Parenting Tips: தப்பி தவறிகூட உங்க குழந்தைகளுக்காக இந்த 5 பொருட்களை வாங்கிடாதீங்க!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கஷ்டப்பட்டு பல பொருட்களை வாங்குவார்கள். ஆனால், சில பொருட்களை மட்டும் வாங்கவே கூடாது என டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். அது என்னென்ன பொருட்கள்னு பார்க்கலாம் வாங்க.
16

Image Credit : Pinterest
வாங்கக் கூடாத பொருட்கள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக விதவிதமான பொருட்களை வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால், சில பொருட்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நல்லதல்ல. குழந்தை நல மருத்துவர் டாக்டர். நிமிஷ் குல்கர்னி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெற்றோர்கள் வாங்கவே கூடாத சில பொருட்களைப் பற்றி விளக்கியுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

26
Image Credit : Pinterest
பேபி வாக்கர்ஸ் (Baby Walkers)
குழந்தைகளுக்கு பேபி வாக்கர்ஸ் வாங்க வேண்டாம் என மருத்துவர் கூறுகிறார். இது குழந்தைகள் சீக்கிரம் நடப்பதைத் தடுக்கும். மேலும், கால் தசைகளின் வளர்ச்சியையும் குறைக்கும். படிக்கட்டுகளில் இருந்து விழுவது போன்ற விபத்துகளுக்கும் இது காரணமாகலாம். இதனால்தான் பல நாடுகளில் பேபி வாக்கர்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.
36
Image Credit : flipkart
ஃப்ரூட் நிப்ளர்ஸ் (Fruit nibblers)
இந்த கருவியில் பழங்களை வைத்து, குழந்தைகள் அதன் சிலிகான் முனையில் இருந்து சாற்றை உறிஞ்சுவார்கள். ஆனால், இது பழத்தின் உண்மையான சுவை மற்றும் தன்மையை குழந்தை உணர்வதைத் தடுக்கும். மேலும், மெல்லும் திறனையும் தாமதப்படுத்தும். இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
46
Image Credit : flipkart
ஒயிட் நாய்ஸ் மெஷின் (White Noise Machine)
இந்த ஒயிட் நாய்ஸ் மெஷின்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால், குழந்தையின் கேட்கும் திறனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர் விளக்குகிறார். அதன் அதிக சத்தம் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு உண்மையில் இந்த இயந்திரங்கள் தேவையில்லை.
56
Image Credit : flipkart
ஹெட் ஷேப்பிங் தலையணை (Head shaping pillow)
குழந்தையின் தலை வடிவத்தை சரிசெய்ய இந்த தலையணைகள் விற்கப்படுகின்றன. ஆனால், குழந்தையின் மூளை வளர வளர, தலையின் வடிவமும் மாறும். அதனால், இந்த தலையணைகள் தேவையில்லை. இது மூச்சுத்திணறல் அபாயத்தையும் ஏற்படுத்தும். சாதாரண, தட்டையான தலையணையே போதுமானது.
66
Image Credit : flipkart
பேபி ஷூஸ் (Baby shoes)
சந்தையில் குழந்தைகளுக்காக பல வண்ணமயமான ஷூக்கள் கிடைக்கின்றன. இவை பார்க்க அழகாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார் மருத்துவர். அதனால், உங்கள் குழந்தையை வெறும் கால்களுடனோ அல்லது சாக்ஸ் அணிந்தோ இருக்க விடுங்கள். குழந்தை கொஞ்சம் வளரும் வரை கடினமான ஷூக்களை தவிர்க்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

