- Home
- Lifestyle
- Monsoon Travel: இந்த ஜூலை மாதத்தில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 5 டாப் சுற்றுலாத் தலங்கள்!
Monsoon Travel: இந்த ஜூலை மாதத்தில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 5 டாப் சுற்றுலாத் தலங்கள்!
July Travel: சிலுசிலுவென பெய்யும் மழையில், பச்சை பசேல் புல்வெளிகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மேகம் சூழ்ந்த மலைப்பாதைகள் என இந்தியாவின் சில இடங்கள் இந்த ஜூலையில் அப்படியே சொர்க்கம் போல இருக்கும்.

ஜூலையில் இந்தியாவில் பார்க்க வேண்டிய 5 அற்புதமான இடங்கள்
கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சுற்றுலா செல்ல ஆசை வந்துவிடும். சிலுசிலுவென பெய்யும் மழையில், பச்சை பசேல் புல்வெளிகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மேகம் சூழ்ந்த மலைப்பாதைகள் என இந்தியாவின் சில இடங்கள் இந்த ஜூலையில் அப்படியே சொர்க்கம் போல இருக்கும். உங்கள் மன அழுத்தத்தை மறந்து, இயற்கையோடு ஒன்றிணைய இந்த ஜூலை மாதத்தில் நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய 5 டாப் இடங்கள் பற்றி பார்க்கலாம்.
மூணார், கேரளா (Munnar)
கேரளாவை ஏன் 'கடவுளின் தேசம்' என்று அழைக்கிறார்கள் என்பதற்கு மூணாரே சாட்சி. ஜூலை மாத மழையில் இதன் அழகு இரட்டிப்பாகும். பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மீது பனிமூட்டமும் மழையும் ஒன்றாகச் சூழும்போது அந்த அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த சீசனில் அட்டுக்கல், லக்கம் போன்ற அருவிகள் முழு வேகத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும். கையில் ஒரு கப் சூடான மூணார் டீயுடன், மேகங்கள் உரசிச் செல்லும் மலைகளை ரசிப்பது தனி சுகம்.
வேலி ஆஃப் ஃபிளவர்ஸ், உத்தரகாண்ட் (Valley of Flowers)
பூக்கள் பூங்காவில் மட்டும்தான் அழகாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஒருமுறை உத்தரகாண்டில் உள்ள இந்த 'பூக்களின் பள்ளத்தாக்குக்கு' சென்று வாருங்கள். ஜூலை மாதத்தில் இங்கே லட்சக்கணக்கான காட்டுப் பூக்கள் விதவிதமான வண்ணங்களில் பூத்துக் குலுங்கும். இந்த மலர்கள் மீது மழைத்துளிகள் விழும்போது, அந்தப் பள்ளத்தாக்கே நறுமணத்தால் நிறையும். ஒரு ஓவியர் தன் கேன்வாஸில் வண்ணங்களைக் கொட்டியது போன்ற இந்தத் தோற்றம், மலையேற்ற பிரியர்களுக்கு ஒரு லைஃப்-டைம் செட்டில்மென்ட் அனுபவம்.
லோனாவாலா, மகாராஷ்டிரா (Lonavala)
மும்பை மற்றும் புனே மக்களின் 'மான்சூன் ஃபர்ஸ்ட் லவ்' இந்த லோனாவாலாதான். ஜூலை மாத வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் அள்ளும். புஷி அணையின் பெருக்கெடுத்து ஓடும் நீரும், ராஜ்மாச்சி பாயின்ட்டின் பசுமையும் கண்களைக் குளிரவைக்கும். டைகர் பாயின்ட்டில் நின்றுகொண்டு, சுடச்சுட 'காந்தா பஜி' (வெங்காய பஜ்ஜி) மற்றும் சுட்ட சோளக் கருதைச் சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசிப்பது செம்ம ஃபீல்.
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
சிரபுஞ்சி, மேகாலயா (Cherrapunji)
நீங்கள் ஒரு தீவிர மழைப் பிரியர் என்றால், சிரபுஞ்சியை விட ஒரு சிறந்த இடம் இந்த உலகிலேயே இருக்க முடியாது. ஜூலையில் இங்குள்ள ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் தங்களின் முழு வடிவத்தைப் பெறும். உலகப் புகழ்பெற்ற 'லிவிங் ரூட் பிரிட்ஜ்' (உயிருள்ள வேர் பாலம்) இந்த மழைக் காலத்தில் இன்னும் மாயாஜாலமாகத் தோற்றமளிக்கும். வானத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் 'நோகலிகை' அருவியைப் பனிமூட்டத்திற்கு இடையே பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவத்தைத் தரும்.
குடகு / கூர்க், கர்நாடகா (Coorg)
'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் குடகு, அமைதியையும் இயற்கையையும் தேடுபவர்களுக்கான சொர்க்கம். ஜூலை மாத மழை, இங்கிருக்கும் காபி தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளை மேலும் அழகாக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை கம்பளம் விரித்தது போலக் காட்சியளிக்கும். இந்த சீசனில் 'அப்பே' (Abbey) மற்றும் 'இருப்பு' அருவிகளின் வேகம் பார்க்கவே அற்புதம். காபியின் நறுமணமும், மண் வாசனையும் கலந்த கூர்க்கின் காற்று உங்களை நிச்சயம் சுண்டி இழுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

