MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • டீ, காபி குடிக்கும் முன்பு இதை 'கண்டிப்பா' செய்யனும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!!

டீ, காபி குடிக்கும் முன்பு இதை 'கண்டிப்பா' செய்யனும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!!

Drink Water Before Tea Or Coffee : டீ அல்லது காபி குடிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதால் உடலுக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 30 2024, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

டீ அல்லது காபி உடலுக்கு தற்காலிக உற்சாகம் தருவது. இந்தியாவில் உள்ள பலருக்கு  'டீ' தான் ஆற்றல் அளிக்கிறது. உணவுக்கு பதிலாக டீயை மட்டும் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.   இந்தியாவை பொறுத்தவரை காலையில் காபி அல்லது டீ அருந்திவிட்டு தான் பலர் வேலையை தொடங்குகின்றனர். குளிர் நேரங்களில் இதமாக உணர சூடான தேநீர் அருந்துவது தான் மக்களுக்கு முதலில் நினைவில் வரும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

ஆனால் அடிக்கடி டீயோ, காபியோ அருந்துவது உடலுக்கு நல்லதல்ல. ஒருவர் அதிகமான அளவில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அது உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். அதிகமான அளவில் காஃபின் உடலுக்குள் செல்வது தான் இந்தப் பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி. இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க நினைத்தால், இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

36
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

 1 டம்ளர் தண்ணீர்: 

 ஒவ்வொரு முறை நீங்கள் டீ அல்லது காபி அருந்தும் முன்பாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள். டீ குடிப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். இப்படி செய்வதால் தேநீர் மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். காலையில் நீங்கள் தேநீர்/ காபி குடிக்கும் முன்னர் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் பிரச்சனைகள் வருவது குறையும். 

இதையும் படிங்க:  நெய் காபி vs நெய் டீ - எதை காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்!!

46
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? 

காபி அல்லது டீ குடிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலில் உள்ள அசிடிட்டி குறைவதற்கு தண்ணீர் குடிப்பது உதவுகிறது. வெறும் வயிற்றில் நீங்கள் காபி அல்லது தேநீரை அருந்தும்போது அது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுத்துகிறது.  உங்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது அது வாயு, அசிட்டி பிரச்சினைகளை மோசமாக்கும். ஆனால் நீங்கள் தண்ணீர் அருந்தி விட்டு டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை குறைகிறது. 

56
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

வயிற்றுப்புண்கள்: 

தொடர்ந்து வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரவு முழுக்க வயிற்றில் அமிலச் சுரப்பு இருந்திருக்கும். டீயும் காபியும் அமிலத்தன்மை வாய்ந்த பானங்கள் தான். இந்த சூழலில் அப்படியே டீயோ காபியோ அருந்தினால் அது வயிற்றின் நிலைமையை மோசமாக்கும். அல்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்க டீ, காபி அருந்து முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமாக கருதப்படுகிறது. 

இதையும் படிங்க:  வெறும் வயித்துல கொத்தமல்லி டீ குடிங்க; எடையை குறைப்பதோடு இன்னும் பல நன்மைகள்!!

66
Drink Water Before Tea Or Coffee In Tamil

Drink Water Before Tea Or Coffee In Tamil

பற்கள் ஆரோக்கியம்: 

டீ அல்லது காபி குடிக்கும் முன்பு தண்ணீர் அருந்துவது பற்களைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். டீ, காபியில் காஃபின் இருப்பது போலவே டானின் என்னும் வேதிப்பொருளும் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் பற்களின் மீது ஒரு அடுக்கை ஏற்படுத்தும். அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை தண்ணீர் அருந்தி சமாளிக்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved