ஆட்டோ-டெபிட்' (Auto-Debit) ரகசியம்:

கை காசுல இருந்து எடுத்துச் சேமிக்க மனசு வராது. அதனால டெக்னாலஜியைப் பயன்படுத்துங்க. மியூச்சுவல் ஃபண்ட் (SIP) அல்லது ரெக்கரிங் டெபாசிட் (RD) போன்ற சேமிப்புகளில், சம்பளம் வரும் தேதிக்கு அடுத்த நாளே 'ஆட்டோ-டெபிட்' ஆகுற மாதிரி செட் பண்ணுங்க. நீங்க யோசிக்கிறதுக்குள்ள பணம் தானா சேமிப்புக்கு போயிடும்!

Related Articles

Related image1
முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Related image2
செல்வத்தை காந்தம் போல் ஈர்க்கும் 5 எளிய வழிகள்! இன்றே முயலுங்கள்
36
ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தை அடக்க ஒரு ட்ரிக்:
Image Credit : Getty

ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தை அடக்க ஒரு ட்ரிக்:

அமேசான், ஃப்ளிப்கார்ட்ல ஆஃபர் பார்க்கும் போது உடனே 'Buy Now' கொடுக்க தோணும். அங்கதான் பட்ஜெட் அடி வாங்குது.இனிமே எந்தப் பொருளைப் பார்த்தாலும் உடனே வாங்காதீங்க. அதை 'கார்ட்' (Add to Cart) பண்ணிட்டு 48 மணி நேரம் அப்படியே விட்டுடுங்க. ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, "இது நமக்கு இப்ப தேவையில்லை"னு உங்களுக்கே தோணும். தேவையில்லாத செலவு மிச்சம்!

46
'சப்ஸ்கிரிப்ஷன்' (Subscriptions) தணிக்கை:
Image Credit : Getty

'சப்ஸ்கிரிப்ஷன்' (Subscriptions) தணிக்கை:

நெட்ஃபிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார், மியூசிக் ஆப்ஸ், ஜிம் மெம்பர்ஷிப்னு மாசம் மாசம் கிரெடிட் கார்டுல இருந்து ஆட்டோமேட்டிக்கா பணம் போயிட்டே இருக்கும். ஆனா நாம அதை ஒழுங்கா பயன்படுத்துறதே இல்லை. உங்க பேங்க் ஸ்டேட்மென்ட்டை எடுத்து, கடந்த 3 மாசமா நீங்க பயன்படுத்தாத சப்ஸ்கிரிப்ஷன்களை உடனே 'கேன்சல்' பண்ணுங்க. மாசம் ரூ.1000 வரை அசால்ட்டா மிச்சமாகும்.

56
'சில்லறை' சேமிப்பு ஆப்ஸ் :
Image Credit : Getty

'சில்லறை' சேமிப்பு ஆப்ஸ் :

முற்காலத்துல உண்டியல்ல சில்லறை காசு போடுவோம் இல்லையா? இப்போ அதை டிஜிட்டலா பண்ணலாம்.நீங்க ஆன்லைன்ல ரூ.255-க்கு ஏதோ வாங்குறீங்கன்னா, அதை ரவுண்ட் ஆஃப் செஞ்சு ரூ.300-ஆ எடுத்துக்கிட்டு, மீதி ரூ.45-ஐ டிஜிட்டல் தங்கம் (Digital Gold) அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மொபைல் ஆப்ஸ்களைப் பயன்படுத்துங்க. உங்களுக்கே தெரியாம ஒரு பெரிய தொகை சேரும்!

66
இஎம்ஐ.,க்கு நோ சொல்லுங்க:
Image Credit : Getty

இஎம்ஐ.,க்கு நோ சொல்லுங்க:

மத்தவங்களுக்குக் காட்டணும்ன்றதுக்காக பிராண்டட் பொருட்களையும், புது போன்களையும் இஎம்ஐ (EMI)-ல வாங்காதீங்க. கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியானது. வார இறுதியில் தேவையில்லாமல் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை மாதத்திற்கு இரண்டு முறை என குறைத்துக் கொண்டாலே கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சம்பளம்
சேமிப்புக் கணக்கு
மியூச்சுவல் ஃபண்ட்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
New house : புது வீடு கட்டுறீங்களா? இந்த 6 ரகசியம் தெரியாம இறங்காதீங்க!
Recommended image2
நவீன பெண்களின் தேர்வு: 2026-ன் டாப் ட்ரெண்டிங் தங்க வளையல் டிசைன்கள்!
Recommended image3
சிறுவர்களுக்கான ஃபேஷன் 2026 : ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 5 ஆடைகள்!
Related Stories
Recommended image1
முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Recommended image2
செல்வத்தை காந்தம் போல் ஈர்க்கும் 5 எளிய வழிகள்! இன்றே முயலுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved