ஏசி போட்டால் சிலிங் ஃபேன் off பண்ணக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
வீட்டில் ஏசியை பயன்படுத்தும்போது கூடவே மின்விசிறியையும் போட்டால் பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் வெயிலால் இந்த கோடைகாலத்தில் குளுகுளுவென இருக்க பெரும்பாலானோர் ஏசியை தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் ஏசி பயன்படுத்தினால் மின்கட்டணம் அதிகமாக வரும் என்று பலர் பயப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஏசியை பயன்படுத்தும் போது கூடவே மின்விசிறியையும் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதற்கான முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏசி பயன்படுத்தும் போது சீலிங் ஃபேன் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. காற்றின் சுழற்சி அதிகரிக்கும் : ஏசியை பயன்படுத்தும் போது சீலிங் ஃபேனையும் பயன்படுத்தினால் அறை முழுவதும் காற்றின் சுழற்சி அதிகரிக்கும். இதனால் குளிர்ந்த காற்று அறை முழுவதும் வேகமாக பரவி, அறையின் வெப்பநிலையை வேகமாக குறைக்கும். இதனால் ஏசி மீதான அழுத்தம் குறையும்.
2. அதிகமான கூலிங் : சீலிங் ஃபேன் ஏசியின் குளிரட்டும் திறனை அதிகரிக்கும். அதாவது, ஏசி ஓடும்போது அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்று சீலிங் ஃபேன் மீது பட்டு நேரடியாக அறையில் இருப்பவர்கள் மீது படும். இதனால் குளிர்ச்சியை நீங்கள் நன்றாக உணர முடியும். அதுமட்டுமின்றி ஏசியின் தெர்மோஸ்டாட் ஆனது குறிப்பிட்ட குறிப்பிட்ட வெப்பநிலையை விரைவில் இழப்பது தடுக்கப்படும். இதன் விளைவாக உங்களுக்கு ஏசி யூனிட் ஆனது மிகவும் குறைவாகவே வேலை செய்யும்.
3. காற்றின் தரம் அதிகமாகும் : ஏசி போடும்போது மின்விசிறியை பயன்படுத்தினால் அறையில் எல்லா இடங்களிலும் காற்றை செல்லும். இதனால் அறையில் இருக்கும் தூசி, நாற்றங்கள் போன்றவை விரைவில் நீங்கும்.
4. ஏசியின் பணி சுமை குறைவு : ஏசி ஏங்கிக் கொண்டிருக்கும்போது ஃபேன் பயன்படுத்தினால் ஏசி யூனிட்டின் ஆயுட்காலம் நீட்டிக்கும், ஏசியின் பணி சுமை குறையும, ஏசியின் மோட்டார் போன்ற பிறபாகங்களின் தேய்மானம் குறையும். இது ஏசி பழுதடைவதை குறித்து குளிரூட்டும் அமைப்பின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும். இதனால் நாம் பணத்தை சேமிக்கலாம்.
5. ஆற்றல் சேமிக்கப்படும் : ஏசி மற்றும் ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது குறைந்த ஆற்றலே செலவாகும். இதனால் ஏசியின் ஒட்டுமொத்த அமைப்பின் சுமை கணிச்சமாக குறைந்து ஆற்றல் சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மின் கட்டணம் குறைவாகும்.