- Home
- Lifestyle
- Parenting Tips: குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
Parenting Tips: குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
குழந்தைக்கு நல்ல நினைவாற்றல் இருந்தால் அவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள். வாழ்க்கையில் சாதனையாளர்களாக மாறுவார்கள். குழந்தைகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சில குறிப்புகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் டிப்ஸ்
தற்போதைய போட்டி நிறைந்த உலகில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அவர்கள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் நினைவாற்றல் நன்றாக இருந்தால் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்னணியில் இருப்பார்கள். எனவே குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த நாம் சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த முடியும். இந்த பழக்க வழக்கங்கள் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அத்தகைய பழக்க வழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
போதுமான தூக்கம்
குழந்தைகளின் மூளை சரியாக செயல்படுவதற்கு போதுமான ஓய்வு அவசியம். குழந்தைகள் தினமும் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் பெற வேண்டும். இரவில் நல்ல தூக்கம் தூங்குவது பகலில் கற்றுக் கொண்ட பாடங்களை மூளையில் சேமிக்க உதவுகிறது. மேலும் போதுமான அளவு தூங்குவது என்பது கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தூக்கமின்மை என்பது பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சரியாக தூங்காமல் இருப்பது, அதிக விளையாட்டுத்தனம் ஆகியவை கவனம் செலுத்தும் திறனை பாதிக்கிறது. இதன் காரணமாக கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினமாகிறது. எனவே குழந்தைகள் இரவு 8 முதல் 10 மணி நேரம் வரை சரியாக தூங்குகிறார்கள் என்பதை கவனியுங்கள். மொபைல்போன், டிவி, லேப்டாப் ஆகியவற்றை பார்ப்பதை குறைத்து விட்டு இரவு சீக்கிரம் தூங்க அனுமதியுங்கள்.
சத்தான காலை உணவு
குழந்தைகள் காலையில் உட்கொள்ளும் உணவானது மிக முக்கியமானது. இது மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சக்தியை வழங்குகிறது. பரபரப்பான காலை வேளையில் பல குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளாமல் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால் இது தவறான முறையாகும். காலையில் தானியங்கள், பழங்கள், பால் போன்ற சத்தான உணவை கொடுக்க வேண்டும். குழந்தையின் வயிறு நிரம்பி இருக்கும் பொழுது தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். சுறுசுறுப்பாக வகுப்பறையை கவனிக்க முடியும். இதனால் அவர்கள் பாடங்களை கவனமாக கேட்கிறார்கள். காலை உணவை தவிர்ப்பது என்பது கவனம் செலுத்துவதில் குறைபாடை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு சத்தான காலை உணவை அளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாசிப்பை அதிகரித்தல்
குழந்தைகள் கையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். டிவி பார்ப்பதை குறைத்து விடுங்கள். அதற்கு பதிலாக கதை புத்தகங்கள், செய்தித்தாள்கள் அல்லது குழந்தைகளுக்கு விருப்பமான பிற புத்தகங்களை ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் வாக்கிய அமைப்பை கற்றுக் கொள்வார்கள். அவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். குழந்தைகள் புத்தகம் படிக்க மறுத்தால் நீங்கள் கதை சொல்லுங்கள். கதைகள் கற்பனைகளாக குழந்தைகளின் கண்களில் விரியும் போது அது அவர்களின் நினைவாற்றலை தூண்டும்.
விளையாட்டுகள் மூலம் கற்றல்
நினைவாற்றலை மேம்படுத்தும் பல விளையாட்டுகள் உள்ளன. உதாரணமாக, "மெமரி கார்டு" விளையாட்டுகள், புதிர் விளையாட்டுகள், அல்லது பொருட்களை ஒளித்து வைத்து எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கச் சொல்வது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் நினைவாற்றலைச் சுறுசுறுப்பாக்கும். பாடல்களைப் பாடி, அசைவுகளுடன் இணைத்துக் கற்றுத்தருவதும் நினைவாற்றலை மேம்படுத்தும்.