- Home
- Astrology
- Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!
Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!
Water Heater Rod Safety Tips: அதிக விலை கொடுத்து கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ வாங்க முடியாத நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஹீட்டர் ராடுகளைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை.

சூடு தண்ணீர்
நம் முன்னோர்கள் விறகடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்த காலம் போய், இன்று அவசர உலகத்தில் கேஸ் அடுப்பில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால், விர்ரென்று ஏறும் சிலிண்டர் விலையால், தினமும் கேஸில் தண்ணீர் வைத்தால் ஒரே வாரத்தில் சிலிண்டர் காலியாகிவிடும். இதற்கு பட்ஜெட் ஃபிரெண்ட்லி தீர்வாக வந்ததுதான் 'எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் ராடுகள்'. அதிக விலை கொடுத்து கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ வாங்க முடியாத நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஹீட்டர் ராடுகளைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை. கொஞ்சம் அசந்தாலும் அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும்.
தண்ணீர் அளவு முக்கியம்
பாத்ரூமிற்குள் நோ என்ட்ரி
வாட்டர் ஹீட்டர் ராடை ஒருபோதும் குளியலறையிலோ அல்லது ஈரப்பதம் உள்ள இடங்களிலோ வைத்துப் பயன்படுத்தக் கூடாது. பாத்ரூம் எப்போதும் ஈரமாக இருக்கும் என்பதால், சுவிட்ச் போடும்போதோ அல்லது எடுக்கும்போதோ மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தண்ணீர் அளவு முக்கியம்
ஹீட்டர் ராடைத் தண்ணீரில் போடும்போது, அதன் மெட்டல் கம்பிப் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் ராடு பழுதடைவதோடு, விபத்துக்கும் வழிவகுக்கும்.
Mutton Vs Sheep: மட்டன் பிரியர்களே? ஆடு Vs செம்மறி ஆட்டிறைச்சியில் எது பெஸ்ட்?
உடனே ராடை வெளியே எடுக்கக் கூடாது
விரலை விட்டுப் பார்க்காதீங்க
தண்ணீர் சூடாகிவிட்டதா என்று பார்ப்பதற்காக, சுவிட்ச் ஆன்-இல் இருக்கும்போதோ அல்லது ஆஃப் செய்த உடனையோ தண்ணீருக்குள் விரலை விட்டுப் பார்க்கக் கூடாது. இது மிக ஆபத்தானது, உடனடியாக மின்சாரம் தாக்கக்கூடும்.
உடனே ராடை வெளியே எடுக்கக் கூடாது
தண்ணீர் சூடானதும் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு, குறைந்தது 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ராடில் உள்ள வெப்பம் முழுமையாகக் குறைந்த பிறகுதான் அதைத் தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் வாலிகளைத் தவிர்ப்பது நல்லது
பிளாஸ்டிக் வாளிகளில் ஹீட்டர் ராடைத் தொங்கவிட்டுப் பயன்படுத்தக் கூடாது. ஹீட்டரின் அதிகப்படியான வெப்பத்தால் பிளாஸ்டிக் உருகி, வாளி வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயம் அதிகம்.
இரும்பு வாலியும் வேண்டாம்
அதேபோல், இரும்பு வாளிகளையும் தவிர்க்க வேண்டும். இரும்பு எளிதில் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், எதிர்பாராதவிதமாக ஷாக் அடிக்கலாம். இதற்குப் பதிலாக எஃகு , அலுமினியம் அல்லது பிரத்யேக வாட்டர் ஹீட்டர் ஸ்டாண்ட் கொண்ட உலோகப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

