Vastu Tips:வாரத்தில் ஒருமுறை கல் உப்பு பரிகாரம் இப்படி செய்தால் போதும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும்
Vastu Tips: வீட்டில் கடன் தொல்லைகள் நீக்கி, லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்க செய்யக்கூடிய இந்த உப்பு பரிகாரம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது.
Vastu Tips
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளையும் கடன் தொல்லைகளையும் நீக்கி, பண வரவை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த உப்பு பரிகாரம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது. மற்ற எல்லா விஷயத்திலும் இருப்பதே போதும் என்று நினைக்க வேண்டும். ஆனால் பணத்தை ஈட்டுவதில், அதுவும் சுயமாக ஈட்டுவதில் இருப்பதே போதும் என்று நினைக்காமல் உடலில் தெம்பு இருக்கும் பொழுதே மேலும் மேலும் பணத்தை ஈட்ட வேண்டும் என்று ஆசை கொண்டால், அந்த மகாலட்சுமியே உங்களுக்கு வருவாய் கொடுக்கக்கூடிய அத்தனை வழிகளையும் காட்டுவாளாம்.
Vastu Tips
இதற்காக கல் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்குங்கள். இது மகாலட்சுமியின் இருப்பிடமாக இருக்கிறது. முதலில் உப்பு பரிகாரம் செய்ய ஒரு சிறு கிண்ணத்தில் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டின் நீர் படாத ஏதோ ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும். செல்வம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.
Vastu Tips
வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும். அதே போல பணவரவையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் இந்த கல் உப்பையும் வீட்டு வாசலில் வைப்பார்கள். முதலில் இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுமையாக கல் உப்பை நிரப்பி தட்டி வையுங்கள். வீட்டு வாசலில் திருஷ்டிக்காக இதை வைக்க வேண்டும். வீட்டு வாசலில் பொதுவாக ஒரு ஓரமாக ஒரு கிண்ணத்தில் உப்பு நிறைய போட்டு வைத்தால் கண் திருஷ்டிகள் எதுவும் உள்ளே நுழையாது என்று கூறுவார்கள்.
Vastu Tips
தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள். ஆம், இந்த முறையிலும் நீங்கள் உப்பு வைப்பதால் குடும்பத்தில் வறுமையை மட்டும் அல்லாமல் சண்டை, சச்சரவுகளும் நீங்குவதாக குறிப்பிடப்படுகிறது.