- Home
- Lifestyle
- Parenting Tips : உங்க குழந்தைக்கு ரொம்ப கோபம் வருதா? அவங்க கோபத்தை குறைக்க இதை செய்ங்க!
Parenting Tips : உங்க குழந்தைக்கு ரொம்ப கோபம் வருதா? அவங்க கோபத்தை குறைக்க இதை செய்ங்க!
உங்களுடைய கோபக்கார குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Ways To Calm Down An Angry Kid
குழந்தைகள் கோபப்படுவதை தவறான விஷயமாக பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால் குழந்தை கோபப்படுவது வெறும் கோபம் மட்டுமல்ல. அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் கத்துவதன் மூலமும், சில குழந்தைகள் தங்களையே காயப்படுத்துவதன் மூலம் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். கோபப்படும் குழந்தைகளின் அமைதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
அங்கீகாரம்
குழந்தைகள் கோபப்படும்போது அதை புறக்கணிப்பது சரியான தீர்வு அல்ல. இதனால் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்ற புரிதல் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும். குழந்தைகள் கோவப்படும் போது அவர்கள் கோபப்படுவது அவர்களுடைய வருத்தத்தின் வெளிப்பாடு அல்லது விரக்தியின் வெளிப்பாடு என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீகள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்களின் கோபத்தை அங்கீகரிக்க வேண்டும். இதனால் குழந்தைகள் தங்களுடைய உணர்வு மதிக்கப்படுவதாக நினைப்பார்கள்.
தனிமை
குழந்தை அதிகமான நேரத்தை தனிமையில் கழிப்பது அவர்களுடைய மன அழுத்த ஹார்மோன்களை அதிகமாக சுரக்க செய்கிறது. இதனால் அவர்களுடைய உணர்ச்சி ஒழுங்குமுறை தாமதமாகிறது. இதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் போதுமான நேரத்தை செலவு செய்ய வேண்டும். தனிமை நீங்கும்போது காயம்பட்ட அவர்களின் மனது சரியாகி முன்கோபம் குறையும்.
அமைதி
குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மைகள், தலையணைகள், மென்மையான போர்வை, கதைப் புத்தகம் என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை ஆறுதலாக வைத்திருப்பார்கள். இவை அவர்களின் கோபத்தின் வடிகாலாக இருக்கும். கோபம் வந்தால் கதை படிப்பது, தூங்குவது, வரைவது என பிடித்த மற்றொரு விஷயத்தை செய்ய பழக்கலாம்.
பெற்றோரின் புரிதல்
குழந்தைகள் கோபப்படும்போது பெற்றோரும் அவர்களுடன் இணைந்து கத்துவது, திட்டுவது போன்றவற்றை செய்யாமல் அவர்களின் கோபம் தணிந்த பிறகு அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களின் நேர்மறையான விஷயங்களை கூறிய பின், கோபப்படுவது எப்படிப்பட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
முக்கிய மாற்றம்
கோபப்படும் குழந்தையை அமைதிப்படுத்த பெற்றோர் முயற்சி செய்யும் முன், தங்களை கவனிக்க வேண்டும். உடலை இறுக்கமான வைக்காமல் தளர்வாக வைக்க வேண்டும். முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் மென்மையான குரலில் பேச வேண்டும். பேசும் முன் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விட வேண்டும். பின் அவர்களிடம் பேச வேண்டும்.
பிரதிபலிப்பு
குழந்தைகள் கோபப்படும்போது அவர்களின் உடல் மொழி, தொனி, உணர்வுகளில் அதை பிரதிபலிப்பார்கள். அப்போது அதை பச்சாதாபத்துடன் அணுக வேண்டும். உங்களுடைய குழந்தை கீழே அமர்ந்து கத்தினால், அமைதியான குரலில், "நீ சரியா உட்காரல போலயே கால் வலிக்குதா?" என கேட்டு பாருங்கள். அவர்கள் அதை கவனிப்பார்கள். இதனால் அவர்களை நீங்கள் கவனிப்பதை தெரிந்துகொள்வார்கள். உங்களுக்கு பதிலளிப்பார்கள். அப்படியே பேசி அவர்களின் கோபத்தை தணிக்கலாம்.
டாஸ்க்
உங்களுடைய குழந்தை கோபத்தை உணர்ச்சிரீதியாக வெளிப்படுத்த சொல்லுங்கள். காகிதத்தில் எழுத அல்லது வரைய சொல்லலாம். எவ்வளவு கோபம் என குறிப்பிட சொல்லுங்கள். அதை ஒரு டைனோசராக அல்லது கரடியாக என எவ்வளவு கோபம் என்பதை வெளிப்படுத்த சொல்லுங்கள். அதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.