Krishna Jayanthi 2022: கிருஷ்ண ஜெயந்தி 2022: நேரம், தேதி, பூஜை செய்ய சரியான நேரம் என்ன.? முழு விவரம் உள்ளே..!
Krishna Jayanthi 2022: உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடுகிறார்கள்.
Krishna Jayanthi 2022:
தமிழ் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் அவதரித்தார் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆவணி 3, ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
Krishna Jayanthi 2022:
கிருஷ்ணர் வழிபாட்டு முறைகள்..?
இந்த தினத்தில் காலை எழுந்து குளித்து விட்டு, கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் உள்ளிட்ட பலகாரங்களை செய்ய வேண்டும். ஏனெனில்,கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் விளையாடும் போது கோபியர் வீடுகளில் வெண்ணை திருடி தின்பது வழக்கம். அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெய் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள். அதுமட்டுமின்று, இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து உண்ணா விரதமிருந்து அவரது புகழ் பாடும் பக்தி பாடல்களை பாடி வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.
Krishna Jayanthi 2022:
பூஜை செய்ய நேரம், தேதி எப்போது..?
தீராத விளையாட்டுப்பிள்ளையான பகவான் கிருஷ்ணன். பல்வேறு குறும்புத்தனம் செய்து அசத்தியவர். பகவான் கண்ணனின் அவதாரமே அரக்கர்களை வதம் செய்வதற்காகவும் அதர்மத்தையும் அழித்து தர்மத்தை காக்கவும் நிகழ்ந்தது. கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 19ம் தேதி நள்ளிரவு 1.48 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 20 நள்ளிரவு 2.47 மணி வரை கடைப்பிடிக்கப்படும்.
பூஜைக்கு காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை நல்ல நேரம் ஆகும். குறிப்பாக பூஜை செய்ய அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை செய்வது வழக்கம்.
Krishna Jayanthi 2022:
கிருஷ்ணன் சந்தித்த இன்னல்கள்:
இதிகாசமாக ஸ்ரீ ராமரின் அவதாரத்தை ராமாயணமாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தையும், தர்மத்தை நிலைநாட்டக்கூடிய மகாபாரதம் என கொண்டாடப்படுகிறது. கண்ணன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு இன்னல்கள் மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறார். ஆம், தேவகியின் கர்ப்பத்தில் ஜனிக்கும் முன்பே அவரது தாய் மாமன் கம்சன் அவனை கொல்ல துடித்து கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் சிறையில் பிறந்த கண்ணன் தாயை பிரிந்து கோகுலத்தில் அனைவரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து பல அற்புதங்கள், லீலைகளை நிகழ்த்தினார். இறுதியில், கம்சனை அழித்து வெற்றி கொண்டார்.