MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Onam Festival 2022: ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமா..? அதன் வியக்கவைக்கும் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

Onam Festival 2022: ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமா..? அதன் வியக்கவைக்கும் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

Onam Festival 2022: கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம்  பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி, நாளை செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

2 Min read
Anija Kannan
Published : Aug 29 2022, 01:22 PM IST| Updated : Sep 07 2022, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Onam Festival 2022:

Onam Festival 2022:

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு விதமான பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நம்முடைய தமிழகத்தில், பொங்கல், தீபாவளி, சித்திரை திருவிழா, ஜல்லிக்கட்டு போன்றவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

அந்த வகையில், கேரளாவை பொறுத்தவரை ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சாதி, மாத பேதம் இன்றி மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த நாளில், புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். அதன்படி, கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம்  பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி, நாளை செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

  மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

27
Onam Festival 2022:

Onam Festival 2022:

ஓணம் சத்யா விருந்து:

இந்நாளில் உடலுக்கு ஆரோக்கியத்தினைத் தரக்கூடிய பராம்பரியமான  26 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து வாழை இலையில் சாப்பிடுவது வழக்கம். இத்தகைய மாபெரும் விருந்தில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகள் அடங்கிய டை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் பரிமாறப்படும். 

  மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

37
Onam Festival 2022:

Onam Festival 2022:

ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

இத்திருநாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டிருக்கும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.

 

47
Onam Festival 2022:

Onam Festival 2022:

ஓணம் பண்டிகையின் வரலாறு:

கேரளத்தை  முன்னர்  செல்வ செழிப்போடு மகாபலி என்ற  மாமன்னர்  ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது வேற்று ரூபத்தில் வந்து திருமால் மூன்றடி மண் கேட்டார்..அப்போது,  திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே பலியாக கொடுத்தான் மகாபலி. உடனே திருமால் மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, நான் ஆண்டு தோறும் என் மக்களை வந்து பார்த்து அவர்கள் எப்படி செழிப்பாக இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என பார்க்க இந்த பூலோகம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டார்.

57
Onam Festival 2022:

Onam Festival 2022:

திருமால் அளித்த அந்த வரத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் மகாபலியின் வருகையை நினைவுபடுத்தும் ஒரு திருவிழாவாகவே ஓனம் திருவிழா பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.  இது கலாச்சார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க...Sukran Peyarchi 2022: இன்னும் 48 மணி நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கட்டாயம் பூரண பலன் உறுதி

67
Onam Festival 2022:

Onam Festival 2022:

ஓணம் பண்டிகை கேரளாவிற்கு மட்டுமா..?

கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் கொண்டாடப்படும்.  

77
Onam Festival 2022:

Onam Festival 2022:

இந்த நாளில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், பூக்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
கேரளா
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Manathakkali Keerai Soup : பல நோய்க்கும் ஒரு மருந்து 'மணத்தக்காளி' கீரை சூப்! ஈஸியான ரெசிபி இதோ
Recommended image2
World AIDS Day 2025 : உஷாரோ.. உஷாரு..! சாதாரணமாக தெரியும் 'எய்ட்ஸின்' ஆரம்ப அறிகுறிகள்.. அலட்சியம் வேண்டாம்
Recommended image3
Walking Tips : எடை குறைய வாக்கிங் போறீங்களா? மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஒரு கிராம் குறையாது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved