Onam Sadhya Feast: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஓணம் சத்யா விருந்து..? இதில் 26 வகையான உணவுகள் இடம்பெறுமா..?
Onam Sadhya Feast: ஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் உணவுகளும், அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Onam Sadhya Feast:
கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி, நாளை செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகையில் மிக முக்கிய தினம் தான் ஓணம் சத்யா ஆகும். இந்த நாள் விருந்து படைக்கும் நாளாகும். மன்னன் மகாபலியை வரவேற்கும் அடையாளமாக மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு தடவி, திருவிழாவின் கடைசி நாளான திருவோணம். ஓண சத்யா எனப்படும் ஓணம் விருந்து குடும்பங்களால் தயாரிக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரப்பட்டு தங்கள் குடும்பத்தினருடன் உண்டு மகிழ்கிறார்கள்.
Onam Sadhya Feast:
இந்த ஓணம் சத்யாவில் 12 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படும். மேலும், சிலர் 26 அல்லது அதற்கும் மேற்பட்ட உணவு வகைகளையும் கூட சமைத்து விருந்தளிப்பர். விருந்தின் சிறப்பம்சமே, வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது தான். அதாவது, இந்த சிறப்பு நாளில், சத்து நிறைந்த ஆகாரத்தின் மூலம் உடலுக்கு ஊட்டமளிப்பது தான் முக்கியத்துவம்.இதனால், சீரான செரிமானம் முதல் இரத்த ஓட்டம் மேம்படும்.
Onam Sadhya Feast:
ஓணம் சத்யா விருந்தின் போது, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைத்திடும். எனவே இந்நேரத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓணம் சத்யா விருந்தில் என்னென்ன உணவு வகைகள் இடம் பெற்றிருக்கும் எனவே இந்நேரத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓணம் சத்யா விருந்தில் என்னென்ன உணவு வகைகள் இடம் பெற்றிருக்கும் மற்றும் எவ்வாறு செய்யப்படுகிறது? என்று நாமும் தெரிந்துக்கொள்வோம்.
Onam Sadhya Feast:
ஓணம் ஸ்பெஷல் உணவுகள்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். இதில் ஸ்பெஷல் உணவுகளின் தொகுப்பு பற்றி பார்ப்போம்.
onam sadya
அப்பளம்:
ஓணம் சத்யா விருந்தில் மற்ற எந்தவிதமான அப்பளங்களும் இல்லாமல் அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் அப்பளம் தான் இடம் பெறும். இவை இல்லாமல் இந்த விருந்து நிறைவு பெறாது என்று தான் கூற வேண்டும்.
அப்பேரி:
இந்த விருந்தில் அனைவருக்கும் விருப்பமான வாழைக்காய் சிப்ஸ் வழங்கப்படும். மற்ற 25 உணவுகளுக்கு முன்னதாக விருந்தின் போது கொடுக்கப்படுகிறது.
onam sadhya
ஷர்கரா வரட்டி:
வெல்லம், இஞ்சி, ஏலக்காய் மற்றும் வாழைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும்.
பருப்பு கறி:
பருப்பு, மஞ்சள் மற்றும் தேங்காயால் தயாரிக்கப்படும் இந்த உணவு மிகவும் எளிமையாக சமைக்கப்படுகிறது.
onam sadhya
இதேபோன்று ஓணம் சத்யா விருந்தில், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய் கறி, நாரங்கா கறி, பச்சடி, அவியல், ஓலன், ரசம், மோர், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய், சாம்பார், கிச்சடி, ரசம், கூட்டுக்கறி, நெய், இஞ்சி தயிர், பூவன் பழம் போன்ற விதவிதமான உணவு வகைகள் இடம் பெற்று இந்த திருவோணத்தினை சிறப்பிக்கும்.