MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • kitchen tips சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறைக்க 5 புதுமையான வழிகள்!

kitchen tips சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறைக்க 5 புதுமையான வழிகள்!

இப்போதெல்லாம் பட்ஜெட்டை பதம் பார்ப்பது சமையல் எண்ணெய் தான். ஆரோக்கியத்திற்கும் நல்லது இல்லை, பணமும் விரயமாகிறது என கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்! சுவை குறையாமல், எண்ணெய் செலவை பாதியாகக் குறைக்கும் 5 சூப்பரான புதிய ஹேக்ஸ் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : May 21 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐஸ் கியூப் தந்திரம்
Image Credit : Getty

ஐஸ் கியூப் தந்திரம்

குழம்பு அல்லது கிரேவி செய்யும் போது தெரியாமல் எண்ணெய் அதிகமாகிவிட்டதா? கவலையே வேண்டாம், ஒரு ஐஸ் கட்டியை கரண்டியில் வைத்து குழம்பின் மேல் லேசாக சுழற்றுங்கள். குழம்பில் மிதக்கும் கூடுதல் எண்ணெய், ஐஸ் கட்டியின் குளிர்ச்சியால் கரண்டியின் அடியில் உறைந்து ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே அள்ளி வெளியில் போட்டுவிடலாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிரஷ்ஷிங் மேஜிக்
Image Credit : Getty

பிரஷ்ஷிங் மேஜிக்

தோசை, சப்பாத்தி சுடும் போது பாட்டிலில் இருந்து நேரடியாக எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக சிலிகான் ஆயில் பிரஷ் (Oil Brush) பயன்படுத்துங்கள். ஸ்பூனால் ஊற்றும் போது தேவைக்கு அதிகமாகவே எண்ணெய் விழும். ஆனால் பிரஷ் மூலம் தடவும் போது வெறும் இரண்டு சொட்டு எண்ணெயே கல் முழுவதும் பரவி, கரகரப்பான தோசையைத் தரும். மாதத்திற்கு 1 லிட்டர் எண்ணெய் மிச்சமாகும்!

35
வறுத்த உருளைக்கிழங்கு சீக்ரெட்
Image Credit : Getty

வறுத்த உருளைக்கிழங்கு சீக்ரெட்

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் செய்யும் போது, காய்கறிகளை நேரடியாக எண்ணெயில் போட்டு வதக்கக் கூடாது. முதலில் உப்பு கலந்த தண்ணீரில் பாதியளவு வேகவைத்து (Parboiled), தண்ணீரை வடித்த பின் வறுக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள் ஸ்பாஞ்ச் போல எண்ணெயை உறிஞ்சும். ஆனால் பாதியளவு வெந்த காய்கறிகள் மிகக் குறைந்த எண்ணெயிலேயே சடசடவென மொறுமொறுப்பாக மாறிவிடும்.

45
வெங்காய சாறு ஸ்ப்ரே
Image Credit : Getty

வெங்காய சாறு ஸ்ப்ரே

வதக்குவதற்கு முன் கடாயில் எண்ணெயை ஊற்றுவதற்குப் பதிலாக, கடாய் சூடானதும் கொஞ்சம் வெங்காயச் சாறு அல்லது தண்ணீரை லேசாகத் தெளித்துவிட்டு, பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். பாத்திரத்தின் அடிப்பகுதி வறட்சியாக இல்லாததால், காய்கறிகள் அடிபிடிக்காது. இதனால் வழக்கமாக ஊற்றும் எண்ணெயில் பாதியளவே வதக்குவதற்குப் போதுமானதாக இருக்கும்.

55
எண்ணெய் இல்லாத அப்பளம்
Image Credit : Getty

எண்ணெய் இல்லாத அப்பளம்

அப்பளம், வடகம் பொரிக்க இனி கடாய் நிறைய எண்ணெய் ஊற்றி கேஸையும், எண்ணெயையும் வேஸ்ட் பண்ணாதீங்க. அப்பளத்தின் மேல் லேசாக தண்ணீர் அல்லது ஒரு சொட்டு எண்ணெய் தடவி மைக்ரோவேவ் ஓவனில் 30 நொடிகள் வையுங்கள். ஓவன் இல்லாதவர்கள், வெறும் வாணலியில் உப்பை சூடாக்கி, அந்த சூடான உப்பிற்குள் அப்பளத்தைப் போட்டு எடுத்தால், எண்ணெய் இல்லாமலேயே அப்பளம் அச்சு அசலாகப் பொரிந்து வரும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
எண்ணெய்
சமையல் எரிவாயு
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pressure Cooker: ஒரே குக்கரை ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? உடனே மாத்துங்க.. ஏன் தெரியுமா?
Recommended image2
Chennai Budget Shopping: டிமார்ட், ஜியோமார்ட் மட்டுமல்ல! சென்னையில் இந்த சந்தைகளுக்குப் போங்க… குறைந்த விலையில் அள்ளிக்கிட்டு வரலாம்!
Recommended image3
Coffee Powder Storage : காபி பொடி கட்டியாக மாறுகிறதா? மணமும் சுவையும் மாறாமல் பாதுகாக்க இந்த சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Kitchen Garden: மளிகை செலவு பாதியாகும்! கோடையில் இந்த 10 காய்கறிகளை ஈஸியா வளர்க்கலாம்
Recommended image2
kitchen tips சிறிய கிச்சனை "பெரியதாக" மாற்றும் 10 ரகசிய டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved