MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Astrology: ஜூலையில் சனியின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்! சோதனை காலம்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Shani Retrograde July 2026: ஜூலை மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியால் 3 ராசிகள் சனி பகவானின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும். எந்தெந்த ராசிகளுக்கு சோதனை காலம்? என்பது குறித்தும் பரிகாரங்கள் குறித்தும் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 30 2026, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சனி வக்ர பெயர்ச்சி 2026
Image Credit : AI

சனி வக்ர பெயர்ச்சி 2026

2026 ஜூலை மாதம் ஜோதிட ரீதியாக பெரும் திருப்பங்கள் நிறைந்த மாதமாக அமையப் போகிறது. இந்த மாதத்தில் நிகழவிருக்கும் குரு பகவானின் அஸ்தமனம் மற்றும் சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி ஆகியவை ஜோதிட உலகில் மிக முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. இந்த கிரக மாற்றங்களால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமும், சிலருக்கு சவாலான சூழல்களும் உருவாகலாம். ஜூலை 4 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைவதுடன் இந்த மாதத்தின் கிரகப் பெயர்ச்சிகள் ஆரம்பமாகின்றன. அதனைத் தொடர்ந்து ஜூலை 7-ல் புதனின் இடமாற்றமும் நிகழ்கிறது.

இவற்றுக்கு மத்தியில், ஜூலை 15-ல் நிகழும் குரு அஸ்தமனம் மற்றும் ஜூலை 27-ல் மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் (பின்னோக்கி) நகரத் தொடங்குவதுமே மிக முக்கியமான திருப்பங்களாகும். பொதுவாக குரு அஸ்தமன காலத்தில் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்களைத் தவிர்ப்பது வழக்கம். இந்த விசேஷ கிரக நிலைகளால் ஜூலை மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் சற்று விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிம்மம் (Leo)
Image Credit : AI Generated

சிம்மம் (Leo)

சனி பகவானின் வக்ர சஞ்சாரமானது சிம்ம ராசியினருக்கு மனரீதியான அழுத்தங்களையும், ஒருவித பதற்றத்தையும் கொடுக்கலாம். தம்பதியரிடையே வீண் விவாதங்கள் வரக்கூடும் என்பதால் பொறுமையும், விட்டுக்கொடுத்தலும் அவசியம். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப்போகலாம். பணியிடத்தில் சுமுகமான சூழல் இருந்தாலும், உங்களுக்குப் பின்னால் புதிய எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும்போது கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோருக்கோ அல்லது ஏழை எளியோருக்கோ உங்களால் முடிந்த அன்னதானம் அல்லது கருப்பு உளுந்து தானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.

34
தனுசு (Sagittarius)
Image Credit : Pixabay

தனுசு (Sagittarius)

தனகாரகனாகிய குரு பகவான் அஸ்தமனம் அடைவதால், தனுசு ராசியினருக்குப் பண வரவிலும், முக்கிய முயற்சிகளிலும் சில தடங்கல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம். தொழிலில் மந்த நிலை காணப்படுவதால், புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடனும், வெளிவட்டாரத்திலும் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எந்தவொரு சிறிய காரியத்தையும் சவால்களைச் சந்தித்தே முடிக்க வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்களின் போது உங்களது உடைமைகளிலும், வாகன ஓட்டத்திலும் கூடுதல் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அந்தணர்களுக்கோ அல்லது வயதானவர்களுக்கோ மஞ்சள் நிற ஆடைகள், கொண்டைக்கடலை அல்லது வாழைப்பழங்களைத் தானமாக வழங்கலாம்.

44
கும்பம் (Aquarius)
Image Credit : Google

கும்பம் (Aquarius)

கும்ப ராசியின் அதிபதியான சனி பகவானே வக்ரமடைவதால், இந்த ஜூலை மாதம் உங்களுக்குச் சற்று சோதனையான கால கட்டமாக இருக்கலாம். உங்களது சுயநம்பிக்கை சற்று குறைய வாய்ப்புள்ளது. உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம்; முறையான உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய தொழில் முதலீடுகளை இப்போதைக்குத் தள்ளி வைப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைக் தவிர்த்து, பட்ஜெட் போட்டுச் செலவு செய்யுங்கள்.

பரிகாரம்: தினமும் காலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு, வடித்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காகத்திற்கு உணவாக வைக்கவும். இது உங்கள் கர்ம வினைகளைக் குறைத்து தொழிலில் முன்னேற்றம் தரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Horoscope: இன்று யாருக்கு பணவரவு? யாருக்கு செலவு? 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்
Recommended image2
Astrology: மறுமண யோகம் யாருக்கு உண்டு? ஜோதிடம் கணிக்கும் 'அந்த' 4 ராசிகள்.. முழு லிஸ்ட்!
Recommended image3
Baba Vanga Prediction: பணம் குவியப் போகுது! செப்டம்பர் கடைசி வாரம் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்
Related Stories
Recommended image1
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved