MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pressure Cooker Hack: லூசான குக்கர் ரப்பர் 2 நிமிடத்தில் டைட் ஆகணுமா? இதை மட்டும் செய்யுங்க!

Pressure Cooker Hack: லூசான குக்கர் ரப்பர் 2 நிமிடத்தில் டைட் ஆகணுமா? இதை மட்டும் செய்யுங்க!

உங்க பிரஷர் குக்கர் கேஸ்கெட் அடிக்கடி லூசாகி, விசில் வர மாட்டேங்குதா? புதுசு வாங்க காசை செலவு பண்றதுக்கு முன்னாடி, இந்த ஈஸி டிப்ஸை ட்ரை பண்ணுங்க. சில நிமிஷத்துல லூசான ரப்பர் டைட் ஆகிடும்!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 19 2026, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எல்லார் வீட்டுலயும் இதே கதைதான்!
Image Credit : AI Image

எல்லார் வீட்டுலயும் இதே கதைதான்!

காலை டிபன், நைட் டின்னர்னு எதுவா இருந்தாலும், பருப்பு, சாதம் வேக வைக்க குக்கர் இல்லாம நம்ம வேலை நடக்காது. ஆனா, நல்லா பசிக்கும்போது இல்ல வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கும்போது குக்கர் மூடியில இருந்து காத்து லீக் ஆனா எப்படி இருக்கும்? குக்கர் ரப்பர் (கேஸ்கெட்) லூசாகுறது ஒரு பொதுவான பிரச்சனை. இதனால குக்கர்ல விசிலும் வராது, சாப்பாடும் சீக்கிரம் வேகாது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரப்பர் கட் ஆகி இருந்தா என்ன பண்றது?
Image Credit : AI Image

ரப்பர் கட் ஆகி இருந்தா என்ன பண்றது?

உங்க கிச்சன்லயும் இதே நிலைமைனா, உடனே கடைக்கு ஓடிப் போய் புது ரப்பர் வாங்க காசு செலவு பண்ண வேண்டாம். நம்ம கிச்சன்லேயே சில ஹேக்ஸ் இருக்கு. அது லூசான ரப்பரை சில நிமிஷத்துல புதுசு மாதிரி டைட் ஆக்கிடும். ஆனா ஒண்ணு, ரப்பர் எங்கயாவது கட் ஆகி இருந்தாலோ இல்ல முழுசா வீணா போயிருந்தாலோ, கண்டிப்பா மாத்திடுங்க. லூசான ரப்பரை டைட் ஆக்கறதுக்கான ஈஸி டிப்ஸ் இதோ.

Related Articles

Related image1
Kitchen Plants: மணி பிளாண்ட் முதல் ரோஸ்மேரி வரை! உங்கள் கிச்சன் கவுண்டரை அலங்கரிக்கப் போகும் 6 சூப்பர் செடிகள்!
Related image2
Kitchen Tips: பருப்பில் வண்டு வராம இருக்கணுமா? ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? இந்த ட்ரிக் மட்டும் யூஸ் பண்ணுங்க.!
37
ஐஸ் வாட்டர் டிரிக் (Ice Water Trick)
Image Credit : AI Image

ஐஸ் வாட்டர் டிரிக் (Ice Water Trick)

குக்கர் ரப்பரை நாம திரும்பத் திரும்ப பயன்படுத்தும்போது, சூடான ஆவி பட்டு அது விரிஞ்சு, அதோட பிடியை இழந்துடும். அதை பழைய நிலைக்கு கொண்டு வர இது ஒரு வேகமான வழி.செய்முறை: குக்கர் மூடியில இருந்து ரப்பரை கழட்டுங்க. ஒரு பெரிய பாத்திரத்துல ஜில்லுனு தண்ணி ஊத்தி, அதுல நிறைய ஐஸ் கியூப் போடுங்க. இந்த ஐஸ் தண்ணியில ரப்பரை 10-15 நிமிஷம் ஊற வைங்க. குளிர்ச்சி காரணமா ரப்பர் சுருங்கி, மறுபடியும் டைட் ஆகிடும்.
47
ஃப்ரீசர் ஹேக் (Deep Freeze Method)
Image Credit : AI Image

ஃப்ரீசர் ஹேக் (Deep Freeze Method)

உங்க வீட்ல அந்த நேரத்துல ஐஸ் இல்லைனா, உங்க ஃப்ரிட்ஜ் இந்த வேலையை இன்னும் ஈஸியா முடிச்சிடும்.செய்முறை: லூசான ரப்பரை கழட்டி, சாதாரண தண்ணியில கழுவுங்க. அப்புறம் இதை ஒரு 20-30 நிமிஷம் ஃப்ரீசர்ல வைங்க. ஃப்ரீசரோட அதிகப்படியான குளிர், ரப்பரோட நெகிழ்வுத்தன்மையை (Elasticity) குறைச்சு, அதை இறுக்கமாக்கிடும். ஃப்ரீசர்ல இருந்து எடுத்த உடனே மூடியில மாட்டுனா, குக்கர் உடனே விசில் அடிக்க ஆரம்பிக்கும்.
57
சப்பாத்தி மாவு (Dough Seal Hack)
Image Credit : AI Image

சப்பாத்தி மாவு (Dough Seal Hack)

ஒருவேளை நீங்க ரொம்ப அவசரமா சமைக்கும்போது, ஃப்ரிட்ஜ்லயோ ஐஸ் தண்ணியிலயோ 20 நிமிஷம் வெக்க நேரமில்லைனா, இந்த நம்ம ஊரு ஐடியா சூப்பரா கை கொடுக்கும்.செய்முறை: கொஞ்சம் பிசைஞ்ச சப்பாத்தி மாவை எடுத்துக்கோங்க. குக்கர் மூடியில எந்த இடத்துல காத்து லீக் ஆகுதோ, அந்த இடத்துல வெளிப்பக்கமா மாவை மெல்லிசா ஒரு லேயர் மாதிரி ஒட்டிவிடுங்க. இந்த மாவு ஒரு சீல் மாதிரி வேலை செஞ்சு, காத்து வெளியே போகாம தடுக்கும். இதனால சாப்பாடு சீக்கிரம் வெந்துடும். ஆனா, இப்படி செய்யும்போது விசில் வர்ற ஓட்டை சுத்தமா இருக்கணும், இல்லைனா குக்கர் வெடிக்கிற அபாயம் இருக்கு.
67
சமையல் எண்ணெய்(Oil Lubrication)
Image Credit : AI Image

சமையல் எண்ணெய்(Oil Lubrication)

சில சமயம் ரப்பர் ரொம்ப காய்ஞ்சு போயிருக்கிறதால (Dry), மூடியோட ஓரங்கள்ல சரியா கிரிப் கிடைக்காது. இதனால ஓரங்கள்ல இருந்து லேசா ஆவி லீக் ஆக ஆரம்பிக்கும்.செய்முறை: ரப்பரை கழுவி காய வைங்க. இப்போ உங்க விரல்ல கொஞ்சம் சமையல் எண்ணெய் இல்லனா நெய் எடுத்து, அதை ரப்பரோட எல்லா பக்கமும் நல்லா தடவுங்க. எண்ணெயோட பிசுபிசுப்பு தன்மை, ரப்பரை மூடியோட ஓரங்கள்ல நல்லா ஒட்ட வைக்கும். இதனால காத்து லீக் ஆகுறது நின்னுடும்.
77
குக்கர் ரப்பர் நீண்ட நாள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?
Image Credit : AI Image

குக்கர் ரப்பர் நீண்ட நாள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?

குக்கர் ரப்பர் நீண்ட நாள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?வாரத்துக்கு ஒருமுறை ஃப்ரீஸ் பண்ணுங்க: உங்க குக்கர் அதிகமா பயன்பாட்டுல இருந்தா, வாரத்துக்கு ஒருமுறை அதோட ரப்பரை ராத்திரி முழுக்க சாதாரண ஃப்ரிட்ஜ்ல வைங்க. இதனால அதோட எலாஸ்டிசிட்டி (விரிவடையும் தன்மை) ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கும்.மூடியை தலைகீழா வைங்க: சமைச்சு முடிச்சதும் குக்கரை கழுவி காய வைக்கும்போது, மூடியை நேரா குக்கர் மேல மூடாதீங்க. மூடியை எப்பவும் தலைகீழா வைங்க. இதனால ரப்பர் மேல தொடர்ந்து அழுத்தம் விழாது.அதனால, அடுத்த முறை குக்கர் ரப்பர் கை கொடுக்கும்போது, புது கேஸ்கெட் வாங்குறதுக்கு முன்னாடி இந்த வீட்டு டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. உங்க நேரமும் மிச்சமாகும், பணமும் மிச்சமாகும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Irregular Periods: மாதவிடாய் தாமதமா? பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 7 காரணங்கள்!
Recommended image2
Raindrop Facts: மழைத்துளியின் உண்மையான வடிவம் என்ன? நாம நினைச்ச எல்லாமே தப்பு! நிஜ வடிவம் இதுதான்!
Recommended image3
உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!
Related Stories
Recommended image1
Kitchen Plants: மணி பிளாண்ட் முதல் ரோஸ்மேரி வரை! உங்கள் கிச்சன் கவுண்டரை அலங்கரிக்கப் போகும் 6 சூப்பர் செடிகள்!
Recommended image2
Kitchen Tips: பருப்பில் வண்டு வராம இருக்கணுமா? ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? இந்த ட்ரிக் மட்டும் யூஸ் பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved