உங்க குழந்தை புத்திசாலியா? இந்த '5' விஷயம் வைச்சு கண்டுபிடிங்க!!
உங்கள் குழந்தை புத்திசாலியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள சில எளிய வழிகள் இங்கே.

Signs Of Intelligence In Child : ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விஷயத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்களது தனித்துவமான திறன்கள் மற்றும் குணங்கள் அவர்களை தனித்துவமாக காட்டுகின்றன. எப்படி இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்த வழியில் தான் சிந்திப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், சில குழந்தைகள் மேலான புத்திசாலியாகவும், பிற குழந்தைகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி காட்டும் திறன்கள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தையிடம் இருக்க சில தனித்துவமான பண்புகளை வைத்து அவர்கள் புத்திசாலியா, இல்லையா என்பதே அறிந்து கொள்ளலாம். அவை..
உங்க குழந்தை புத்திசாலியா என்பதை கண்டறிய சில டிப்ஸ்:
1. சீக்கிரமே பேசுதல்
உங்கள் குழந்தை புத்திசாலியாக இருந்தால் ஒரு வயதிற்குள்ளேயே சில வார்த்தைகளை பேசி விடுவார்கள். ஒன்றரை வயதில் அவர்கள் இன்னும் தெளிவாக பேசுவார்கள். உண்மையில் புத்திசாலி குழந்தைகள் சீக்கிரமாகவே பேச முயற்சி செய்வார்கள்.
2.சமூகத் திறன்
உங்கள் குழந்தை உடனே யாரிடமாவது பழகுகிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு நல்ல உறவுகளை உருவாக்கும் பண்புகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
3. கொஞ்சம் பிடிவாதம்
குழந்தைகள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பது நல்லது தான். ஏனெனில் அப்போதுதான் அவரிகளின் சுயமாக சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
4. உடல் வளர்ச்சி
தவழ்தல், நிற்பது, உட்கருத்தல் போன்றவை குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வார்கள். ஆனால் உங்களது குழந்தை அவற்றை மிகவும் விரைவாக கற்றுக் கொண்டால் அவர்கள் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: Parenting Tips: பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க பெற்றோர் செய்யவேண்டியது என்ன?
5. நீண்ட கவனம்
உண்மையில் குழந்தைகளால் 10 15 நிமிடத்திற்கு மேலாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. ஆனால் உங்களது குழந்தை ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்தினால் அவர்கள் புத்திசாலிகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
6. ஆர்வம்
உங்கள் குழந்தை எதையாவது தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் புத்திசாலிகள் என்பதே நீங்கள் புரிந்து கொள்ளவும்.
இதையும் படிங்க: குழந்தைகள் சோம்பேறியாக பெற்றோர் செய்யும் '3' தவறுகள் தான் காரணம்.. உடனே மாத்துங்க
7. நினைவாற்றல்
உங்கள் குழந்தை எந்த விஷயத்தையும் மிகவும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நல்ல நிறைவாற்றல் இருக்கிறது என்று அர்த்தம்.
8. சிக்கல் தீர்க்கும் திறன்
உங்கள் குழந்தையால் கடினமான பிரச்சனைகளை கூட மிகவும் எளிதாக கையாளும் திறன் இருக்கிறது என்றால் அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.
9. படைப்பாற்றல்
உங்கள் குழந்தை புதிய விஷயங்களை உருவாக்க விரும்புகிறார்கள் அல்லது சிந்திக்க விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் ஆக்கபூர்வமான சிந்தனையாளர் என்று அர்த்தம்.
குறிப்பு : ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.