பெற்றோர் சொல்றத குழந்தைங்க மதிக்கலயா? இதுதான் காரணம்.. உடனே மாத்துங்க!!
பெற்றோர் சொல்வதை குழந்தைகள் கேட்காமல் அலட்சியம் செய்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு காணலாம்.

Why Kids Don't Listen to Parents : குழந்தைகள் எப்போதுமே பெற்றோர் பேச்சை கேட்காமல் இருந்தால் அதற்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். ஏனென்றால் தொடர்ந்து பெற்றோர் சொல்வதை குழந்தைகள் கேட்காவிட்டால் அது பெற்றோரை எரிச்சலடைய செய்யும். இதற்காக குழந்தைகளிடம் கோபப்படாமல், அவர்களை தண்டிக்காமல் அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். பிரச்சனையை வேரிலிருந்து நீக்குவது தான் அதற்கான தீர்வாக இருக்கும்.
parenting tips
பல பெற்றோர் குழந்தைகளுக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை. சொல்வது இன்று செய்வது ஒன்று என பல பெற்றோர் செயல்படுகிறார்கள். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோர் சொன்னதை செய்யமாட்டார்கள் என நம்பத்தொடங்குகிறார்கள். இதனால் பெற்றோர் சொல்வதை குழந்தைகள் அலட்சியம் செய்ய தொடங்குகிறார்கள்.
parenting tips
குழந்தைகளை கட்டாயப்படுத்துவதால் அவர்கள் சொல் பேச்சு கேட்காத குழந்தைகளாக வளர்கிறார்கள். அதே போல அவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் பெற்றோராக இருந்தாலும் கொஞ்சம் சிக்கல்தான். குழந்தைகளுக்கு அனைத்து நல்ல விஷயங்களையும் பெற்றோர் செய்துகொடுத்தாலும் சில நேரங்களில் அவர்களுக்கு 'நோ' சொல்லவும் கற்று கொள்ளவேண்டும். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்தால் எல்லாமே கிடைக்கும் என்ற எண்ணம் வந்துவிடும். அவர்களுக்கு கிடைக்கும் பொருள்களின் மதிப்பு தெரியாது.
parenting tips
குழந்தைகள் பசி, தூக்கம், தனிமை, சலிப்பு, கோபம் போன்றவை உணரும்போதும் பெற்றோர் சொல்வதை கேட்பதில்லை. இதனால் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது போல தோன்றலாம். குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் அருகாமைக்காக கவனம் ஈர்ப்பு நடவடிக்கையாக சொல் பேச்சைக் கேட்காமல், முரட்டுத்தனமாக நடப்பார்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவர்களை மாற்றும்.
இதையும் படிங்க: குழந்தைகள் சோம்பேறியாக பெற்றோர் செய்யும் '3' தவறுகள் தான் காரணம்.. உடனே மாத்துங்க
parenting tips
குழந்தைகளுக்கு தனித்துவமான முக்கியத்துவங்கள் இருக்கும். பெற்றோருக்கு வேலைக்கு செல்வது, பணம் சம்பாதிப்பது, குழந்தைகளை நன்றாக பராமரிப்பது போன்றவை தான் தினசரி வழக்கமாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியான பொறுப்புகள் இருக்காது. அவர்களை பொறுத்தவரை புதியதாக கற்றுக் கொள்ளுதல், விளையாடுதல், படித்தல் போன்றவைதான் பிரதானமாக இருக்கும். நீங்கள் குழந்தைகளுடன் அவர்களின் பிரதான விஷயங்களுடன் உங்களை இணைத்து கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே நட்புறவு ஏற்படும்.
இதையும் படிங்க: உங்க குழந்தை புத்திசாலியா? இந்த '5' விஷயம் வைச்சு கண்டுபிடிங்க!!
parenting tips
இங்கு கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் ஒன்றினை செய்யும் பெற்றோராக நீங்கள் இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய குழந்தைக்கும், உங்களுக்கும் இடையேயான உறவை நீங்கள் வலுப்படுத்தும் போது அவர்கள் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.