அலுமினியத் தாளை கீச்சனில் இதுக்கு கூட யூஸ் பண்ணலாமா..?
Foil Paper Uses : அலுமினியத் தாளை சமையலறையில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
Aluminium Foil Paper Uses In Kitchen
பொதுவாகவே அலுமினிய தாள் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை பேக்கிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது பேக்கிங் செய்வதற்கு மட்டுமின்றி,பல விஷயங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, சமையல் அறையை சுத்தம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய காலத்து பல பெண்கள் சமைப்பது பெரிய விஷயம் என்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சமையலறையை சுத்தம் செய்வது அவர்கள் கடினமாக உணர்கிறார்கள். சொல்லப்போனால், வாரத்திற்கு இரண்டு முறை தான் சமையலறையை சுத்தம் செய்கிறார்கள். இத்தகைய பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களது வேலையை எளிதாக நீங்கள் விரும்பினால், அலுமினியத்தாள் வைத்து உங்களது கிச்சன் வேலையை எளிதாக்கலாம். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
Aluminium Foil Paper Uses In Kitchen
சமையலறையில் இருக்கும் டிராயர் சுத்தம் செய்ய :
சமையலறையில் இருக்கும் ட்ராயரை அவ்வப்போது சுத்தம் செய்யாவிட்டால் தூசிகள், அழுக்குகள், கிரீஸ், மசாலாக்கள் குவிந்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலுமினியத்தாளை அதில் ஒட்டி வைத்தால், மாதம் ஒருமுறை மட்டும் சுத்தம் செய்தால் போதும். அதுவும் சுலபமாக.
சமையலறை ஜன்னல் மற்றும் கதவுகள் சுத்தம் செய்ய : சில வீடுகளில் சமையலறையில் இருக்கும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பிசுபிசுப்பாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிசுபிசுமாகும் இடத்தில் அலுமினியத்தாளை ஒட்டி வைத்தால் போதும். இனி அவை பிசுபிசுப்பாக இருக்காது.
மசாலா டப்பாக்களை சுத்தம் செய்ய : உங்கள் வீட்டில் இருக்கும் மசாலா பிளாஸ்டிக் ஸ்டீல் டப்பாக்கள் எளிதில் பிசுபிசுப்பாகிவிடும், தூசிகளும் தங்கிவிடும். இத்தகைய சூழ்நிலையில், அந்த டப்பாக்களில் அலுமினியத்தாள் கொண்டு சுற்றி வைத்தால் அவை பிசுபிசுப்பாக இருக்காது, அழுக்கும் தங்காது. குறிப்பாக, அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் வராது.
Aluminium Foil Paper Uses In Kitchen
சிம்னி மைக்ரோவேவ் சுத்தம் செய்ய : உங்கள் வீட்டில் இருக்கும் சிம்மி மற்றும் மைக்ரோவேவ் சுத்தம் செய்ய அலுமினியத்தால் நிச்சயம் உங்களுக்கு உதவும். ஏனெனில், இவற்றில் தான் எண்ணெய் அதிகம் பிடிக்கும் இட்டகேஸ் சூழ்நிலையில் நீங்கள் அலுமினியத்தாலை அவற்றில் ஒட்டி வைத்தால், அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக, அவை ஒருபோதும் அழுக்காகாது.
வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க : பொதுவாகவே, வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் நிறம் சிறிது நேரத்தில் மாற தொடங்கும் மற்றும் அவை கெட்டுப் போக கூட ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அலுமினிய தாளில் சுற்றி வைத்தால் அவை நீண்ட நேரம் புதிதாக இருக்கும், நிறமும் மாறாது.
இதையும் படிங்க: உணவுகளை அலுமினியத் தாளில் சுற்றி வைக்கும் போது கவனிக்க வேண்டியவை..!!
Aluminium Foil Paper Uses In Kitchen
கொத்தமல்லி இலையை ஃபிரஷ்ஷாக வைக்க : பொதுவாக கொத்தமல்லி இலை சீக்கிரம் கெட்டுப் போய்விடும். காலை வாங்கினால் கூட மாலையில் அது வாடிவிடும். சில சமயங்களில், ஃப்ரீசரில் வைத்தால் கூட கொஞ்ச நாட்களில் தான் அவை பிரஷ்ஷாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிதாக வாங்கிய கொத்தமல்லியை அலுமினிய தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். அவை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும். சீக்கிரம் கெட்டுப் போகாது.
இதையும் படிங்க: ஏர் பிரையரில் அலுமினியத் தாளை வைத்து சமைப்பது பாதுகாப்பானதா?