MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Hand Wash: சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா? வறுமையை விலை கொடுத்து வாங்குறீங்க! முழு விவரம்!

Hand Wash: சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா? வறுமையை விலை கொடுத்து வாங்குறீங்க! முழு விவரம்!

Hand Wash: நம்ம கலாச்சாரத்துல உணவு ஒரு தெய்வம். உணவை அன்னபூரணி தேவியின் வடிவமா பார்க்கிறோம். நம்மில் பலர் சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவி வறுமையை விலை கொடுத்து வாங்குவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
| Updated : Jun 30 2026, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா?
Image Credit : AI

சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா?

இந்து மத சாஸ்திரத்தில் உணவை பரபிரம்ம சொரூபமாக கருதுகிறார்கள். அதேபோல, உணவை அன்னபூரணி மற்றும் லட்சுமி தேவியின் அம்சமாகவும் வழிபடுகிறார்கள். வீட்டில் உணவை எவ்வளவு மதிக்கிறோமோ, அந்த அளவுக்கு செல்வம் பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், நம்மில் பலருக்கு சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவும் பழக்கம் இருக்கிறது. இது நல்லதல்ல என்றும், இது நிதி சிக்கல்களை வரவழைக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உண்வுப்பற்றாக்குறையை உண்டாக்கும்
Image Credit : Getty

உண்வுப்பற்றாக்குறையை உண்டாக்கும்

வாஸ்து சாஸ்திரம் மட்டுமல்ல, ஜோதிட சாஸ்திரமும் சாப்பிட்ட தட்டில் கை கழுவுவதை ஒரு அபசகுனமாகவே பார்க்கிறது. தட்டில் தண்ணீரை ஊற்றும்போது, மீதமுள்ள உணவு அசுத்தமாகிறது. இது லட்சுமி தேவியின் கோபத்தை வரவழைக்கும் என நம்பப்படுகிறது. கை கழுவ, தனியாக ஒரு பாத்திரத்தை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது எழுந்து சென்று வெளியே கை கழுவுங்கள். மேலும், மீதமான உணவை நேரடியாக குப்பைத் தொட்டியில் கொட்டுவதும் உணவை அவமதிக்கும் செயலாகும். மீதமான உணவை ஏழைகளுக்கோ அல்லது விலங்குகளுக்கோ கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதை வீணாக்குவது வீட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

34
அழுக்கான தட்டில் சாப்பிட்டால் தோஷம்
Image Credit : Getty

அழுக்கான தட்டில் சாப்பிட்டால் தோஷம்

நிறைய பேர் சாப்பிடும்போது போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, அல்லது போனில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், சாப்பாட்டின் மீது கவனம் இருக்காது. இப்படி கவனச்சிதறலுடன் சாப்பிடுவதும் உணவை அவமதிப்பதற்கு சமம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, வீட்டில் அமைதியின்மையையும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

சாப்பிடும்போது அமைதியாக, நன்றியுணர்வுடன் உணவை மகிழ்ச்சியாக ஏற்க வேண்டும். மேலும், அழுக்கான, கழுவாத பாத்திரங்களில் சாப்பிடுவதும் வாஸ்து தோஷங்களை அதிகரித்து, வீட்டில் எதிர்மறை ஆற்றலை பெருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

44
சாப்பிட்ட தட்டை உடனே சுத்தம் செய்ய‌ வேண்டும்
Image Credit : Getty

சாப்பிட்ட தட்டை உடனே சுத்தம் செய்ய‌ வேண்டும்

சாப்பிட்டு முடித்ததும், பலர் அந்த தட்டை அப்படியே வைத்துவிடுகிறார்கள். ஆனால், அது மிகவும் தவறு. சாப்பிட்ட தட்டை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். தட்டில் உணவை மிச்சம் வைப்பதும் நல்லதல்ல. இது வீட்டில் நிதி சிக்கல்களுக்கும், சண்டைகளுக்கும் வழிவகுக்கும். உணவை தினமும் பிரசாதமாக நினைத்து சாப்பிட வேண்டும். நீங்கள் உணவை எவ்வளவு மதிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shukraditya Yoga: அலப்பறை கிளப்புறோம்.. சுக்கிராதித்ய யோகத்தால் பலன் பெறும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Guru Ketu Conjunction: குரு கேது சேர்க்கை தரப்போகும் கர்ம பலன்! பழைய பிரச்சினைகளுக்கு முடிவு காணப்போகும் ராசிகள் யார்?
Recommended image3
Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!
Related Stories
Recommended image1
Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image2
குரு அஸ்தமனம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் இனி ராஜயோகம்! பணமழை பொழியப்போகுது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved