குழந்தைகள் சோம்பேறியாக பெற்றோர் செய்யும் '3' தவறுகள் தான் காரணம்.. உடனே மாத்துங்க
Parenting Mistakes : பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களது குழந்தைகளை சோம்பேறிகளாக்குகின்றன. எனவே அவற்றை அறிந்து உடனடியாக மாற்றுவது தான் நல்லது.

குழந்தைகள் சோம்பேறியாக பெற்றோர் செய்யும் '3' தவறுகள் தான் காரணம்.. உடனே மாத்துங்க
பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்த தெரியாமல் சில தவறுகளை செய்து விடுகிறார்கள். ஆனால் அது குழந்தைகளை சோம்பேறிகளாக்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மேலும் பெற்றோர் செய்யும் அந்த தவறினால் குழந்தைகள் பிடிவாதம் ஆகி பெற்றோர்கள் பேச்சைக் கூட கேட்காமல் போகிறார்கள். சில சமயங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் செல்வதை காதில் கூட வாங்காமல், அது அப்படியே விட்டு விடுகிறார்கள் மேலும் குழந்தைகள் தாங்கலாகவே எந்த வேலையும் செய்ய கூட விரும்புவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொறுப்புகளில் இருந்து ஓடத்தான் தொடங்குகிறார்கள். எனவே இவை அனைத்திற்கும் வளர்ப்பு ஒரு பெரிய பங்கை வகிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை சோம்பேறிகள் ஆகும் பெற்றோர் செய்யும் சில தவறுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தவறை கண்டுபிடிப்பது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அந்த குழந்தை அதை செய்து முடித்தால், பெற்றோர்கள் வேலையை புகழ்வதற்கு பதிலாக குழந்தைகள் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பதை நிறுத்தவில்லை என்றால், அதனால் அந்த குழந்தையின் மீது மோசமான தாக்கம் ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் நீங்கள் கொடுக்கும் வேலையை செய்ய தவிர்க்கத் தொடங்குவார்கள். மேலும் உங்களுக்கு கீழ்ப்படியாமல் போய்விடுவார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் போது 'இந்த' தப்ப பண்ணாதீங்க!
குழந்தை மீது நம்பிக்கை இல்லாதது
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை முழுமையாக நம்ப வேண்டும். ஆனால், குழந்தைகளை நம்பாத பெற்றோரின் குழந்தைகள் படிப்படியாக தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க தொடங்குவார்கள். இது தவிர சில விஷயங்களுக்கு தங்கள் குழந்தைகளை அடிக்கும் பழக்கம் உள்ள பெற்றோரின் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரிடமிருந்து விலகி இருக்க விரும்புவார்கள் மேலும் அவர்கள் பெற்றோர் சொல்வதை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள். காலப்போக்கில் சோம்பேறிகளாக மாறுகிறார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோரின் இந்த '4' பழக்கங்கள் தான் காரணம்!
அதிகப்படியான விசாரணை
உங்கள் குழந்தையின் மீது அதிகப்படியான கேள்வி கேட்கிறீர்கள் என்றால் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையும். இதன் காரணமாக நீங்கள் கொடுக்கும் எந்த ஒரு வேலையும் செய்வதை அவர்கள் தவிர்ப்பார்கள். மேலும் அவர்களது தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக உங்களிடமிருந்து அவர்கள் தூரமாக விலக தொடங்குவார்கள். இதன் காரணமாக குழந்தைகள் சோம்பேறிகளாக மாறிவிடுகிறார்கள்.
குறிப்பு : பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வார்த்தைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் குழந்தைகள் உங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். மேலும் உங்களிடம் இருக்கும் இந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.