வீட்டை சுத்தமா வச்சிக்க இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்!!
House Cleaning Tips : வீட்டில் இருக்கும் பொருட்களை எளிதாக சுத்தம் செய்ய இல்லத்தரசிகளுக்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாம் நம்முடைய வீட்டை அவ்வப்போது சுத்தமாக வைத்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்வது கடினமான விஷயம் தான். சோபா, ஃபேன், வீட்டின் தரை என நிறைய விஷயங்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களில் படிந்திருக்கும் தூசிகளை அவ்வப்போது சுத்தம் செய்தால், அதில் தூசிகள் ஒருபோதும் தாங்காது.
எனவே, நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அதற்கு என ஒரு நாளை ஒதுக்குங்கள். ஒருவேளை, உங்களால் வாரம் வாரம் சுத்தம் செய்ய முடியாவிட்டால், மாதத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக வீட்டை சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் வீடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை எளிதாக சுத்தம் செய்ய இல்லத்தரசிகளுக்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருக்கும் பொருட்களை எளிதாக சுத்தம் செய்வதற்கான டிப்ஸ் :
1. உங்கள் வீட்டில் இருக்கும் மரத்தாலான பொருட்கள் மீது டீ ஏதாவது கொட்டி விட்டால், அதை சுலபமாக துடிக்க ஆல்கஹால் அல்லது வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்துங்கள். இதுபோல மழை மற்றும் அதிக சூரிய ஒளி வெளிச்சத்தில் மரப்பொருட்களை ஒருபோதும் வைக்க வேண்டாம். இல்லையெனில் அவை சேதமடைய வாய்ப்பு அதிகமுள்ளது.
2. நீங்கள் உங்கள் வீட்டில் பாத்திரங்களை கழுவ பயன்படுத்தபடும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் போன்று இருந்தால், பாத்திரங்களை கழுவி பின் அதனை சூடான நீர் அல்லது குளிர்ந்த நீரில் அலசுங்கள் அப்போதுதான் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவு துகள்கள் வெளிவரும். இல்லையெனில், அதன் மூலம் கிருமி தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: அலுமினியத் தாளை கீச்சனில் இதுக்கு கூட யூஸ் பண்ணலாமா..?
3. வீட்டு கதவு ஜன்னல்களில் அழுக்கு தூசிகள் ஒட்டிக்கொண்டிருந்தால், அதை ஈரமான துணியை கொண்டு துடைப்பதற்கு பதிலாக, பழைய டூத் பிரஷ் வைத்து முதலில் துடையுங்கள். பிறகு நன்கு காய்ந்த துணியை கொண்டு துடைக்கவும். இப்படி செய்தால் அவை பார்ப்பதற்கு பளபளக்கும்.
4. கிச்சன் டைல்ஸில் எண்ணெய் கறை படிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதை எளிதாக சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவும் லிக்விட் உடன் சமையல் சோடா சேர்த்து, ஒரு சாதாரண ஸ்கிரப்பர் பயன்படுத்தி அந்த இடத்தை நன்கு தேய்த்து, தண்ணீர் ஊற்றி கழுவி, பின் ஈரத் துணியால் துடைத்து எடுத்தால் உங்களது கிச்சன் டைல்ஸ் பளபளக்கும்.
5. அதுபோல கிச்சன் சிங்க் மற்றும் வாஷ்பேஷனில் துர்நாற்றம் அடித்தால், சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதை துவாரத்தில் ஊற்றினால், அடைப்புகள் நீங்கும் மற்றும் துர்நாற்றமும் அடிக்காது.
இதையும் படிங்க: இனி கை வலிக்காமல் டாய்லெட்டை ஈசியா சுத்தம் செய்யலாம்!!
6. வீட்டில் இருக்கும் சீலிங் பேனை எளிதாக சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைப்பர் துணி நிச்சயம் உங்களுக்கு உதவும். இதற்கு மைக்ரோ ஃபைப்பர் துணியில் சில துளிகள் கிளீனர் சேர்த்து அதைக்கொண்டு இறக்கைகளை அதிக அழுத்தம் கொடுக்காமல் சுத்தம் செய்யுங்கள்.
7. வீட்டில் தொங்கும் திரைச்சீலைகளில் அழுக்குகள் தூசிகள் உடனே தங்கிவிடும். எனவே, அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தண்ணீரில் வினிகர் கலந்து அந்த நீரில் திரைச்சீலையை சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.
8. ஃப்ரிட்ஜை நீங்கள் அவ்வப்போது சுத்தம் செய்தால் தான் அது நீண்ட காலம் இருக்கும். இல்லையெனில், ஃப்ரிட்ஜின் செயல்திறன் பாதிப்படையும். ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும்போது நீங்கள் வினிகரை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். ஏனெனில், வினிகர் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கும். அதுபோல ஃப்ரிட்ஜில் தேவையற்ற பொருட்களை ஒருபோதும் வைக்க வேண்டாம்.