பாத்ரூமில் எப்போதும் துர்நாற்றம் வீசுதா? வெறும் 1 ரூபாய் போதும்..இனி உங்க டாய்லெட் எப்போதும் பளிச்சென மின்னும்
Bathroom Cleaning Tips: உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட் எப்பொழுதும் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக இருக்க, நீங்கள் கீழே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் போதும்..
attached bathroom
வீட்டு பாத்ரூமில் நாம் என்னதான் 'ரூம் பிரஸ்னர்' யூஸ் பண்ணினாலும், எப்போதும் ஒரு வித துர்நாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும்..ஒரே வாரம் சென்றதும் அவற்றின் வாசம் எல்லாம் தீர்ந்து போய் விடும்..பிறகு தூக்கி போட்டு விட்டு வேற ஒன்றை வாங்க முற்படுவோம்..இதனால், உங்களுக்கு பணம் தான் செலவாகுமே தவிர நாற்றம் போகவே போகாது..
attached bathroom
எனவே, நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தி உங்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமா..? அதற்கு நீங்கள் வெறும் ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும். உங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் நோய்க் கிருமிகள் இன்றி சுத்தமாகவும், வைரம் போல் பளிச் என்று மின்னும்.
attached bathroom
நம்முடைய வீடுகளில் இருக்கும் உப்பு தண்ணீரினால் அதிக அளவு உப்பு கறையும், பாசியும் படிந்து கழிவறையை சுத்தம் செய்வதை கடினம் ஆக்கிவிட்டது. எனவே, உங்கள் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை தினமும் சுத்தம் செய்யவில்லை என்றாலும், வாரம் ஒரு முறையாவது நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும்.
attached bathroom
அதற்கு நீங்கள் கடைக்கு சென்று 1 ரூபாய் ஷாம்பூ ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அதை அரை பக்கெட் அளவிற்கு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர், இந்த தண்ணீரை ஒரு முறை நுரை வர கலக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கில் எடுத்து எல்லா இடங்களிலும் ஊற்றி ஒரு முறை பிரஸ் அல்லது துடைப்பத்தை வைத்து நன்கு தேய்த்து விடுங்கள்.பின்னர், சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், பாத்ரூம் நல்ல வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
attached bathroom
குளியலறை மட்டும் அல்லாமல் கழிவறையையும் இதே போல எல்லா இடங்களிலும் ஊற்றி ஒரு முறை தேய்த்து விட்டால் போதும், எப்பொழுதும் உங்களுடைய பாத்ரூம் பளிச்சிடும். அதன் பிறகு நீங்கள் வாரம் ஒரு முறை எப்போதும் போல கழுவிக் கொள்ளலாம். இப்படி கழுவும் போது, வேண்டுமானால் ஷாம்புவுடன் நீங்கள் துணிகளுக்கு பயன்படுத்தும் கம்ஃப்போர்ட் போன்ற வாசனை திரவியங்களையும் 1 மூடி சேர்த்துக் கொள்ளலாம்.
attached bathroom
எனவே நீங்கள் தினமும் இது போல ஒரு முறை குளிக்கும் பொழுதே செய்துவிட்டு வந்தால், மாதம் முழுவதும் நல்ல ஒரு நறுமணமும், சுத்தமான பாத்ரூமும் கிடைக்கும். நாம் நம்முடைய மற்ற வீடுகளில் அறைகளை காட்டிலும், இந்த பாத்ரூமை கண்டிப்பாக அடிக்கடி பராமரிக்க வேண்டும். அப்போது தான் நோய் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.