MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு அஸ்தமனம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் இனி ராஜயோகம்! பணமழை பொழியப்போகுது!

குரு அஸ்தமனம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் இனி ராஜயோகம்! பணமழை பொழியப்போகுது!

Guru Asthanam 2026: குரு அஸ்தமனம் 2026 காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கை கூடி வந்துள்ளது, பணமழை பொழிய போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 30 2026, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குரு அஸ்தமனம் 2026
Image Credit : AI

குரு அஸ்தமனம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவது போல, அவ்வப்போது அஸ்தமனம் மற்றும் உதய நிலைகளையும் அடைவார்கள். இந்த கிரக நிலைகளின் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். அந்த வகையில் நவகிரகங்களில் ‘சுப கிரகம்’ என்றும், தேவர்களின் குரு என்றும் போற்றப்படும் குரு பகவான், தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.

இந்நிலையில், வரும் ஜூலை 14 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இதே நிலையில் நீடிக்கவுள்ளார். குரு பகவான் சூரியனுக்கு மிக அருகில் வரும்போது தனது பலத்தை இழந்து அஸ்தமன நிலையை அடைவார். இந்த குரு அஸ்தமன காலம் சில ராசிகளுக்கு சவாலாக இருந்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக மாபெரும் வளர்ச்சியையும் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : Pixabay

மேஷம்

மேஷ ராசியின் 4-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் இந்த ராசியினருக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய புதிய டீல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக்கிடந்த பணம் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகி, அதிர்ஷ்டத்தின் துணையோடு தொட்ட காரியங்கள் யாவும் வெற்றியாகும்.

Related Articles

Related image1
Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Related image2
சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! தொட்டதெல்லாம் தங்கமாகும்!
34
கடகம்
Image Credit : Pixabay

கடகம்

கடக ராசியின் முதல் வீடான லக்ன வீட்டிலேயே குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நினைத்ததை விட சிறப்பான நற்பலன்களைப் பெறுவார்கள். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால், தேர்வுகளில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். உங்களின் தன்னம்பிக்கை பலமடங்கு உயரும். இலக்குகளை நோக்கி சரியாக பயணித்தால், நல்ல பண வரவோடு உழைப்பிற்கான முழு பலனையும் அறுவடை செய்யலாம்.

44
தனுசு
Image Credit : Pixabay

தனுசு

தனுசு ராசியின் 8-வது வீட்டில் குரு அஸ்தமனம் நிகழ்கிறது. இது இந்த ராசியினரின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது. நீண்ட நாட்களாக வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பும் நற்பெயரும் உயரும். அதேபோல், குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் உங்களுக்கான மரியாதைக் கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவோடு, இழுபறியாக இருந்த பழைய வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும். நிதி நிலைமையும் முன்பை விட பலமடங்கு வலுவடையும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Zodiac Power : சவால்களை தவிடுபொடியாக்கும் 3 ராசிகள்! இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது!
Recommended image2
Astrology: கேந்திர திரிகோண யோகத்தால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! சொந்த வீடு, வாகனயோகம், பதவி உயர்வு கட்டாயம்.!
Recommended image3
Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Related Stories
Recommended image1
Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image2
சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! தொட்டதெல்லாம் தங்கமாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved