- Home
- Lifestyle
- AC Safety Tips : மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!!
AC Safety Tips : மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!!
மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மழையின் போது ஏசி போடலாமா?
மழைக்காலம் வரப் போகிறது. இந்த சீசனில் நம் அனைவருக்கும் எழும் பொதுவான சந்தேகம் என்னவென்றால், இடி, மின்னல், மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்தலாமா?
ஆம், மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாம். ஆனால், மோசமான வானிலை அல்லது புயல் சமயத்தில் அவற்றை பயன்படுத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கும், சில சமயங்களில் ஏர் கண்டிஷனர் சேதமடையலாம் அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மின்தடைகள்
மழைக்காலத்தில் மின்னல்கள் மற்றும் மின்தடைகள் ஏற்படுவது பொதுவானது. எனவே இந்த சூழ்நிலையில் ஏசியை பயன்படுத்தும் போது ஒரு சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினால் ஏசி சேதமடைவதை தவிர்க்கலாம் மற்றும் எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாமலும் பாதுகாக்க முடியும்.
லேசான மழை :
கனமான மழையை காட்டிலும் லேசான மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்துவது பாதுகாப்பானது தான். இது ஏசியில் படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்கை அகற்ற உதவும். ஆனால் அடிக்கடி மின்தடைகள், மோசமான வானிலை மற்றும் வோல்டேஜில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏசியின் கம்ப்ரஸரில் அழுத்தமானது அளவுக்கு அதிகமாக ஏற்படும்.
கன மழை :
கன மழை பெய்யும் போது காற்றில் ஈரப்பதம் அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் ஈரப்பதத்தை அகற்றுவதற்கு ஏசியானது அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் ஏசி பயன்படுத்தும் போது மின் கட்டணம் அதிகமாகும். இது தவிர மழை பெய்யும் போது இடி, மின்னல் ஏற்படும்போது ஏசி மட்டுமல்ல பிற மின்சார உபகரணங்களும் சேதமடையும்.
ஏசியின் வடிகால் :
ஏசியன் அவுட்டோர் யூனிட்டை இன்ஸ்டால் செய்யும்போது சரியான வடிக்கால் அமைப்பு மிகவும் அவசியம். இல்லையென்றால் அவற்றுக்குள் தண்ணீர் தேங்கி விடும். மேலும் உட்புற வயரிங் சிஸ்டம் பாதிக்கப்படும்.
மாற்று வழி என்ன? :
மழையின்போது இயற்கை காற்று வீட்டிற்குள் வர ஏசிக்கு பதிலாக ஃபேன் அல்லது ஜன்னல்களை திறந்து வையுங்கள். இதனால் வீடு குளிர்ச்சியாக இருக்கும் அதே சமயம் மின்சார செலவும் கம்மியாகும்.
முக்கிய குறிப்பு : மழையின் போது ஏசி செய்தமடையாமல் இருக்கவும், ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் அழுக்கு குப்பை தண்ணீர் புகுவது தடுப்பதற்கு அதை மறைவான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் மழைக்குப் பிறகு அவுட்டோர் யூனிட்டில் அழுக்குகள், அடைப்புகள் அல்லது சேதம் ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பதை பார்வையிட வேண்டும்.