Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
குழந்தைகளோட வளர்ச்சியில பெத்தவங்களுக்கு முக்கிய பங்கு இருக்கு. அதனால, சின்ன வயசுல இருந்தே சில விஷயங்களை அவங்களுக்கு கண்டிப்பா கத்துக்கொடுக்கணும். அது என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
17

சின்ன பாராட்டு நடத்தும் பெரிய அதிசயத்தை
குழந்தைங்க ஏதாவது நல்லது செஞ்சா, 'நீ மட்டும் தான் செஞ்சியா'னு சொல்லி மட்டம் தட்டாதீங்க. சின்னதா பாராட்டுனா கூட, அவங்க இன்னும் உற்சாகமா செயல்படுவாங்க. அடுத்தவங்க பாராட்டணும்னு நினைக்காம, நீங்களே உங்க குழந்தைகளை ஊக்கப்படுத்துங்க.
Add Asianetnews Tamil as a Preferred Source

27
ஸ்பெஷலா பாக்கணும்
'காக்கா குஞ்சு காக்காவுக்கு பொன் குஞ்சு'னு சொல்ற மாதிரி, உங்க குழந்தையை நீங்கதான் ஸ்பெஷலா பாக்கணும். 'எல்லாரையும் போலதான் நீயும்'னு சொல்லாம, 'உன்னால முடியும்'னு சொல்லி அவங்க திறமையை நீங்கதான் அடையாளம் காட்டணும். இந்த பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டும்தான் இருக்கு.
37
சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்லுங்க
மத்தவங்களுக்கு உதவி செய்ற குணத்தை சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கு கத்துக்கொடுக்கணும். அதே மாதிரி, யாராவது நமக்கு உதவி செஞ்சா, அவங்களுக்கு 'நன்றி' சொல்லவும், அந்த உதவியை நினைவில் வெச்சுக்கவும் பழக்கப்படுத்தணும்.
47
கண்டிப்பா பாராட்டுங்க
உங்களுக்கு கஷ்டமான நேரத்துல உங்க குழந்தை சின்ன உதவி செஞ்சா கூட, அதை கண்டிப்பா பாராட்டுங்க. 'இது சின்ன உதவிதானே'னு விடாதீங்க. அந்த உதவி உங்களுக்கு எவ்வளவு பெருசா இருந்துச்சுனு சொல்லுங்க. இது அவங்களை இன்னும் உதவி செய்ய தூண்டும்.
57
'ஐ லவ் யூ' சொல்லுங்க
பெத்தவங்களுக்கு குழந்தைங்க மேல பாசம் இருக்கும். ஆனா, அதை சொன்னா செல்லம் கொடுத்து கெட்டுப் போயிடுவாங்கனு சொல்லாம இருப்பாங்க. அது தப்பு. தினமும் ஒரு முறையாவது 'ஐ லவ் யூ' சொல்லி உங்க அன்பை வெளிப்படுத்துங்க.
67
'நாங்க இருக்கோம்'னு நம்பிக்கை கொடுங்க
சில விஷயங்கள்ல குழந்தைங்க பயப்படுவாங்க. அப்போ, நீங்கதான் அவங்களுக்கு தைரியம் சொல்லணும். 'நாங்க இருக்கோம்'னு நம்பிக்கை கொடுங்க. படிப்புலயோ, விளையாட்டுலயோ தோத்துட்டா, அவங்க மன அழுத்தத்தைக் குறைச்சு, எப்படி ஜெயிக்கலாம்னு வழிகாட்டுங்க.
77
எப்படி சந்தோஷமா இருக்குறதுனு சொல்லிக்கொடுங்க
நீங்க என்ன கத்துக்கொடுக்குறீங்களோ, அதைத்தான் குழந்தைங்க கத்துப்பாங்க. அதனால, எந்த சூழ்நிலையிலும் துவண்டு போகாம, எப்படி சந்தோஷமா இருக்குறதுனு அவங்களுக்கு சொல்லிக்கொடுங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

