Health Tips: இஞ்சி சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு நன்மைகள் உண்டா..? அடடே..! இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?
Health Tips: இஞ்சி சாப்பிடுவது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால், வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Health Tips
பொதுவாக ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படும் மசாலா பொருட்களில் இஞ்சிக்கு முக்கிய பங்கு உண்டு. இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பி இருப்பதால், இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, தினமும் உலர்ந்ததாகவோ, பொடியாகவோ அல்லது எண்ணெய் அல்லது சாறாகவோஉள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இஞ்சியை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Health Tips
நோய் எதிர்ப்பு சக்தி :
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய உணவு பொருளாக உள்ளது. அதுமட்டுமின்று, மன அழுத்தத்தை குறைக்கிறது, எனவே, இனி கண்டிப்பாக தினமும் நீங்க அருந்தும் தேநீரில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள்.
Health Tips
இஞ்சி குமட்டலுக்கு நல்லது:
சிலருக்கு நீண்ட தூரம் பயணம் வாந்தி அல்லது குமட்டல் பிரச்சனையை ஏற்படுத்தும். அவர்கள் இஞ்சி சர்க்கரை சேர்த்த இஞ்சிமரப்பாவை வாங்கி வாயில் போட்டு கொண்டால் வாந்தியோ , குமட்டலோ வராது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது:
அஜீரணத்தின் மோசமான விளைவுகளால் அவதிப்படுபவர்கள் அல்லது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு குமட்டல் இருந்தால் சிறிதி எலுமிச்சம்பழ சாறில் இஞ்சியை சேர்த்து குடித்தால் குமட்டலை குணப்படுத்தும்.
Health Tips
இஞ்சி டீ:
இஞ்சியை நாம் தினமும் குடிக்கும் டீயில் கொதிக்க வைத்து குடித்தாலும் அதன் நன்மைகளை பெற முடியும். ஆம், குறிப்பாக தலைவலி, சளி , மாதவிடாய் சமயத்தில் கூட இஞ்சி டீ குடிப்பது பலன் தரும் என்கின்றனர்.
எடை இழப்புக்கு உதவும்:
இஞ்சி எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், மசாலா உடல் நிறை குறியீட்டெண் மற்றும் இரத்த இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது. செரிமான அமைப்பை அதிகரிக்கவும் இஞ்சி உதவுகிறது. இது ஆரோக்கியமாக இருக்கவும், ஃபிட்டாக இருக்கவும் உதவுகிறது.
Health Tips
கீல்வாதத்தை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது:
கீல்வாதம் என்பது ஒரு பொதுவான மற்றும் வலிமிகுந்த நிலையாகும். இதனால், பாதிக்கப்பட்டவர்கள், இஞ்சி டீயை வழக்கமாக உட்கொள்வதால், மருந்து உட்கொள்ளும் அபாயம் குறைவதாகக் கூறியுள்ளனர்.
இஞ்சி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது:
இதய ஆரோக்கியத்திற்கு மோசமான கெட்ட கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது.
Health Tips
வீக்கத்தை சரி செய்ய வல்லது:
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு மருந்தாக இருக்கிறது. ஆம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், மூட்டு வழியால் அவதி பட்டு வந்தால் அவர்களுக்கு கட்டாயம் இஞ்சி சேர்த்த தேநீர் போட்டு கொடுங்கள்.
சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு:
ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பால் அவதி படுபவர்களுக்கு தண்ணீரில் இஞ்சி மற்றும் பனைகல்கண்டு சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, கொடுத்தால் விரைவில் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.