MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chicken Vs Mutton: அசைவ பிரியர்களே அலர்ட்! மழைக்காலத்தில் சிக்கன் VS மட்டன்.. எது பெஸ்ட் சாய்ஸ்?

Chicken Vs Mutton: அசைவ பிரியர்களே அலர்ட்! மழைக்காலத்தில் சிக்கன் VS மட்டன்.. எது பெஸ்ட் சாய்ஸ்?

Monsoon: மழைக்காலத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கும். இந்த சீசனில் சிக்கன் மற்றும் மட்டனில் எது நமக்குச் சிறந்தது, எதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 11 2026, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மழைக்காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா?
Image Credit : Asianet News

மழைக்காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா?

மழைக்காலத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கும். ஏனெனில், மழைக்காலத்தில் நோய்த்தொற்று அபாயம் அதிகமாக இருப்பதால், நமது செரிமான மண்டலம் சற்று பலவீனமாக இருக்கும். எனவே, இந்த சீசனில் சிக்கன் மற்றும் மட்டனில் எது நமக்குச் சிறந்தது, எதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எது பெஸ்ட்?
Image Credit : Getty

எது பெஸ்ட்?

சிக்கன், மட்டன் இரண்டுமே புரதம் (Protein) நிறைந்தது. ஆனால், ஊட்டச்சத்து, கொழுப்பு, ஜீரணம், கலோரிகள் சில விஷயங்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மழைக்காலத்துக்கு எது நல்லது பார்ப்பதற்கு முன்னதாக இரண்டிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

Related Articles

Related image1
Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
Related image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
36
சிக்கன்
Image Credit : Getty

சிக்கன்

குறைந்த கொழுப்பும், அதிக புரதமும் (Protein) கொண்ட உணவை விரும்புபவர்களுக்கு 'ஸ்கின்லெஸ் சிக்கன்' மிகச்சிறந்த தேர்வாகும். தசை வளர்ச்சிக்குத் தேவையான தரமான புரதச்சத்தை இது வழங்குகிறது. மட்டனுடன் ஒப்பிடும்போது சிக்கன் மிக எளிதாகவும், விரைவாகவும் செரிமானமடையும். கலோரிகளும் இதில் குறைவு. சிக்கனில் உள்ள ஜிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மழைக்கால சளி, இருமலில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எனவே, எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஏற்றது.

Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!

46
மட்டன்
Image Credit : Getty

மட்டன்

மட்டன் உடலுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அசைவ உணவாகும். இதில் புரதம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன. சிக்கனை விட மட்டனில் கொழுப்பும், கலோரிகளும் அதிகம். இதனால் இது ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். சிலருக்கு வயிறு உப்பசம் அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் மட்டனை அளவோடு சாப்பிடுவது நல்லது.

56
மழைக்காலத்தில் எது சிறந்தது?
Image Credit : Getty

மழைக்காலத்தில் எது சிறந்தது?

சிக்கன், மட்டன் என்று யோசிப்பதை விட, நீங்கள் சாப்பிடும் கறி சுத்தமாக, ஃப்ரெஷ்ஷாகவும், நன்றாக வெந்து இருக்கின்றதா என்பதை பார்ப்பது தான் ரொம்ப முக்கியம். ஏனென்றால் சரியாக வேகாத கறியில் பாக்டீரியா தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளதால், நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியைச் சூடாக மட்டுமே சாப்பிட வேண்டும். ஆகையால் நம்பிக்கையான கடைகளில் சுத்தமான கறியை வாங்க வேண்டும்.

66
சிக்கன் Vs மட்டன் எதில் புரோட்டீன் அதிகம்
Image Credit : chatgpt

சிக்கன் Vs மட்டன் எதில் புரோட்டீன் அதிகம்

சிக்கன், மட்டன் இரண்டுமே உடம்புக்குத் தேவையான புரோட்டீனை கொடுக்கிறது. ஆனால், கொழுப்பு கம்மியா, புரோட்டீன் அதிகமாக வேண்டும் என்றால் சிக்கன்தான் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அதேநேரம், உடம்புக்கு இரும்புச்சத்து, வைட்டமின் B12 தேவைப்பட்டால் மட்டனை அளவாக சாப்பிடுவதும் நல்லது தான்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆட்டுக்கறி குழம்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dangerous Hill Stations: ரொமான்டிக் மூட்ல இருக்கீங்களா? இந்த 5 இடத்துக்கு மட்டும் ஜோடியா போகாதீங்க, உயிருக்கே ஆபத்து!
Recommended image2
Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!
Related Stories
Recommended image1
Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved