- Home
- Lifestyle
- parental care tips ஸ்கூலுக்கு போக குழந்தை அடம்பிடிக்குதா? 5 நிமிடத்தில் குஷிப்படுத்த 5 சீக்ரெட் டிப்ஸ்
parental care tips ஸ்கூலுக்கு போக குழந்தை அடம்பிடிக்குதா? 5 நிமிடத்தில் குஷிப்படுத்த 5 சீக்ரெட் டிப்ஸ்
காலையில் "ஸ்கூலுக்குப் போக மாட்டேன்" என அழும் குழந்தைகளால் வீடு போர்க்களமாகிறதா? பெற்றோருக்கு இது பெரிய சவால் தான். இனி கவலையை விடுங்கள்! குழந்தைகளை அடிக்காமலும் திட்டாமலும், அவர்களாகவே ஆசையோடு பள்ளிக்குச் செல்ல வைக்கும் 5 அருமையான உளவியல் டிப்ஸ் இதோ

"நைட் டைம்" சஸ்பென்ஸ் கேம்!
நைட்டே குழந்தைகிட்ட, "நாளைக்கு உன்னோட லஞ்ச் பாக்ஸ்ல ஒரு சூப்பர் சஸ்பென்ஸ் ஸ்நாக்ஸ் வைக்கப் போறேன், அது என்னனு ஸ்கூலுக்கு போய் பிரண்ட்ஸ் கூட ஓபன் பண்ணி பாரு" அப்படின்னு ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைங்க. அந்த ஆவலாலேயே காலையில சீக்கிரம் எழுந்துப்பாங்க!
"நீ ஸ்கூலுக்கு போகவே வேண்டாம்!"
"போ... போ..." என்று வற்புறுத்துவதை நிறுத்திட்டு, "பரவாயில்லை, இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம், வீட்லயே இரு. ஆனா மொபைல், டிவி எதுவும் கிடையாது. நான் என் வேலையை பார்ப்பேன்" அப்படின்னு சொல்லி பாருங்க. கொஞ்ச நேரத்துல வீட்ல போர் அடிச்சு, அவங்களே "நான் ஸ்கூலுக்கே போறேன்"னு கிளம்பிடுவாங்க!
அலாரத்தை தூக்கி போடுங்க!
கத்தி எழுப்புறதுக்கு பதிலா, அவங்களுக்கு பிடிச்ச ரைம்ஸ் அல்லது கார்ட்டூன் சாங்க்கை கொஞ்சம் சத்தமா ப்ளே பண்ணுங்க. பாட்டு சத்தம் காதுல விழுந்தாலே மூளை சுறுசுறுப்பாகி, அழுகை மூட் மாறி, ஜாலியா எழுந்துப்பாங்க.
பொறுப்பு கொடுங்க!
"நீ இன்னும் சின்ன குழந்தை, சீக்கிரம் கிளம்பு" அப்படின்னு சொல்லாம, "நீதான் இந்த வீட்டுக்கு பெரிய ஆள். இன்னைக்கு உன்னோட யூனிஃபார்ம், வாட்டர் பாட்டிலை நீயே தான் எடுத்து வைக்கணும்" அப்படின்னு ஒரு 'லீடர்' பொறுப்பைக் கொடுங்க. பெருமிதத்தோட கடகடன்னு வேலை செய்வாங்க!
ஸ்பெஷல் டச்!
ஸ்கூல் வேன் ஏறும்போதோ அல்லது கேட் கிட்ட விடும்போதோ அழுகை வராமல் தடுக்க, அவங்க கூட மட்டும் பிரத்தியேகமா ஒரு "ரகசிய ஹேண்ட்ஷேக்" (Handshake) அல்லது "ஃபிஸ்ட் பம்ப்" (Fist bump) பழக்கத்தை வச்சுக்கோங்க. இது அவங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்து, பிரிந்திருக்கும் பயத்தைப் போக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

