வெறும் 10 ரூபாய் மட்டும் செலவு செஞ்சா போதும்... உங்க வீட்டு பாத்ரூம் பளபளக்கும்...!!
உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்திருக்கும் உப்பு கரைகளை நீக்க வெறும் பத்து ரூபாய் மட்டும் செலவு செய்தால் போதும். பாத்ரூம் பளிச்சென்று இருக்கும்.
எவ்வளவுதான் வீட்டில் இருக்கும் பாத்ரூமை சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே உப்புக்கரைகள் படிந்து இருப்பதை நீங்கள் பாத்திருப்பீர்கள். நாளடைவில் அது விடாப்பிடியான கறையாக மாறுவதால் அவற்றை சுத்தம் செய்வது பெரும் போராட்டமாக இருக்கும். அந்த வகையில் இங்கு நாம் பாத்ரூமில் படிந்த உப்பு கரையை சுலபமான முறையில் நீக்கக்கூடிய ஒரு சிறந்த லிக்விட் தயாரிப்பு முறை பற்றி பார்க்கலாம். இந்த லிக்விடை நாம் வீட்டில் தயாரிக்க வெறும் பத்து ரூபாய் மட்டுமே போதும்.
லிக்விட் தயாரிக்க தேவையான பொருட்கள்:
துணி துவைக்கும் சோப்பு - 1
சமையல் சோடா - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 2
பாத்திரம் கழுவும் லிக்வீட் - 2 ஸ்பூன்
கல் உப்பு - ஒரு கை பிடி
கூடான தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: பாத்ரூமில் எப்போதும் துர்நாற்றம் வீசுதா? வெறும் 1 ரூபாய் போதும்..இனி உங்க டாய்லெட் எப்போதும் பளிச்சென மின்னும்
லிக்விட் தயாரிக்கும் முறை:
- இந்த லிக்விட் தயாரிக்க முதலில் வெறும் பத்து ரூபாய் துணி துவைக்கும் சோப்பு போதும். அவற்றை துருவி பாதியளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இவற்றில் எடுத்து வைத்த சமையல் சோடா, உப்பு, 2 எலுமிச்சை பழத்தின் சாறு, மற்றும் பாத்திரம் கழுவும் லிக்வீட் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையில், கூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடாக இருப்பதால் கலவையில் உள்ள பொருட்கள் அனைத்தும் நன்கு கரைந்து விடும்.
- இதனை அடுத்து இந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாட்டிலின் மூடியில் துளைகளை போட வேண்டும். ஏனெனில் இந்த லிக்விட் நாம் பாத்ரூமில் ஊத்த வசதியாக இருக்கும். ஒருவேளை உங்களிடம் ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த லிக்விடை நீங்கள் உங்கள் வீட்டில் பாத்ரூமில் கரைகள் படிந்திருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். கதவுகளிலும் கறைகள் இருந்தால் அவற்றிலும் கூட தெளிக்கலாம். தெளித்து பின் அவற்றை அப்படியே 10 நிமிடம் விட்டு விட வேண்டும்.
- அதன் பின்னர் நீங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த பயன்படுத்தும் பிரஷ் அல்லது துடைப்பம் வைத்து லேசாக தேய்த்தாலே போதும் கரைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று இருக்கும். இந்த லிக்விடில் நாம் சமையல் சோடா, எலுமிச்சை, உப்பு கலந்திருப்பதால் உங்கள் பாத்ரூமில் இனி துர்நாற்றம் வராது மற்றும் பூச்சிகள் தொந்தரவும் இனி இருக்காது.
- எனவே, இனி உங்கள் வீட்டில் பாத்ரூமை சுத்தப்படுத்த அதிக விலை கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்குவதை தவிர்த்து, வெறும் 10 ரூபாயில் உங்க வீட்டு பாத்ரூம் பளிச்சென்று மாற்ற இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா மட்டும் போதும்.
- மேலும் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை இப்படி தொடர்ந்து இப்படி செய்து வந்தால் உங்கள் வீட்டு பாத்ரூம் பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதோடு மட்டுமல்லாமல் நறுமணத்துடனும் இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க...
இதையும் படிங்க: குளியலறையில் முடி மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்கிறதா? இவற்றை பயன்படுத்துங்க.!!