MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Madurai Mutton Pepper Fry மதுரை மட்டன் மிளகு வறுவல்...மணமணக்கும் கிராமத்து ரெசிபி செய்முறை

Madurai Mutton Pepper Fry மதுரை மட்டன் மிளகு வறுவல்...மணமணக்கும் கிராமத்து ரெசிபி செய்முறை

மதுரை பாரம்பரிய உணவுகளில் அசைவத்திற்கு தான் எப்போதும் முதலிடம். அதிலும் மட்டன் அயிட்டங்கள் அனைத்துமே எதை சாப்பிடுவது, எதை விடுவது என தெரியாமல் திண்டாட வைத்து விடும். அப்படி பலருக்கும் மிகவும் மட்டன் உணவுகளில் ஒன்று தான் மதுரை மட்டன் மிளகு வறுவல்.

2 Min read
Author : Priya Velan
Published : Sep 01 2026, 09:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மதுரை மட்டன் மிளகு வறுவல்
Image Credit : Getty

மதுரை மட்டன் மிளகு வறுவல்

மதுரையின் தனித்துவமான சமையல் கலைக்கு சான்றாக விளங்குவது இந்த மட்டன் மிளகு வறுவல். செட்டிநாடு மற்றும் மதுரை வட்டார கிராமிய மணத்துடன் அசைவ பிரியர்களை சுண்டி இழுத்து, நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த உணவு, காரசார விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். கடைகளில் வாங்கும் மசாலா பொடிகளை சேர்க்காமல், வீட்டிலேயே ஃபிரஷாக வறுத்து அரைத்த புதிய மசாலா வைத்து செய்யப்படும் இந்த மட்டன் மிளகு வறுவலை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தேவையான பொருட்கள்:
Image Credit : Getty

தேவையான பொருட்கள்:

இந்த பிரத்யேக வறுவலுக்கு அரை கிலோ இள ஆட்டுக்கறி (நெஞ்செலும்பு மற்றும் கறி கலந்தது),

200 கிராம் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,

5 மேஜைக்கரண்டி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்,

2 மேஜைக்கரண்டி புதிதாக அரைத்த இஞ்சி பூண்டு விழுது,

1 சிறிய பொடியாக நறுக்கிய தக்காளி,

3 கொத்து புதிய கறிவேப்பிலை,

அரைக் தேக்கரண்டி மஞ்சள் தூள்,

தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

36
பிரத்யேக மதுரை மிளகு மசாலா பொடி:
Image Credit : Getty

பிரத்யேக மதுரை மிளகு மசாலா பொடி:

கடைகளில் வாங்கும் மசாலா பொடிகளைத் தவிர்த்து, வீட்டிலேயே பிரத்யேகமாக மசாலா தயாரிப்பது தான் இந்த உணவின் முதன்மை ரகசியம். வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல், மிதமான தீயில் 2 1/2 மேஜைக்கரண்டி கருப்பு மிளகு, 1 மேஜைக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி சோம்பு, 1 மேஜைக்கரண்டி வரகொத்தமல்லி (தனியா), 2 சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய் மற்றும் நிறத்திற்காக 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

46
செய்முறை விளக்கம்:
Image Credit : Getty

செய்முறை விளக்கம்:

முதலில் கழுவி சுத்தம் செய்த மட்டனுடன் மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 முதல் 6 விசில் வரை மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிப்பு முறை:

அடுத்து, அடிகனமான இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தொடர்ந்து தக்காளியைச் சேர்த்து சுருள வதக்க வேண்டும்.

56
தண்ணீரின் அளவு :
Image Credit : Getty

தண்ணீரின் அளவு :

தக்காளி நன்கு மை போல் வதங்கியதும், வேகவைத்த மட்டனை அதன் சாற்றுடன் (Stock) சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து தண்ணீரை வற்ற விட வேண்டும். தண்ணீர் முக்கால் பாகம் வற்றியவுடன், தயாரித்து வைத்துள்ள மிளகு மசாலா பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். மசாலா கறியுடன் ஒன்றிணைந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் சுருள வறுக்க வேண்டும். வறுவல் அடர் கறுப்பு-பழுப்பு நிறத்திற்கு வந்ததும், மீதமுள்ள கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மதுரை மட்டன் மிளகு வறுவல் தயார்.

66
சுவையை இரட்டிப்பாக்கும் ரகசிய டிப்ஸ்:
Image Credit : Getty

சுவையை இரட்டிப்பாக்கும் ரகசிய டிப்ஸ்:

வறுவலை இரும்பு கடாயில் செய்யும் போது கறிக்கு அந்த பிரத்யேக அடர் நிறமும், பாரம்பரிய சுவையும் கிடைக்கும். அதிக தக்காளி சேர்த்தால் வறுவல் தொக்கு போலாகிவிடும் என்பதால் ஒரு சிறிய தக்காளி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், மட்டன் வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் வறுவலிலேயே வற்ற வைப்பதுதான் கறியின் முழுச் சாறையும் மசாலாவில் இறக்கி சுவையை அதிகரிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆட்டுக்கறி குழம்பு
ஆட்டுக்கறி குழம்பு செய்முறை
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Thakkali Thokku: உடனே செய்யும் தஞ்சாவூர் தக்காளி தொக்கு.! ஒரு வருஷத்துக்கு கெட்டுப்போகாது.! யாருக்கும் தெரியாத அப்பத்தா சீக்ரெட்!
Related Stories
Recommended image1
Mutton Curry: வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்? அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.! சரியான அளவை தெரிஞ்சிக்கோங்க.!
Recommended image2
mutton kurma : ஓட்டல் ஸ்டைல் மட்டன் குருமா- இப்படி செய்தால் வீடே மணக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved