MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சட்டுபுட்டுனு சமைக்கணுமா? இதோ யாரும் சொல்லாத 6 ஸ்மார்ட் ரகசியங்கள்!

சட்டுபுட்டுனு சமைக்கணுமா? இதோ யாரும் சொல்லாத 6 ஸ்மார்ட் ரகசியங்கள்!

காலையில் எழுந்தாலே "இன்னைக்கு என்ன சமைக்கிறது, எப்படி சீக்கிரம் முடிக்கிறது?" என்கிற கவலை தான் பலருக்கும் பெரிய தலைவலி. சமையலறையில் மணிக்கணக்காக நிற்பதை மாற்றி, சட்டுபுட்டென்று சமையலை முடிக்க இதோ யாரும் சொல்லித்தராத 6 சூப்பர் ஸ்மார்ட் ரகசியங்கள்.

2 Min read
Author : Priya Velan
Published : May 25 2026, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெங்காயம் சீக்கிரம் வதங்க :
Image Credit : Getty

வெங்காயம் சீக்கிரம் வதங்க :

வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பு போடுவது பழைய ஸ்டைல். இனிமேல் வெங்காயத்தை எண்ணெயில் போட்டுவிட்டு, ஒரே ஒரு ஸ்பூன் தண்ணீர் தெளித்து மூடி வையுங்கள். தண்ணீரின் ஆவியில் வெங்காயம் 2 நிமிடத்தில் பொன்னிறமாக வதங்கிவிடும். நேரமும் மிச்சம், கேஸும் மிச்சம்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
தக்காளி வதங்க நேரமாகுதா?
Image Credit : Getty

தக்காளி வதங்க நேரமாகுதா?

தக்காளி வதங்கி தொக்காக மாற ரொம்ப நேரமாகும். அதற்கு தக்காளியை வாங்கியதும் நன்றாகக் கழுவி, முழுசாக அப்படியே ஃப்ரீசரில் (Freezer) போட்டுவிடுங்கள். சமைப்பதற்கு 5 நிமிடம் முன்பு எடுத்து தண்ணீரில் போட்டால், தோல் தானாக உறிந்து வரும். அதை அப்படியே நசுக்கிப் போட்டால், 1 நிமிடத்தில் குழைந்து கிரேவி ரெடி!

Related Articles

Related image1
kitchen tips சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறைக்க 5 புதுமையான வழிகள்!
Related image2
kitchen tips சிறிய கிச்சனை "பெரியதாக" மாற்றும் 10 ரகசிய டிப்ஸ்!
36
கீரை நறுக்க கத்தி வேண்டாம்!
Image Credit : Getty

கீரை நறுக்க கத்தி வேண்டாம்!

கொத்தமல்லி, புதினா, கீரை வகைகளை அரிவாள்மனையிலோ, கட்டிங் போர்டிலோ நறுக்கினால் நேரம் வீணாகும். சமையலறைக்கென ஒரு பிரத்யேக கத்தரிக்கோல் (Kitchen Scissors) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே கொத்தாகப் பிடித்து கடாயின் மேலேயே நறுக்கிப் போட்டுவிடலாம். போர்டை கழுவும் வேலையும் மிச்சம்!

46
நகம் வலிக்க பூண்டு உரிக்காதீங்க!
Image Credit : Getty

நகம் வலிக்க பூண்டு உரிக்காதீங்க!

சமையலில் அதிக நேரம் எடுப்பது பூண்டு உரிப்பது தான். இனிமேல் பூண்டுப் பற்களை தனித் தனியாகப் பிரித்து, லேசான சுடுதண்ணீரில் 5 நிமிடம் போட்டு வையுங்கள். அதன் பிறகு கையில் எடுத்து லேசாக அமுக்கினால், பூண்டுத் தோல் தானாகக் கழன்று வந்துவிடும். நகமும் வலிக்காது, வேலையும் முடியும்!

56
உருளைக்கிழங்கு 5 நிமிடத்தில் வேகணுமா?
Image Credit : Getty

உருளைக்கிழங்கு 5 நிமிடத்தில் வேகணுமா?

உருளைக்கிழங்கு குக்கரில் வெந்து வர 3, 4 விசில் விட வேண்டும். அதற்குப் பதிலாக, உருளைக்கிழங்கைக் கழுவிவிட்டு, ஒரு போர்க் ஸ்பூனால் (Fork) ஆங்காங்கே குத்தி குடையுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 5 நிமிடம் வைத்தாலோ அல்லது குக்கரில் வைத்தாலோ, பாதி நேரத்திலேயே பஞ்சு போல வெந்துவிடும்!

66
இஞ்சி பூண்டு பேஸ்ட் 'ஐஸ் கியூப்'!
Image Credit : Getty

இஞ்சி பூண்டு பேஸ்ட் 'ஐஸ் கியூப்'!

தினமும் இஞ்சி பூண்டு அரைக்க சோம்பேறித்தனமாக இருக்கிறதா? மொத்தமாக அரைத்து, ஐஸ் கியூப் ட்ரேயில் (Ice Cube Tray) ஊற்றி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். கட்டியானதும் எடுத்து ஒரு கவரில் போட்டு வைக்கலாம். சமைக்கும் போது ஒரு கியூப் மட்டும் எடுத்து அப்படியே எண்ணெயில் போட்டால் வேலை முடிந்தது. பிரஷ்ஷாகவும் இருக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gen Z மூக்குத்தி ட்ரெண்ட்ஸ்: 90ஸ் நாஸ்டால்ஜியா முதல் மினிமலிஸ்ட் வரை!
Recommended image2
CM Vijay உத்தரவு : மஞ்சும்மல் பாய்ஸ் போன இடத்துக்கு நீங்க Free-ஆ போலாம்
Recommended image3
தங்க முலாம் பூசிய ஜிமிக்கி கம்மல்கள் பெண்களுக்கான ஜும்கா டிசைன்கள்
Related Stories
Recommended image1
kitchen tips சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறைக்க 5 புதுமையான வழிகள்!
Recommended image2
kitchen tips சிறிய கிச்சனை "பெரியதாக" மாற்றும் 10 ரகசிய டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved