MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • திடீரென கெஸ்ட் வந்துட்டாங்களா? 10 நிமிடத்தில் சமையலை முடிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்

திடீரென கெஸ்ட் வந்துட்டாங்களா? 10 நிமிடத்தில் சமையலை முடிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்

இனிமேல் திடீரென சொல்லாமல் வீட்டுக்கு கெஸ்ட் வந்தால், அவங்களுக்கு என்ன சாப்பிட கொடுப்பது என பதறவே வேண்டாம். சமையலறைக்குள்ள பூந்து வெறும் 10 நிமிடத்தில் ராயலா ஒரு சாப்பாட்டை ரெடி பண்ணி அவங்கள அசத்திடலாம், ஸ்மார்ட்டான இந்த சமையல் ஐடியாக்கள் தெரிந்தால்

2 Min read
Author : Priya Velan
Published : Jun 11 2026, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெங்காயம் வதங்க லேட் ஆகுதா?
Image Credit : Getty

வெங்காயம் வதங்க லேட் ஆகுதா?

அவசரமா கிரேவி அல்லது பிரியாணி செய்யும் போது வெங்காயம் வதங்கவே ரொம்ப நேரமாகும். வெங்காயத்தைப் போட்டதும் ஒரு சிட்டிகை சர்க்கரை (Sugar) தூவுங்க. வெங்காயம் சட்டுனு 'கேரமலைஸ்' ஆகி, 2 நிமிஷத்துல பொன்னிறமா வதங்கிடும். நேரமும் மிச்சம், கிரேவியும் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மிக்ஸியைத் தொடாதீங்க...
Image Credit : Getty

மிக்ஸியைத் தொடாதீங்க...

தக்காளி, இஞ்சி, பூண்டு அரைக்க மிக்ஸியைக் கழுவி, ஆன் பண்ணி நேரத்தை வீணாக்காதீங்க. காய் துருவும் கேரட் துருவி (Grater) இருந்தா போதும். தக்காளியையும், இஞ்சி பூண்டையும் சட்டுனு அதுல துருவிப் போடுங்க. மிக்ஸியில் அரைத்ததை விட தக்காளி கிரேவி செம்ம திக்காக, சீக்கிரமாக ரெடியாகும்!

Related Articles

Related image1
Cooking Tips : இந்த 'ரகசியம்' தெரிஞ்சவங்க சமையல்ல கில்லாடியா ஆகிடுவங்க! ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க
Related image2
Cooking Tips : முட்டை வேக வைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருள் சேர்த்தா போதும்.. ஒரு கீறல் விழாம உடையாமல் வரும்!
36
'ஒன்-பாட்' (One-Pot) சாம்பார் சாதம் அல்லது பிரியாணி:
Image Credit : Getty

'ஒன்-பாட்' (One-Pot) சாம்பார் சாதம் அல்லது பிரியாணி:

தனித்தனியா சாதம் வச்சு, குழம்பு வச்சு நேரத்தை வீணாக்காதீங்க. குக்கரை எடுங்க.. அரிசி, பருப்பு, வீட்ல இருக்குற காய்கறிகள், சாம்பார் தூள் எல்லாத்தையும் ஒண்ணா போட்டு 3 விசில் விடுங்க. இறக்கி நெய் ஊத்துனா கமகம 'ஒன் பாட் சாம்பார் சாதம்' ரெடி. சைடு டிஷ்க்கு அப்பளம் பொரிச்சா வேலை முடிந்தது!

46
சட்னி அரைக்க நேரமில்லையா?
Image Credit : Getty

சட்னி அரைக்க நேரமில்லையா?

வந்தவங்களுக்கு டிபன் செய்யும் போது சட்னி, சாம்பார்னு தனித்தனியா செய்ய டைம் இல்லைனா, இன்ஸ்டன்ட்டா தயிர் பச்சடி செய்யுங்க. தயிர்ல கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு போட்டா 2 நிமிஷத்துல பச்சடி ரெடி. இது சப்பாத்தி, பூரி, புலாவ், பிரியாணினு எல்லாத்துக்கும் செட் ஆகும்.

56
5 நிமிட 'ஷாஹி பாயசம்' (Desert Instant Hack)
Image Credit : Getty

5 நிமிட 'ஷாஹி பாயசம்' (Desert Instant Hack)

விருந்துனா ஸ்வீட் இல்லாமல் எப்படி? வீட்டில் இருக்குற அவல் அல்லது சேமியாவை நெய்யில் வறுத்து, காய்ச்சிய பாலில் கொட்டி, சர்க்கரை போடுங்க. லாஸ்ட்டா கொஞ்சம் மில்க்மெய்ட் (Condense Milk) சேர்த்தா, அஞ்சே நிமிஷத்துல கல்யாண வீட்டு பாயசம் தோத்துப் போற அளவுக்கு ரிச்சான பாயசம் தயார்!

66
ஸ்மார்ட் இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ்:
Image Credit : Getty

ஸ்மார்ட் இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ்:

எப்போதும் பிரிட்ஜில் ஒரு பாக்கெட் பன்னீர் அல்லது மஷ்ரூம் ஸ்டாக் வைப்பது நல்லது (10 நிமிடத்தில் கிரேவி செய்யலாம்). வறுத்த முந்திரி, வறுத்த ரவை எப்போதும் அஞ்சறைப் பெட்டியில் இருந்தால், வந்த வேகத்தில் உப்மாவோ அல்லது கேசரியோ சட்டுனு கிளறலாம். ரெடிமேட் பரோட்டா அல்லது சப்பாத்தி பாக்கெட்டுகள் அவசர காலத்தில் கைகொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
பெண்கள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் இல்லாமல் வாழும் தமிழ்ப் பெண்கள் : இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்! அதிர்ச்சியூட்டும் உண்மை!
Recommended image2
Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!
Recommended image3
Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!
Related Stories
Recommended image1
Cooking Tips : இந்த 'ரகசியம்' தெரிஞ்சவங்க சமையல்ல கில்லாடியா ஆகிடுவங்க! ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க
Recommended image2
Cooking Tips : முட்டை வேக வைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருள் சேர்த்தா போதும்.. ஒரு கீறல் விழாம உடையாமல் வரும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved