இதை செய்தால் போதும்... இனி உங்கள் குழந்தை இருட்டு கண்டு பயப்படாது..!!
Parenting Tips : உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் இருட்டின் பயத்தை போக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை.
பயம் என்பது அனைவரிடம் இருக்கும் ஒரு பொதுவான விஷயம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இருப்பது என்றால் சொல்லவே வேண்டாம். காரணம், குழந்தைகள் அதிகமாக பயப்படுவது இருட்டை கண்டு தான். இந்நிலையில், பல குழந்தைகள் இரவு தூங்கும் நேரத்தில், இருட்டில் ஒரு உருவம் தன்னை நோக்கி வருகிறது என்று சொல்லுவதை நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். சில சமயங்களில் குழந்தைகள் இதனால் கத்துவார்கள், அழுவார்கள். மேலும் அவர்களது ரூமில் லைட் போட்டால் தான் தூங்குவார்கள் என்று அடம் பிடிப்பார்கள்.
இந்த பயம் குழந்தைகளுக்கு வருவது ஒரு பொதுவான விஷயமாகும். குழந்தைகள் இப்படி இருட்டைக் கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம், டிவியில் காட்டப்படும் பேய் படங்கள், அவர்கள் கேட்கும் பேய் கதைகள் போன்றவையாகும். சில சமயங்களில் தேவையில்லாத புத்தகங்கள் கூட, குழந்தைகளின் மனதில் பயத்தை உண்டாக்குகிறது.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. தினமும் காலை இந்த 5 விஷயங்களை செய்ங்க.. உங்க குழந்தை புத்திசாலியாகும்!
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?:
இரவு நேரத்தில் இருட்டை கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், அவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கேளுங்கள்.
அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதால், முதலில் அவர்களது பயத்தை போக்க வேறு நல்ல விஷயங்களில் அவர்களை திசை திருப்புங்கள். இல்லையெனில், அவர்கள் மேலும் பயப்பட வாய்ப்பு அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி அவர்கள் பயத்தை குறித்து ஒருபோதும் கிண்டல் அடிக்கக்கூடாது. மீறினால், அவர்கள் வெட்கப்பட்டு உங்களிடம் எதையும் சொல்லாமல், அவர்களது பயத்தை மறைக்க ஆரம்பித்து விடுவார்கள். இது அவர்களது வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாகிவிடும். குறிப்பாக அவர்கள் எப்போதும் பாதுகாப்பு இல்லாமல் உணர்வார்கள். எனவே, அவர்கள் பயப்படும் சமயத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உண்டாக்குங்கள். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் பயத்தை சமாளிக்க கற்றுக் கொள்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் இருட்டின் பயத்தை போக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
குழந்தைகளிடம் இருக்கும் இருட்டின் பயத்தை போக்க சில குறிப்புகள் :
1. உங்கள் குழந்தைகள் தூங்கும் அறையில் லேசான வெளிச்சம் வரும் லைட்டை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் குழந்தைகள் இரவில் எந்தவித பயமும் இல்லாமல், நிம்மதியாக தூங்குவார்கள்.
2. உங்கள் குழந்தைகள் இருட்டைக் கண்டு பயப்படும் போது அந்த சமயத்தில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது உணர்கிறார்கள் என்பதை முதலில் கேளுங்கள். பிறகு அதற்கு தகுந்தார்வாறு அவர்களது பயத்தை போக்குங்கள்.
3. உங்கள் குழந்தையின் அறை இருட்டாக இருக்கும்போது அல்லது வெளிச்சத்தில் இருக்கும் போது, அது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள் இப்படி செய்வதன் மூலம் அவர்களது பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
4. உங்கள் குழந்தையின் அறையில் லேசான வெளிச்சத்தை கொடுக்கும் லைட்டை பொருத்தும் போது, அதிலிருந்து வரும் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் படி வையுங்கள். இப்படி செய்தால் உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவர்கள் வலிமையாக மாறுவார்கள். பிறகு அவர்களே லைட்டை ஆப் செய்து விட்டு தூங்கிவிடுவார்கள்.
5. நீங்கள் உங்கள் வீட்டு ஹாலில் இருக்கும் லைட்டை, உங்கள் குழந்தை தூங்கிய பிறகே, அணைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
6. சில சமயங்களில் உங்கள் குழந்தையின் அறையில் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு உங்கள் குழந்தையுடன் இருங்கள். உருவம் ஏதுமில்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களை எதற்கும் பயப்படாமல் உணர வையுங்கள். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இருட்டில் பழக்குங்கள். இப்படி செய்வதன் மூலம், அவர்களது பயமானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
நினைவில் கொள் :
உங்கள் குழந்தை தனி அறையில் தூங்கும் போது எதையாவது கண்டு பயந்து எழுந்தால் உடனே அதை உங்களிடம் தெரிவிக்க, அவர்களது ரூமில் கண்டிப்பாக தொலைபேசி இருக்க வேண்டும்.
முக்கியமாக உங்கள் குழந்தை தூங்கும் முன் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள், பேசுங்கள்அல்லது இனிமையான இசை கேட்க வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், பயமின்றி அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்.
இதையும் படிங்க: பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் விலகி ஓட இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!!