- Home
- Lifestyle
- Banana benefits: மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடலாமா..? கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Banana benefits: மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடலாமா..? கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Banana benefits: மழை நேரம் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக்கொள்ளும் எனப் பல வீடுகளில் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அதன் உண்மை தன்மை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Banana benefits:
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் ஒன்றாகும். வாழைப்பழம், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியவையாக உள்ளன. இருப்பினும், மழை நேரம் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக்கொள்ளும் எனப் பல வீடுகளில் சொல்லக் கேட்டிருப்போம். பிற நோய்கள் தாக்கக் கூடும் என்ற பொதுவான எச்சரிக்கை உணர்வு எல்லோர் மனதிலும் உள்ளது.
Banana benefits:
ஆனால், மழைக்கும் வாழைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆஸ்துமா இருப்பவர்கள் வாழையை தவிர்க்கலாம். எனவே, யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
உடல் நலம் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றால் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள், காலை உடற்பயிற்சி செய்யும் முன்பாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
Banana benefits:
செரிமான பிரச்சனை:
செரிமான பிரச்சனை இருந்தாலும் தவிர்க்கலாம். செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் இரவில் இதை சாப்பிடக் கூடாது. இதைத் தொடர்ந்து சளி பிடிக்கும். ஆகவே பகல் நேரத்தில் வேண்டுமானால் சாப்பிடவும். மேலும் படிக்க...தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்
Banana benefits:
பால் உடன் சேர்த்து சாப்பிட கூடாது:
பொதுவாகவே வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது உடலின் அக்னியை பாதித்து, செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும். எனவே எப்போதும் வாழைப்பழங்களை தனித்தனியாக சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.