MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pillow Hygiene: அடிக்கடி சளி, இருமலா? நீங்க தூங்குற 'பழைய தலையணை' காரணமா? டாக்டர்ஸ் வார்னிங்!

Pillow Hygiene: அடிக்கடி சளி, இருமலா? நீங்க தூங்குற 'பழைய தலையணை' காரணமா? டாக்டர்ஸ் வார்னிங்!

Pillow Hygiene: நாம் பயன்படுத்தும் பழைய தலையணைகளூம், நீண்ட நாட்களாக துவைக்காமல் பயன்படுத்தும் தலையணைகளும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணமாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? என செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jul 02 2026, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பழைய தலையணையால் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி
Image Credit : Getty

பழைய தலையணையால் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் துவைப்பதில் காட்டும் ஆர்வத்தை, தலையணையை சுத்தம் செய்வதில் காட்டுவதில்லை. ஆனால், நாம் அலட்சியமாக நினைக்கும் அந்தப் பழைய தலையணைதான் நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் (Immune System) குறைத்து, பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாக்டீரியாக்களின் கூடாரமாகும் தலையணை
Image Credit : Getty

பாக்டீரியாக்களின் கூடாரமாகும் தலையணை

பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் தரங் கிருஷ்ணா அவர்களின் கூற்றுப்படி, தலையணைகளில் நாம் அறியாமலேயே சேரும் தூசு, இறந்த சரும செல்கள் மற்றும் வியர்வை போன்றவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் (Fungi) வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. 

தினமும் 6 முதல் 8 மணி நேரம் நாம் தூங்கும்போது, இந்தத் தூசுகளையும் கிருமிகளையும் தொடர்ந்து சுவாசிக்கிறோம். இது உடலுக்குள் மெல்ல மெல்ல இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக, அடிக்கடி சளி, இருமல் மற்றும் ஒவ்வாமை (Allergy) போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Related Articles

Related image1
Hand Wash: சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா? வறுமையை விலை கொடுத்து வாங்குறீங்க! முழு விவரம்!
Related image2
ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
34
முகப்பரு முதல் சுவாசப் பிரச்சனைகள் வரை...
Image Credit : Getty

முகப்பரு முதல் சுவாசப் பிரச்சனைகள் வரை...

சுத்தமில்லாத தலையணையைப் பயன்படுத்துவதால் பல்வேறு முக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சருமப் பாதிப்புகள்: தலையணையில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப் பசையும் முகத்தில் படுவதால் கடுமையான முகப்பருக்கள் (Acne) மற்றும் சரும அலர்ஜிகள் தோன்றும்.

சுவாசக் கோளாறுகள்: ஆஸ்துமா, சைனஸ் போன்ற நீண்டகால சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்குப் பழைய தலையணைகள் பாதிப்பை இருமடங்காக்கும்.

44
தலையணையை எப்போது மாற்ற வேண்டும்?
Image Credit : Getty

தலையணையை எப்போது மாற்ற வேண்டும்?

கிருமிகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மருத்துவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

6 மாத விதிமுறை: ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தலையணைகளை மாற்றிவிட்டுப் புதிய தலையணைகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

உறைகளை மாற்றுங்கள்: தலையணை உறைகளை (Pillow Covers) வாரத்திற்கு இரண்டு முறையாவது கட்டாயம் துவைத்து மாற்ற வேண்டும்.

இயற்கை கிருமிநாசினி: வாரம் ஒருமுறை தலையணையை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் தலையணையில் இருக்கும் பாக்டீரியாக்களை இயற்கையாகவே அழித்துவிடும். 

சுத்தமான படுக்கை அறை என்பது நல்ல தூக்கத்திற்கு மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாகும். எனவே, உங்களது பழைய தலையணைகளை உடனே மாற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியைக் காத்திடுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Burner Cleaning: கேஸ் சிலிண்டர் கூடுதலாக 15 நாட்கள் வர வேண்டுமா? அப்போ மாதம் ஒருமுறை இந்த சுத்தம் செய்யுங்க!
Recommended image2
Evil Eye: பக்கத்துவீட்டு கண்ணு எப்பொழுதும் உங்க வீட்டு மேலயே இருக்கா..? இதை செய்ங்க திருஷ்டியே படாது
Recommended image3
Monsoon Travel: இந்த ஜூலை மாதத்தில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 5 டாப் சுற்றுலாத் தலங்கள்!
Related Stories
Recommended image1
Hand Wash: சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா? வறுமையை விலை கொடுத்து வாங்குறீங்க! முழு விவரம்!
Recommended image2
ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved