இனி கை வலிக்காமல் டாய்லெட்டை ஈசியா சுத்தம் செய்யலாம்!!
Toilet Cleaning Tips : கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவேளை உங்களது கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால், பல நோய்கள் வரக்கூடும்.
தூய்மை என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம். நாம் ஆரோக்கியமாக இருக்க, தூய்மை மிகவும் அவசியம். தனிப்பட்ட சுகாதாரத்துடன், உங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இத்தகைய சூழ்நிலையில், நோய்கள் தாக்காமல் இருக்க, பலர் தங்களது வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்வார்கள். ஆனால், அவர்கள் சிலர் கழிப்பறையை சுத்தம் செய்ய மறந்து விடுகிறார்கள். கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால் அது பல நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடும்.
மேலும் சிலர் தங்களது கழிவறையை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் கறைகள் நீங்குவதில்லை. இதே பிரச்சினையை நீங்களும் எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் கழிப்பறையை எளிதாக சுத்தம் செய்வதற்கான சில வழிகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளதும் அவற்றை காணுங்கள்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூமை பளபளப்பாக மாற்றலாம்.. இதை செய்தால் போதும்.. சூப்பர் டிப்ஸ் இதோ..
தரையை சுத்தம் செய்ய மறக்காதீர்கள் :
உங்கள் வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தால் அதை சுற்றியுள்ள தரையை கண்டிப்பாக சுத்தம் செய்யுங்கள். ஏனெனில், அந்தப் பகுதிகளில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தரையை சுத்தம் செய்வதற்கு நீங்கள் வினிகர் பயன்படுத்துங்கள். வினிகரை தண்ணீரில் கலந்து பிறகு, தரையில் தெளித்து சில நிமிடம் கழித்து பிரஷ் பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள்.
இதையும் படிங்க: வெறும் 10 ரூபாய் மட்டும் செலவு செஞ்சா போதும்... உங்க வீட்டு பாத்ரூம் பளபளக்கும்...!!
டாய்லெட்டை சுத்தம் செய்வதற்கான குறிப்புகள் :
- உங்கள் டாய்லெட் பௌலில் கறைகள் படிந்து பார்ப்பதற்கு அதிகமாக இருந்தால் வினிகரை பயன்படுத்தி கறைகளை எளிதாக நீக்கலாம். இதற்கு இரவு தூங்கும் முன் வினிகரை டாய்லெட் பவுலில் ஊற்றி இரவும் முழுவதும் அப்படியே வைத்து விட்டு, பின் மறுநாள் காலை பிரஸ் கொண்டு தேய்த்து கழுவினால் கறைகள் நீங்கும்.
- அதுபோல, அமரும் இருக்கையில் கறை படிந்து இருந்தால் உப்பு மற்றும் வினிகரை கலந்து அதை இருக்கையில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பின் மறுநாள் காலை தேய்த்து கழுவினால் கறைகள் மறைந்துவிடும்.
- உங்களது வெஸ்டன் டாய்லெட் பௌலில் கறைகள் இருந்தால், அதைப் போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவை டாய்லெட் பவுலில் தூவுங்கள். பிறகு வினிகரை தெளிக்கவும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு, பின் பிரஸ் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், டாய்லெட் பௌல் பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.
இவற்றை நினைவில் கொள் :
- ஒவ்வொரு 4 மாதங்களுக்கு கண்டிப்பாக டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ் மாற்றவும்.
- வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக டாய்லெட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
- பலர் டாய்லெட்டின் சுவர்களை சுத்தம் செய்வதில்லை ஆனால் மூன்று நாளுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
- வாரத்திற்கு இரண்டு முறை பாத்ரூமில் தூப குச்சிகளை ஏற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்கள், பூச்சிகள் ஒழியும். தூபகுச்சுகளை ஏற்றிய இரண்டு மணி நேரம் கண்டிப்பாக கதவு மூடி இருக்க வேண்டும்.
நோய்கள் வராமல் இருக்க உங்கள் கழிப்பறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இது உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D