கோழி, ஆடு போன்ற இறைச்சி வாங்குவதற்கும் பக்குவம் உள்ளது- தெரியுமா உங்களுக்கு?
இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் மாமிச உணவுகளை விரும்பி உண்பவர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளனர். நம்முடைய சங்க இலக்கியப் பாடல்களிலும், செய்யுள்களிலும் ஊண் கறி சோறு குறித்து எண்ணிலடங்கா கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய நவீன உலகில் அசைவ உணவுகள் தமிழ் நிலப்பரப்பு நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வறுமையில் வாடுபவர்களும் பணத்தில் செழிப்பவர்களும் அசைவம் சாப்பிடும் போது மகாராஜாவாக மாறிவிடுகின்றனர். அசைவ உணவுகளுக்கு பல்வேறு நேர்மறை அம்சங்கள் இருப்பது போன்று சில எதிர்மறைவு விளைவுகளும் உள்ளன. அதுகுறித்து அடுத்தடுத்து தெரிந்துகொள்ளலாம்.
நிறம், சுவை, தரம்
சிவப்பான இறைச்சி தான் சுவையாக இருக்கும் என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. ஆனால் புதிய இறைச்சி என்பது ஊதா நிறத்தில் இருக்கும். இறைச்சியின் நிறமிகள் பிராணவாயுவுடன் வினைபுரிந்து, சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. ஒருவேளை இறைச்சி பழுப்பு நிறமாக இருந்தால், சாப்பிடுவதற்கு மிகவும் பாதுகாப்பானது என்று பொருள். கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக்கு இது பொருந்தும். ஆனால் பன்றியின் இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மணம்
இறைச்சியை சாப்பிட விரும்புவோர், அது வேகவைக்காமல் இருக்கும் போது வரும் மணத்தை விரும்புவது கிடையாது. இதனால் பலருக்கும் புதியதாக அறுப்பட்ட இறைச்சி மற்றும் பழைய இறைச்சிக்கான மணம் எப்படியிருக்கும் என்பது தெரிவதில்லை. இதனால் இறைச்சியின் தரத்தை தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் கடையில் என்ன கிடைக்கிறதோ, அதுகுறித்து எதுவும் தெரியாமல் உண்ணும் நிலை ஏற்படுகிறது. இதனால் இறைச்சியின் தரத்தை தீர்மானிக்க மணம் சிறந்த வழியாகும். ஏதேனும் அழுகிய வாசனை அல்லது புழுக்கள் சதைப்பகுதியில் இருந்து வந்தால், அந்த இறைச்சியை சமைக்க வேண்டாம்.
துண்டத்தில் இருக்கும் கண்டம்
புதியதாக வெட்டப்பட்ட இறைச்சிகள் எளிதாக துண்டுபடும். ஒரே சீராகவும் வெட்ட முடியும் எளிதாகவும் ஒடிக்க முடியும். ஆனால் பழைய கறி என்றிருந்தால், அதை அவ்வளவு எளிதில் வெட்ட முடியாது. குறிப்பாக மூட்டு எலும்புகள், கால் எலும்புகள் அவ்வளவு சீக்கரம் வெட்டுப்படாது. இதை கோழி வாங்கும் போது கூர்ந்து கவனிக்கவும். பழைய கோழிக் கறி என்றால் அவ்வளவு சீக்கரம் வெட்டுப்படாது. ஒவ்வொரு முறையும் கோழி இறைச்சியை, இரண்டொரு முறைக்கு மேல் கடைக்காரர் வெட்டினால் உஷாராகி விடுங்கள்.
பெண்கள் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!!
பேக்கேஜ் வாங்குவோர் கவனத்துக்கு
இன்றைய காலத்தில் கடைக்கு சென்று நேரடியாக இறைச்சி வாங்க வேண்டும் என்பது கிடையாது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடும். அவ்வாறு பேக்கேஜுக்குள் வரும் இறைச்சியை கவனமாக கையாள வேண்டும். பாக்கெட்டுக்குள் அழுக்கு இருப்பது தெரிந்தாலோ, பேக்கேஜ் சேதமடைந்திருப்பது தெரிந்தால், உடனடியாக ரிட்டர்ன் செய்துவிடுங்கள்.
இரும்பு சத்தை அதிகரிக்கும்..சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி? நாக்கில் எச்சில் ஊற வைக்கும் டேஸ்ட் ..