Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்..பாலகிருஷ்ணன் போல் வேடமிட்டு உங்கள் குழந்தையை எப்படி அலங்கரிப்பது..?
Krishna jayanthi dress 2022: கிருஷ்ண ஜெயந்தி நாளில், உங்கள் வீட்டு செல்ல குழந்தைக்கு பாலகிருஷ்ணன் போல் வேடமிட்டு, மகிழ்வது ஏன் அவசியம் தெரியுமா..? இந்த பதிவில் பார்க்கலாம்.
Krishna Jayanthi 2022:
கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடும், கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆவணி 3, அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இந்துக்களால், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
Krishna Jayanthi 2022:
இந்த நாளில் வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு, அந்த கிருஷ்ணரே வீட்டிற்கு வந்ததாக நினைத்து வழிபடுகின்றனர். அதோடு குழந்தைகளின் கால்களை வாசலில் தொடங்கி வீட்டின் பூஜையறை வரை நடக்க வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நல்ல சிந்தனையும் வளரும் என்றும் கருதப்படுகிறது.
Krishna Jayanthi 2022:
அதோடு அன்றைய நாளில் குழந்தை இல்லாதோர் வீட்டில் குழந்தை பிறக்க வேண்டி கிருஷ்ணர் சிலைகள் வாங்கி பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தேன்குழல், இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்கிறார்கள். இதனால், அடுத்த வருட கிருஷ்ண ஜெயந்திக்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
Krishna Jayanthi 2022:
இவ்விழாக் கொண்டாட்டத்தின் போது விரதமுறை பின்பற்றப்படுகிறது. காலையில் குளித்து விட்டு கிருஷ்ணர் சிலைக்கு முல்லை, மல்லிகை, துளசி கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. விளக்கு ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
Krishna Jayanthi 2022:
அவரது புகழ் பாடும் பகவத் கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. குழந்தைக்கு, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தப்படுகிறது.
Krishna Jayanthi 2022:
கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் விளையாடும் போது கோபியர் வீடுகளில் வெண்ணை திருடி தின்பது வழக்கம். சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில், வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெய் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள்.