MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நெய் காபி vs நெய் டீ - எதை காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்!!

நெய் காபி vs நெய் டீ - எதை காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்!!

Ghee Coffee And Ghee Tea : நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதை காபி அல்லது டீ எதில் கலந்து குடிக்கும் போது உடலுக்கு நல்ல பலன்களை தரும் என்பது குறித்து இங்கு காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 05 2024, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ghee Coffee And Ghee Tea In Tamil

Ghee Coffee And Ghee Tea In Tamil

காலை எழுந்ததும் காபி அல்லது டீ இதில் ஏதேனும் ஒரு பானத்தை அருந்துவது பெரும்பாலானோருக்கு பழக்கமாக இருக்கும். காபி அல்லது டீ குடிக்காமல் ஒரு நாளை தொடங்குவது பலருக்கும் சிரமமாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பானங்களும் உடலுக்கு அந்த அளவுக்கு நன்மையை தராது எனவும் கூறப்படுகிறது.

தினமும் காஃபின் என்ற பொருள் உள்ள காபியை குடிப்பதால் தூக்க கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நெய் அப்படியல்ல அதில் பல நன்மைகள் உள்ளன. காபி அல்லது டீயில் நெய்யை கலந்து குடிப்பது உடலுக்கு நன்மையை தருவதாக பரவலாக பேசப்படுகிறது. அது உண்மையா? என்பதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ghee Coffee And Ghee Tea In Tamil

Ghee Coffee And Ghee Tea In Tamil

நெய் டீ (Ghee tea) : 

வரக்காப்பி என சொல்லப்படும் பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதை தான் நெய் டீ (Ghee Tea) என்கிறார்கள்.  இது நம்மூர் கலாச்சாரம் இல்லை. இதனை திபெத்தில் பாரம்பரியமாக தயாரிக்கிறார்கள். அங்கு  வெண்ணெய் டீ தயாரிப்பது போல தான் தற்போது நெய் டீயை தயாரிப்பது பிரபலமாகிவருகிறது.  திபெத்தியர்கள் டீயில் யோக் வெண்ணெய், கொஞ்சம் உப்பு கலந்து தயாரிப்பார்கள். இதற்கு வெண்ணெய் டீ என பெயர். இந்த டீ நல்ல கிரீமியாக, ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இந்த மாதிரி காலையில் நெய் டீயை குடிப்பதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் வருகிறதாம். 

இதையும் படிங்க:  தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஸ்பெஷல் டீ குடிங்க... எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கும்!!

35
Ghee Coffee And Ghee Tea In Tamil

Ghee Coffee And Ghee Tea In Tamil

நெய் டீ நன்மைகள் (Ghee Tea benifits): 

காலையில் நெய் கலந்த டீயை குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த டீ நல்ல தேர்வாக இருக்கும்.  காயங்கள் விரைவில் குணமாக, சருமம் பளபளப்பாக இந்த டீ குடிப்பது உதவுகிறது. இந்த டீ வெறும் தேநீராக மட்டுமில்லாமல் நல்ல கொழுப்பு, வைட்டமின், உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் கால வலியை குறைக்கும். சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளை சரிசெய்யும்.  

செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் (Butyrate) குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. நெய்யில் இருக்கும் பியூட்ரிக் அமிலம், ட்ரைகிளிசரைடுகள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும். எலும்பு, தசை ஆகியவற்றுக்கு இயற்கை உயவுப்பொருள் போல நெய் செயல்படுமாம். பிளாக் டீயில் உள்ள பாலிபினால் அழற்சி எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது.  

45
Ghee Coffee And Ghee Tea In Tamil

Ghee Coffee And Ghee Tea In Tamil

நெய் காபி (Ghee Coffee): 

பால் கலக்காத கடுங்காபியில்  ஒரு ஸ்பூன் நெய் கலந்து தயாரிப்பதே நெய் காபி. இதை காலையில் குடிப்பதால் சுறுசுறுப்பு, மன நிறைவாக ஏற்படும். நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு காபியில் உள்ள காஃபின் (Caffeine) உறிந்து உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். 

நெய் காபி நன்மைகள்:

நெய்யில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) காஃபினுடன் கலக்கும்போது விழிப்புணர்வு, தெளிவு, மனதை ஒருமுகப்படுத்தக் கூடிய ஆற்றல் கிடைக்கும். இதனால் கவனம் சிதறடிக்கப்படாது. நெய்யில் காணப்படும் பியூட்ரிக் அமிலம் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். நெய்யில் உள்ள நல்ல கொழுப்பு திருப்தியான உணர்வை அளிக்கும் என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். 

55
Ghee Coffee And Ghee Tea In Tamil

Ghee Coffee And Ghee Tea In Tamil

நெய் காபி vs நெய் டீ: 

நெய் கலந்த காப்பி அல்லது டீயை அருந்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளை பொறுத்து அமைகிறது. காலையில் நெய் காபி அருந்தினால், அதிலுள்ள காஃபின் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் கிடைக்கும். கவனச்சிதறல் இல்லாமல் ஒருமுகமாக செயல்பட உதவும்.  வயிறு நிரம்பிய உணர்வால் எடைய குறைக்கவும் உதவும்.

நெய் கலந்த டீயை குடிப்பதால்  செரிமானம் மேம்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இது உடலை ஈரப்பதமாக வைக்க உதவுவதால் பளபளப்பான சருமம் கிடைக்கும்.  நீங்கள் எந்த பலனை பெற விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு நெய் கலந்த டீ அல்லது காபியை அருந்துங்கள்.

இதையும் படிங்க:  காபி குடிப்பது நல்லது தான்... ஆனால் அதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(5.5 ov)41/2
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(75.4 ov)227/5
INDIND
-
Day 1 - Session 3
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(29.0 ov) 98 & 95/3
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Recommended image2
Saree Maintaining Tips: புடவை ஆயுசுக்கும் புதுசா இருக்கும்... பெண்களுக்கே தெரியாத 10 புடவை ரகசியங்கள்!
Recommended image3
கண்ணாடிக்கு மாற்றாக லேசிக் சிகிச்சை.! யாருக்கு ஏற்றது, என்னென்ன பரிசோதனைகள் தேவை?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved